பேரொளியாய் இலங்கும் பெருமானே ! நாயகமே !!!
1⃣ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضئ اللہ تعالی عنہ அறிவிக்கிறார்கள்:
.
நபிகள் நாயகம் (صلى الله عليه و آله وسلم) அவர்களுக்கு நிழல் இல்லை. சூரிய வெளிச்சத்தில் இருக்கும் போது நிழல் விழாது ஆனால் அவர்களின் பேரொளி (நூர்) சூரிய வெளிச்சத்தை கடந்து விடும்.
எரியும் விளக்குக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் போதும் நிழல் விழாது. அவர்களின் பளபளக்கும் ஒளி அந்த ஒளியின் பிரகாசத்தை மிஞ்சி விடும்.
(இமாம் இப்னு ஜௌஸி - கிதாபுல் வfபா)
2⃣உஸ்மான் இப்னு அஃப்பான் رضئ اللہ تعالی عنہ அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் صلى الله عليه و آله وسلم அன்னவர்களிடம் சொன்னதாக "அல்லாஹ் உங்களின் நிழலை பூமியில் விழ செய்யமாட்டான். எனவே எந்த மனிதனது பாதமும் தங்கள் நிழலை மிதிக்க முடியாது"
(இமாம் நஸபி رضئ اللہ تعالی عنہ - தப்ஸீர் மதாரிக்)
3⃣இப்னு ஸபா رضئ اللہ تعالی عن அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் صلى الله عليه و آله وسلم அன்னவர்களின் நிழல் பூமியில் விழாமல் இருப்பது அன்னவர்களின் தனி சிறப்பு தன்மைகளில் ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் ஒளியாக இருந்தார்கள். அவர்கள் சூரிய வெளிச்சத்தில் நடந்து செல்லும்போது அவர்களின் நிழலை பார்க்க முடியாது.
.
இமாம் ஜலாலுத்தீன் சுயுத்தி رضئ اللہ تعالی عنہ - கஸாயில் அல் குப்ரா.
4⃣ நபித் தோழர் ஸக்வான் رضئ اللہ تعالی عنہ அவர்கள் கூறுகிறார்கள்.
சூரிய வெளிச்சத்திலோ அல்லது சந்திர வெளிச்சத்திலோ நபிகள் நாயகம் صلى الله عليه و آله وسلم அன்னவர்களின் நிழலை காண முடியாது.
இமாம் ஹாகீம் திர்மிதி رضئ اللہ تعالی عنہ - நவாதிருள் உசூல்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம்மை போன்ற சாதாரண மனிதர், அவர்களுக்கு நிழல் உண்டு என்ற வஹாபிகளின் நச்சு கருத்தை சமுதாயத்தில் இருந்து துடைத்தெறிவோம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
.
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்
6. (அதே மக்கா வெற்றியின் போது) ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்
7. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா
8. இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள்.
நூல் - திர்மிதி
9. இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்
10. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள்.
அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் - தப்ரானி
இஸ்லாத்தின் அடையாளம் தொப்பி, தலைப்பாகை அணிதல்
1. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்கு கீழே இருக்கும் படி கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் - புகாரி 5083
இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.
2. அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து ‘இதனை நீ அணிந்து கொள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் - இஸ்ஸத் பின்த் இயாத் (ரழியல்ல்லாஹு அன்ஹு)
நூல் - முக்ஜமுல் கபீர் அத் தப்ரானி (2520))
3. அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.
அறிவிப்பவர் - சுலைமான் பின் தர்கான் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் - புகாரி 5082
4. (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி
5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்.
11. ருக்கானா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொன்னார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்.
நூல்: அபூதாவூது 4075, திர்மிதி 3919
12. ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை, தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் - ஹஸனுல் பஸரி (ரழியல்லாஹு அன்ஹு)
நூல் - புகாரி 1/151
13. தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார். தப்ரானி இமாம் அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமர் சுயூத்தி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள்.
நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112
14. அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நூல்: ஸஹீஹுல் புகாரி பாகம் 2 பக்கம் 863
15. ஹஜ்ரத் முல்லா அலி கரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.
நூல் - மிர்காத் அல் மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம் 246.
கருத்துரையிடுக