(எழுத்து: )
(ஷாஹா அர்ஷதா)
( பள்ளப்பட்டி.)
(கஸீததுல் புர்தா ஷரீபின்)
(சிறப்புத்தன்மைகள்)
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைப்பது ஈமானின் பர்ளாகும்.
அதில் சந்தேகம் கொண்டோர் முஃமினாக இருக்க முடியாது.
அகிலமே! உங்களுக்காக தான் படைக்கப்பட்டுள்ளது என அல்குர்ஆனில் அண்ணல் நபியின் புகழை புகழ்ந்து அல்லாஹ் கூறுவதிலிருந்து;
இன்று வரை அதை பின் பற்றி நாமும் புகழ்கின்றோம்.
நபி புகழ் மாலைகளில் உலகலாவிய
முஸ்லிம்களிடத்தில் புர்தா ஷரீப் பிரசித்தி பெற்றது.
சில கவிதைகளை படிக்கத்தான் முடியும். பாட முடியாது.
ஆனால் புர்தாஷரீப் அப்படியில்லை.
அல்லாஹ்; ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்பு வைத்து பாடுவதற்கு புர்தாஷரீப் காவியத்தை இமாம் பூசரி (ரஹ்மதுல்லாஹி) அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள்.
(புர்தாஷரீப் ஓதுவதின் மூலம்) (ஏற்படும் நன்மைகள்)
1: கஸீததுல் புர்தாவை 1001 முறை ஓதுகிறாறோ அவருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும்.
2: பிரச்சினைகள் தீர்வு பெற புர்தாஷரீப் 71 முறை ஓத வேண்டும்.
3: ஆபத்துகளில் இருந்து நல்வாழ்வு பெற 700 முறை புர்தாஷரீப் ஓத வேண்டும்.
4: ஆண் குழந்தை பிறக்க புர்தாஷரீப் 116 முறை ஓத வேண்டும்.
5: எல்லா கஷ்டங்களையும் சுழபமாக கையாள புர்தாஷரீப் 771 முறை ஓத வேண்டும்.
6: தினமும் புர்தாஷரீப் ஓதியவுடன் குழந்தைகள் மீது ஊதுவதினால்;
நீடித்த ஆயுளையும்; பாதுகாப்பையும் பெற முடியும்.
7: வியாழன் மாலை நேரத்தில்
17 முறை; 7 வாரங்கள் ஓதி வந்தால்;
நிறைந்த செல்வமும்; மற்றும் நாட்ட தேட்டங்கள் நிறைவேறும்.
8: குழந்தை பிறந்ததிருந்தால்; 9 முறை புர்தாஷரீப் ஓதி; கடல் நீரீல் ஊதி; அத்தண்ணீரீல் குளிக்க வைத்தால் எல்லா விதமான நோய்களிலிருந்தும்;
பருவ காலங்களான
(குளிர்; வெயில்) களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
9: 41 முறை 40 நாட்கள் புர்தாஷரீப் ஓதி வந்தால் கடுமையான இருப்பின் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
10: தினமும் புர்தாஷரீப் 7நாட்கள் தொடர்ந்து ஓதி; அதை
(ROSE WATER) ரோஜா தண்ணீரில் எவர் குடிக்கின்றாறோ அவருடைய நினைவாற்றல் அதிகரிக்கும்.
11: 1000 முறை புர்தா ஷரீப் ஓதீனால் கடன் தொல்லைகள் நீங்கும்.
12: பயணத்தில் இருக்கும் போது ஓதினால் அவர் எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பு பெறுவார்.
( குறிப்பு ; மேலே குறிப்பிட்ட)
(அனைத்தும் சர்தார் நபி மீது) (வைத்து; நம்பிக்கை வைத்து) (ஓதுபவருக்கு மட்டுமே நடக்கும்)
(போலிகளுக்கு ஏதும் நடக்காது)
(புர்தாஷரீப் ஓதுவதினால்)
(7 விஷயங்களில் இருந்து) (பாதுகாப்பு கிடைக்கும்)
1: பேய்; சைத்தான் களிடம் இருந்து பாதுகாப்பு.
2: கொள்ளை நோய்களில் இருந்து பாதுகாப்பு.
3: அம்மை நோய்களில் இருந்து பாதுகாப்பு.
4:.கண் நோய்களில் இருந்து பாதுகாப்பு.
5: திடீர் மரணத்திலிருந்து பாதுகாப்பு.
6: துர் அதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பு.
7: பைத்தியம் பிடித்ததிலிருந்து பாதுகாப்பு.
(புர்தாஷரீப் ஓதுவதினால் ஏற்படும்) (பலன்கள்)
1: அல்லாஹ்வின் உதவி கிடைக்கின்றது.
2: நல்ல ஆரோக்கியம்.
3: மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு.
4: செல்வ வளம்.
5: முத்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.
6: நீடித்த வாழ்கை.
7: ஏராளமான வாழ்வாதாரம்.
( நம்பிக்கை)
( கொண்டோருக்கு)
( என்றும் ஜெயமே!)
கருத்துரையிடுக