✴✴✴✴மதீனாவின் மாண்பு✴✴✴✴ ✴✴✴✴✴✴கட்டுரை :4✴✴✴✴✴✴
✴✴✴✴✴✴✴எழுத்து✴✴✴✴✴✴✴ ✴✴ரபீக் மிஸ்பாஹி ஹஜ்ரத்✴✴
(நபியுடைய மஸ்ஜித்) என்று அழைக்கப்படக்கூடிய மஸ்ஜிதின் சிறப்புகள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِيرَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ (مسلم
எனது வீட்டுக்கும், மிம்பருக்கும் மத்தியில் சுவர்கத்தின் பூங்காக்களில்நின்றும் ஒரு பூங்கா இருக்கிறது' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
{அப்துல்லாஹ் இப்னு ஸைதுல் மாஸினி (ரலியல்லாஹு அன்ஹு)
(ஆதாரம்: புஹாரி.}
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்றுபள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
மதீனாவாசிகளுக்கு தீங்கு செய்பவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் எச்சரித்த ஹதீஸ்
عن سَعْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّىاللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِأَحَدٌ إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ (بخاري
عن بن خلاد وكان من أصحاب النبي صلى الله عليه و سلم أن رسول الله صلىالله عليه و سلم قال : من أخاف أهل المدينة أخافه الله وعليه لعنة اللهوالملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل (نسائ
ஜியாரத்
எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ,
அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார்.
( தப்ரானீ)
நபி(ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எவர் என்னை ஜியாரத் செய்ய வருவாரோ, மேலும் அது அல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால் அவருக்காக சிபாரிசு செய்வேன்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முபாரக்கான சமூகத்தில் நின்று, அண்ணலார் அவர்களுக்குப் பணிவாக ஸலாம் கூற வேண்டும். மேலும், ஹழ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு)), ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் அண்ணலாரின் அருகிலேயே இருப்பதால் அவர்கள் இருவருக்கும் பணிவாக ஸலாம் கூறவேண்டும். ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறுவது விரும்பத்தக்கது.
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்;
நபி(ஸல்) அவர்களை எவ்விதம் நேசித்தீர்கள்? என வினவப்பட்டது. அதற்கு அவர்கள்,
‘நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு
எங்கள் பொருட்களை விடவும்;
எங்கள் பிள்ளைகள்,
எங்கள் பெற்றோர்களை விடவும் எங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தார்கள். மேலும் கடும் தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் அவர்கள் எங்களுக்கு மிகப் பிரியமானவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறினார்கள்.
ஹஜ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்
உஹதுப் போரில், ஹஜ்ரத் அபூதல்ஹா
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முன்னிலையில் எதிரிகளின் மீது அம்பு வீசிக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்களுக்கு முன்னால் இருந்தார்கள். அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் மீது அம்பு பாய்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அம்பு எய்வதில் திறமையானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பு எய்தினால் அவர்களின் அம்பு எங்கெங்கு சென்று விழுகிறது? என நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கள் பார்வையை உயர்த்திப் பார்ப்பார்கள். அதே போன்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கி அம்பு வந்தால், அதைத் தடுத்து நெஞ்சை உயர்த்தித் தாங்கிக் கொள்வார்கள்.
அப்பொழுது, ‘யாரஸுலல்லாஹ் ! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! தங்களின் மீது அம்பு படாமல், என் கழுத்து தங்களின் கழுத்துக்கு அருகிலேயே இருக்கும்’ என்று கூறிவிட்டு மேலும் ‘யாரஸுலல்லாஹ் ! நிச்சயமாக நான் பலசாலியாக உள்ளேன். தங்களுடையத் தேவைகளுக்கு என்னை அனுப்பி வையுங்கள். தாங்கள் நாடியதை எனக்கு ஏவுங்கள்’ என்று ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு)) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களைத் தங்களின் உயிரைவிட மேலாக நேசித்தார்கள்
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நாம் நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும். அவ்வாறு இல்லையானால், அவர் பரிபூரண மூஃமினாக மாட்டார். ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜி மதீனா சென்று நபி(ஸல்) அவர்களை உள்ளன்போடு ஜியாரத் செய்ய வேண்டும்
மக்காவில் உள்ள ஜன்னத்துல் முஅல்லா என்ற அடக்க ஸ்லத்திற்குச் சென்று ஸஹாபாக்களையும், தாபிஈன்களையும் ஜியாரத் செய்து கொள்ள வேண்டும். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரியத்திற்குரிய துணைவியார், அன்னை ஹழ்ரத் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும் இங்கேயே அடங்கப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மதீனாவின் மஸ்ஜிதுன்நபவி எதிரில் ஜன்னத்துல் பகீஃ என்ற அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியர்களும் அடங்கியுள்ளனர். இன்னும் ஸஹாபாக்களும் அங்கு தான் அடங்கியுள்ளனர். அங்கே நின்று அனைவருக்கும் ஸலாம் உரைத்து ஜியாரத் செய்து கொள்ள வேண்டும்.
யால்லாஹ்! எங்களுக்கு உன்னுடைய வீடாம் கஅபாவிற்கு சென்று தவாப் செய்யும் பாக்கியத்தையும்,நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ழா ஷரீபுக்கு முன் நின்று அஸ்ஸலாமு அலைக்க யா ரசூல்லாஹ் எனும் ஸலாம் சொல்லக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள் புரிவாயாக ஆமீன்.
By: மௌலவி அல்ஹாபிழ்:
ஜகரிய்யா யாஸீனிய்
0 கருத்துகள்