ஹயாதுன் நபி, ஹயாதுன் அவ்லியா
(உயிரோடு வாழும் நபிமார்கள், வலிமார்கள்)
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.
அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்
♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.
அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ரசூல்மார்களும் நபிமார்களும் தங்களின் கப்ர் அறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்.
ஜாமிஉஸ் ஸகீர் 3089
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ர் அருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதை பார்த்தேன்.
ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் 2 -268
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபியவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் 1 – 96
♣ வலீத் பின் அப்தில் மலிக்கின் ஆட்சி காலத்தில் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதை புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்ட போது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறி போய் அது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றி தெரிந்தவர்கள் யாருமில்லாதிருந்த சமயத்தில் நான், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாதமே இல்லை. மாறாக இது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதமாகும்" என்றேன்.
ஹழ்ரத் உர்வா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹீஹுல் புஹாரி 1390
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்களில் இறந்தவர்களுக்கு அழகான முறையில் கபன் அணிவியுங்கள். ஏனெனில் அவர்கள் அந்த கபன்களை வைத்து (தங்களுக்கிடையில்) பெருமை பாராட்டி கொள்கிறார்கள். மேலும் அவர்களில் ஒருவருக்கொருவர் தங்களின் கபுருகளில் சந்தித்துக் கொள்கிறார்கள்"
ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
அல்மிர்காத் பாகம் 4 பக்கம் 120 மிஷ்காத் பாபு ஙஸ்லில் மையித்தி வ தக்பீனிஹீ ஹ.எ 1636 ன் விளக்கவுரை, ஸுபுலுஸ் ஸலாம் பாகம் 2 பக்கம் 197 புலூஙுல் மராம் ஹ.எ 513க்குரிய விளக்கவுரை)
♣ ஹழ்ரத் கஃபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தபோது உம்மு பிஷ்ரு (ரலியல்லாஹு அன்ஹு) என்ற பெண்மணி (கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருகே இருந்து கொண்டு) அப்துர் ரஹ்மானின் தந்தை அவர்களே! (தாங்கள் மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட பின்) இன்ன ஆளை சந்தித்தால் குறிப்பாக அவருக்கு எனது ஸலாமைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
இப்னுமாஜா 1449, மிஷ்காத் 1631
♣ நான் ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சமூகத்திற்கு சென்றேன். அப்போது அவர்கள் மரணத் தறுவாயில் இருந்தார்கள். நான் அவர்களிடம், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு எனது ஸலாமைச் சொல்லி விடுங்கள் என்று கூறினேன்.
ஹழ்ரத் முஹம்மது இப்னுல் முன்கதிர் (ரலியல்லாஹு அன்ஹு)
மிஷ்காத் 1633, இப்னுமாஜா 1450
மைய்யித்திற்கு கேட்கும் சக்தி உண்டு
♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்.
ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1338, ஸஹிஹ் முஸ்லிம் 5115
♣ (பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், ‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக்
கேட்டார்கள்.’ இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும்,‘ அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’‘ எனக் கூறினார்கள்.
ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1370
மைய்யித்திற்கு பேசும் சக்தி உண்டு
♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.
ஹழ்ரத் அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1316
மைய்யித்திற்கு பார்க்கும் சக்தி உண்டு
♣ இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், என் தந்தையார் அவர்களையும், ஸியாரத் செய்வதற்காக செல்வேன். சாதாரணமாக உடை அணிந்த நிலையில். (மற்றவர்களிடம்) அங்கிருப்பது என் கணவரும் என் தந்தையும்தான் என்பேன். ஆனால், அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! என் ஆடைகளை நன்றாக அணிந்த வண்ணமே செல்வேன். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கப்பட்டதின் காரணமாக.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அஹ்மத் 24480
கருத்துரையிடுக