தறாவீஹ் தொழுகை பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும்
கலீபதுல் காதிரி மௌலவி பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – ) அவர்கள்
றமழான் காலத்தில் இரவில் தொழப்படும் விNஷட தொழுகைக்கு 'தறாவிஹ்' என்று பெயர் ஹிஜ்ரி 02ல் நோன்பு கடமையாக்கப்பட்டதிலிருந்து தறாவிஹ் தொழுகையும் விதியாக்கப்பட்டது. மூன்று இரவுகள் மட்டும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவித்தார்கள். தொடர்ந்து ஜமாத்தாக தொழுதால் இத் தொழுகை பர்ளாகிவிடும் என்று அஞ்சி தனித்து தொழுதார்கள்.
கலீபத்துல் றஸுல் ஹஸரத் அபூபக்கர் றலியல்லாஹு அன்ஹுவின் காலத்திலும் இத் தொழுகை தனியாகவே தொழப்பட்டு வந்துள்ளது. அமீறுல் முஃ;மினீன் ஹஸரத் உமர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் தராவிஹ் தொழுகை ஜமாத்தாக்கப்பட்டது.
தர்வீஹ் என்பதன் பன்மைச் சொல்லே தறாவிஹ் என்ற சொல்லாகும். தராவிஹ் என்றால் ஓய்வு எடுத்தல் என்று பொருளாகும். இத் தொழுகை கடமையானதிலிருந்து நான்கு றகா அத்துக்கள் தொழுத பின் நான்கு றகா அத்துக்கள் தொழும் நேர அளவு ஓய்வு எடுத்து ஸஹாபாக்கள் தொழுது வந்தார்கள். இத் தொழுகைக்கு ஓய்வு எடுத்துத் தொழுதல் (தறாவிஹ்) என்று பெயராயிற்று.
ஆதாரம் - புகாரி ஷரீப்
பக்கம் - 599 (இந்தியப் பதிப்பு)
சஹாபாக்கள் தறாவிஹ் தொழுகையை இருபது றக்காத்துக்களாக தொழுதுள்ளனர். என்பதற்கு பின்வரும் ஆதாரங்கள் சான்று பகர்கின்றன.
01. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் றமழானில் வித்ரை தவிர்த்து 20 றகா அத்;துக்கள் தொழுதார்கள்.
அறிவி;ப்பவர் - ஹஸரத் இ;ப்னு அப்பாஸ்
நூல்- முஸன்னத் இப்னு அபீஷைபா
பைஹகி கபிர்
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் இப்றாஹிம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பது ஹதீத் துறை அறிஞர்களின் கருத்தாகும். இதனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் என்று கூறி இதனை ஏற்க முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
ஹஸரத் இப்றாஹிம் இப்னு உதுமான் என்பவர் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் அளவிற்கு பலவீனமானவர் அல்ல என்பது ஹதீஸ் ஆய்வாளர்களின் கருத்தாகும். ஒரு பலவீனமான ஹதீஸ் ஆதார பூர்வமான சஹீஹான மற்றுமொறு ஹதீதுக்கு எதிரானதாக இருந்தால் பலவீனமான ஹதீதை ஆதாரமாகக் கொள்ள முடியாது
ஹஸரத் இப்னு ஷைபா றஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கும் மேற்படி ஹதீஸ் எந்த ஒரு சஹீஹான ஹதீதுக்கும் எதிரானதல்ல. ஸஹாபாக்கள் தறாவிஹ் தொழுகையை 20 றகா அத்துக்களாக தொழுதும், தொழுவித்துமுள்ளார்கள் என்று ஆதார பூர்வமான சான்றுகள் இருப்பதனால் ஸஹாபாக்களின் செயல் ஹஸரத் இப்னு அபி ஷைபாவின் ஹதீதை உறுதிப்படுத்துவதனால் பலவீனமான இந்த ஹதீத் ஸஹீஹாக மாறி விடுகின்றது.
ஸஹாபாக்கள் இருபது றகா அத்துக்கள் தொழுதார்கள். என்பதற்கான ஆதாரங்களைக் கவனியுங்கள்.
1. அமீறுல் முஹ்மினீன் ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் (ஸஹாபாக்கள்) 23 றகா அத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
அறிவி;ப்பவர் - யஸீத் இம்று றூமான்
நூல் - முஅத்தா இமாம் மாலிக்
பாகம் 01, பக்கம் 104
சுனன் பைஹகி பாகம் - 1, பக் 496
தன்வீறுல் ஹவாலிக் ஷறஹ்
முஅத்தா இமாம் மாலிக்
பாகம் - 1, பக் 104
2. ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (ஸஹாபாக்கள்) 20 றகா அத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
அறிவிப்பவர் - ஸாயிப் இப்னு யஸீத்
ஆதாரம் - பத்ஹுல் பாரி
பாகம் - 5, பக் 157
ஐனி (புஹாரி விரிவுரை)
பாகம் 11, பக் 127
3. அமீறுல் முஹ்மினீன் ஹஸரத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 றகா அத்துக்கள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸரத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் - அப்துல் றஹ்மான் ஸலமி
நூல் - ஸுனன் பைஹகி
4. ஷப்றுமா இப்னு ஷக்ல் றழியல்லாஹு அன்ஹு ஹஸரத் அலி றழியல்லாஹு அன்ஹுவின் நண்பராவார். இவர் தறாவிஹ் தொழுகையை ஐந்து தர்வீஹூகளாக தொழுவித்தார். 04 றகாஅத்துக்களுக்குப் பின் 04 றகாஅத்துக்கள் தொழும் நேரம் எடுக்கும் ஓய்வுக்கு தர்வீஹ் என்பர்.
ஆதாரம் - ஸுனைன் பைஹகி
5. ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (ஸஹாபாக்கள்) 20 றகா அத்துக்கள் தொழுதது போன்றே ஹஸரத் அலி, ஹஸரத் உதுமான், றழியல்லாஹு அன்ஹுமா காலத்திலும் தறாவிஹ் தொழுதனர்.
ஆதாரம் - ஸுனைன் பைஹகி
ஐனி -பாகம் 7, பக் 178
6. ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் றமழானில் தறாவிஹ் 20 றகா அத்துக்கள், வித்று மூன்று றகா அத்துக்களுமாக 23 றகா அத்துக்கள் தொழுவித்துள்ளனர்.
ஆதாரம் - ஜனி, பாகம் - 7 - பக்கம் 178
குற்றச்சாட்டும், பதிலும்
தறாவிஹ் எட்டு றகாஅத்துக்கள் என வாதிப்போர் சில குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர். அதனையும், அதற்கான எமது பதிலையும் கீழே தருகின்றோம் படியுங்கள்.
குற்றச்சாட்டு 1 :- றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல
்லம் அவர்கள் றமழானில் வித்றைத் தவிர்த்து 20 றகாத்துக்கள் தொழுதார்கள் என்ற ஹதிஸ் பலவீனமானதாகும். ஆகவே இதனை ஆதாரமாக கொள்ள முடியாது.
குற்றச்சாட்டு 2 :- றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் றமழானிலும், றமழான் அல்லாத காலத்திலும் 11 றகாத்துக்களை விட அதிகம் தொழவில்லை. என்றும் அன்னை ஆயிஷh றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஆதார பூர்வமான ஹதீஸூக்கு 20 றகாத் பற்றிய ஹதீஸ் முரணாக உள்ளது.
குற்றச்சாட்டு 3 :- ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக்காலத்தில் தறாவிஹ் 20 றகா அத்துக்கள் தொழப்பட்டன. என்ற ஹதீஸை ஹளரத் யஸீத் இப்னு றூமான் என்பவர் அறிவித்துள்ளார். இவர் ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹுவின் சம காலத்தவர் அல்ல. ஆகவே இந்த ஹதீஸ் முன்கதிஃ ஆகும். ஆகவே இந்த ஹதிதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
குற்றச்சாட்டு 4 :- ஹஸரத் உமர் றழியல்லாஹு அன்ஹு 23 றகா அத் தொழுகையில் கலந்து கொள்ளவில்லை.
குற்றச்சாட்டு 5 :- ஹஸரத் ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு தறாவிஹ் 8 றகா அத்துக்கள் தொழுதாக வந்துள்ள ஹதீஸ். 20 றகா அத் தொழுகைக்கு முரண்படுகின்றது.
தறாவிஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 அல்ல. எட்டுத்தான் என்று வாதிடுவோர் முன்வைக்கும் ஆட்சேபனங்கள் தான் இவை. இவர்களின் ஆட்சேபனங்கள் எவ்வளவு பலவீனமானது என்பதை இப்பொழுது கவனியுங்கள்!
தெளிவு 1:- ஆட்சேபனை ஒன்றுக்கான பதிலை ஆரம்பத்திலேயே விளக்கியுள்ளோம். அதனால் இங்கு மீண்டும் எழுத வேண்டியதில்லை.
தெளிவு 2:- தறாவிஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 என்று வரும் 11 றகா அத் பற்றிய ஆதார பூர்வமான ஹதீதுக்கு முரண்படுகின்றது என்ற வாதம் சிலந்தி வலையை விட பலவீனமானதாகும். 11 றகா அத் பற்றிய ஹதீதுக்கும் தறாவிஹ் தொழுகைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அன்னை ஆயிஷh சித்தீகா றழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஹஸரத் அபூ ஸல்மா றழியல்லாஹு அன்ஹூ றமழான் காலத்தில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்களின் இரவுத் தொழுகை எப்படி இருந்தது? அதாவது வழமையாக தொழுவது போன்று இருந்ததா? அல்லது விNஷடமாக அதிகம் தொழுதார்களா? என்று கேட்டார்.
அதற்கு அன்னையவர்கள் றமழானிலும், றமழான் தவிர்ந்த காலங்களிலும் 11 றகா அத்துக்களை விட அதிகம் தொழவில்லை. (அதாவது எக் காலத்திலும் ஒரே விதமாகவே தொழுதார்கள்) என்று விடை பகர்ந்தார். தறாவிஹ் - தஹஜ்ஜூத் - வித்று ஆகியவைதான் இரவில் தொழும் சுன்னத்தான தொழுகைகளாகும்.
இவற்றில் தறாவிஹ் றமழானில் மட்டும் தொழப்படும் தொழுகையாகும். ஏனைய தஹஜ்ஜத், வித்று றமழான், றமழான் தவிர்ந்த எல்லாக் காலங்களிலும் தொழப்படும் தொழுகையாகும்.,
ஹதீதுப் பெருநூட்களில் தறாவிஹ் தொழுகையை ;கியாமுலைல் ; தறாவிஹ் என்றும், வித்றையும், தஹஜ்ஜத்தையும் ;ஸலாத்துல்லைல் ; என்றும் தலைப்பிடப்பட்டுள்ளன. 11 றகா அத் பற்றிய ஹதீஸ் றமழானில் தொழப்படும் தறாவிஹ் - கியாமுலைல் என்ற தலைப்பில் ஹதீதுக் கலை அறிஞர்கள் சேர்க்கவில்லை. வித்று, தஹஜ்ஜுத் என்ற பாடத்திலேயே பதிவு செய்துள்ளனர். இது ஒன்றே 11 றகா அத் பற்றய ஹதீஸ் தறாவிஹ் பற்றியது அல்ல என்பதற்குச் தக்க சான்றாகும்.
மேலும், இரவுத் தொழுகையின் எண்ணிக்கையில் பல அறிவிப்புக்கள் வந்துள்ளன. இரவுத் தொழுகை 11 றகா அத் என்று அறிவித்த அன்னை ஆயிஷh றழியல்லாஹு அன்ஹா அவர்களே இரவுத் தொழுகை 13 றகா அத்துக்கள் என்றும் அறிவித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் இரவுத் தொழுகை 11-13-15-16-17 என்று பல்வேறு ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபியவர்களின் இரவுத் தொழுகை 11றகா அத்துக்கள் என்று வந்துள்ள ஹதீதில் 8 தறாவிஹ் 3 வித்றும் என்று கூறுவோர் 13-15-16-17 என்று வந்துள்ள ஹதீதுக்களுக்கு கூறும் விளக்கம் யாது
அன்னை ஆயிஷh சித்தீகா றழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கும் இரவுத்தொழுகை என்பது தறாவிஹ் என்று ஒன்று இருக்குமாயின் அதனை ஹதீஸ் தொகுப்பாளர்கள் தறாவிஹ் - கியாமுலைல் என்ற பாடப் புத்தகத்தில் பதிவு செய்யாதது ஏன்?
இரவுத் தொழுகை 11றகா அத்துக்களை விட அதிகமாகவில்லை. என்ற ஹதீஸின் இறுதியில் வித்றுத் தொழு முன் தூங்கி விடுகின்றீர்களா? என்ற கூற்று நபியவர்கள் தூங்கி எழுந்த பின்னரே வித்றுத் தொழுதுள்ளனர் என்பது தெளிவாகின்றது. தறாவிஹ் தொழுகை நபியவர்கள் தூங்கும் முன் தொழுத காரணத்தால் தறாவிஹ் தொழுகையுடன் நபியவர்கள் வித்றைத் தொழவில்லை என்பது புலனாகின்றது.
அப்படியாயின் 11 றகா அத்தில் தறாவிஹ் 08, வித்று 03 (081003ஸ்ரீ11) என்ற வாதம் அர்த்தமற்றதாகி விடுகின்றதே! ஏனெனில் நபியவர்கள் தறாவிஹ் தொழுகையையும், வித்றையும் சேர்த்துத் தொழவேயில்லை. இரண்டையும் தனித்தனியாக தொழுதுள்ளார்கள். என்பது கவனி;க்கத்தக்கது.
தறாவிஹ் தொழுகையின் எண்ணிக்கையில் ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடிருந்தது. அதனை இமாம் திர்மிதி றஹ்மதுல்லாஹி தனது ஜாமிஉத் திர்மிதியில் பதிவு செய்துள்ளார்கள்.
தறாவிஹ் தொழுகையின் எண்ணிக்கையில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தறாவிஹின் எண்ணிக்கை வித்றுடன் நாப்பத்தொன்று என்கின்றனர். இந்த எண்ணிக்கை மதீனா வாசிகள்
கருத்தாகும். மதீனதுல் முனவ்வராவில் இதே எண்ணிக்கை நடைமுறையில் உள்ளது. (இப்போது வஹாபிகள் இதனை மாற்றி இருபது றகா அத்துக்களாக்கியுள்ளனர். அநேக அறிஞர்கள் ஹஸரத் உமர், ஹஸரத் அலி றழியல்லாஹூ அன்ஹூமா உள்ளிட்ட அனேக ஸஹாபாக்கள் மூலம் அறிவிக்கப்பட்டபடி தறாவிஹின் எண்ணிக்கை இருபது என்றே கூறுகின்றனர்.
இமாம் சுப்யானுத்தௌரி, இப்னு முபாறக், இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹிம் போன்றோரும் இதே கருத்தையே ஆதரிக்கின்றனர். எமது ஊரான மக்காவில் தறாவிஹ் இருபது றகா அத்துத்தான் நடைமுறையில் இருப்பதை கண்டேன். என இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
மதினாவில் தறாவிஹ் தொழுகை முப்பத்தொன்பது றகா அத்துக்கள் தறாவிஹ் தொழுது வந்தனர். மக்காவிலும் ஏனைய இடங்களிலும் இருபது றகா அத்துக்கள் தறாவிஹ் தொழுது வந்தனர். மதினாவின் ஆளுனர் மதினாவிலும் தறாவிஹை இருபதாக குறைப்பதற்காக இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹிடம் ஆலோசனை செய்த போது இமாம்; மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி ஆளுனரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.
ஆதாரம் - பதாவா ஸூப்கி
பாகம் 1, பக்கம் 166
அமீறுல் முஃமினீன் ஹஸரத் உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் காலத்தில் தறாவிஹ் தொழுகை 20 றகா அத்துக்களாக நிர்ணயிக்கப்பட்டு ஜமா அத்தாக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையில் எந்த ஒரு ஸஹாபியும் ஆட்சேபிக்கவில்லை. இக் காலத்தில் 11 றகா அத்துக்கள் பற்றி அறிவிக்கும் அன்னை ஆயிஷh சித்தீகா றழியல்லாஹூ அன்ஹாவும், உயிருடன் இருந்தார்கள் என்பது ஈண்டு கவனி;க்கத்தக்கது.
ஸஹாபாக்கள் காலம் தொட்டு இது நாள் வரையிலுமான அணைத்து அறிஞர்களும் தறாவிஹ் 20 றகா அத்துக்கள் என ஒருமித்துக் கூறும் போது சிலர் தறாவிஹ் 20 அல்ல எட்டுத்தான் என்று பிடிவாதம் செய்வது ஏன்? உங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வந்தால் எனது ஸூன்னத்தையும், நேர் வழி பெற்ற குலபாஉர் ராசிதீன்களின் ஸுன்னத்தையும் பின்பற்றுங்கள். என்ற நபி மொழிப்படி கலீபாக்களில் மூவர் 20 றகா அத்துக்களாக தொழுதுள்ளனர். என்பதிலிருந்த தறாவிஹ் 20 றகா அத்துக்கள்தான் என்று ஏற்பதுதான் முடிவாகும்.
மேலும் உமர் செல்லும் வழியில் ஷைத்தான் செல்ல மாட்டான் என்றும், சத்தியத்தை அல்லாஹூத்தஆலா உமரின் நாவில் வைத்துள்ளான். என்றும் நபியவர்கள் கூறியுள்ளதை நோக்கும் போது தறாவிஹ் 20 என்பதை ஏற்போர் சத்தியத்தில் இருப்பதையும் எட்டு என்போர் ஷைத்தானின் வழியில் இருப்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. ஷைத்தானின் வழியில் இவர்கள் இருப்பதனால்தான் அமைதியாக அமல் செய்ய வேண்டிய புனித றமழான் மாதம் சண்டைக்குரிய மாதமாக இவர்களால் ஆக்கப்பட்டு வருகின்றது.
மக்களை குளப்பி ஆதாயம் தேட முயலும் இக் கூட்டத்தில் சேராமல் ஈமானைப் பாதுகாத்து நல்லமல்கள் புரிந்து சொர்க்கபதி செல்ல வல்ல றஹ்மான் நல்லருள் பாதிப்பானாக.
புஷ்றா இதழ் - 09 ஆகஸ்ட் - 2009
கருத்துரையிடுக