தர்காகக்கள்
கப்றுகள்_உள்ள_பள்ளிவாசல்களில்_தர்ஹாக்களில்_தொழலாமா?
¶"இஸ்லாத்தின் பார்வையில் கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழலாமா.?"¶
♣ *இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு*
கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழுவது கூடாது - ஹராமாகும். அவ்விடயங்களில் தொழுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஆனால் (ஜனாஸாவை - மய்யித்தை) அடக்கம் செய்யப்படும் பொது மய்யவாடியில் தொழுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டு. ஆகவே கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் மட்டும் தொழக்கூடாது. அவ்வாறு அவ்விடங்களில் தொழுவது (பித்அத் - ஷிர்க்) என்பதற்கு ஆதாரமாக "கப்றுகளை மஸ்ஜிதாக்குதல்.." எனும் ஹதீதை கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் செயலாகும். எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
♦ தற்காலத்தில் அனேக ஊர்களில் பழமைவாய்ந்த சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். தொழுவதெற்கென்றே ஒரு பிரத்தியோகமான தனி பள்ளியும் அதன் அருகாமையில் உள்ள இடத்தில்தான் (தர்ஹா ஷரீப்) வலிமார்களின் கப்றும் அமைந்திருக்கும். ஆகவே அதிகமாக மக்கள் வலிமார்களின் கப்று ஷரீபை ஸியாரத் செய்வதற்காக வருகை தருவதால் தர்ஹாவிற்க்கு அருகாமையில் உள்ள அப்பள்ளியில் தொழுவதற்க்கு இடவசதி இல்லாமல் அப்பள்ளியினை விரிவாக்கம் செய்து பெரிய பள்ளிவாசல்களாக கட்டப்பட்டு வருகின்றன. இது பெரும்பாலும் அரிதாகவே காணப்பட்டாலும் அப்பள்ளிவாசலை விரிவுப்படுத்தும் பொழுது அதன் அருகாமையிலுள்ள வலிமார்களின் கப்று ஷரீப் அப்பள்ளிவாசலோடு ஒரு தடுப்புச் சுவரோடு இணைக்கப்படுகிறது. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
♣ *கப்றுகள் உள்ள பள்ளிகளில், தர்ஹாக்களில் தொழுவது கூடாது-(ஹராம்) என்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள் பின்வருமாறு*
‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி 1330, முஸ்லிம் 921, 924)
♦ இறைவா! எனது கப்றை வணக்க சிலைகளை போல் ஆக்கி விடாதே! யார் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜித் ஆக்கினார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கடுங்கோபம் உண்டாகட்டும் (நூல்: மிஷ்காத்)
♦ அன்னை உம்மு சல்மா, அன்னை உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் ஹபஷா நாட்டுக் கோயிலில் உருவப்படங்கள் இருப்பதைக் கண்டு வந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள்,அந்த மக்கள் அவர்களில் ஒரு நல்லடியார் மரணித்தால், அவர்களின் கப்றின் மீது பள்ளிவாசல் (மஸ்ஜித்) எழுப்புவர். பின் அவர் படத்தை அதில் தீட்டுவார்கள்.கியாமத் நாளில் இவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகக் கெட்டவர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா (நூல்கள் :புகாரி, முஸ்லிம், நஸஈ, அஹ்மது)
♣ *மேலே எடுத்துக்காட்டப்பட்ட ஹதீஸ்களின் விளக்கங்கள் பின்வருமாறு*
மேற்கண்ட ஆதாரங்களையே கப்றுள்ள பள்ளிவாசலில் தொழுவதை எதிர்க்கும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் முன்வைக்கின்றனர். மேற்கண்ட நபி மொழிக்கு மிகப் பிரபலமான முபஸ்ஸிர் இமாம் நாஸூறுத்தீன் பைழவி றஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறியுள்ளார்கள். யஹுதிகளும்,நஸாறாக்களும் நபிமார்களைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளில் சுஜூது செய்வார்கள்.தொழுகையில் அவர்களின் கப்றுகளை கிப்லாவாக ஆக்கிக் கொள்வதோடு அவர்களை (நபிமார்களை)
விக்ரகங்கள் போல் கருதினர். அதனால்தான் அவர்கள் அல்லாஹ்வினதும் சகல மனிதர்களினதும் சாபத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
♦ ஹதீஸ், பிக்ஹ்துறை பேரறிஞர் அல்லாமா முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி மேற்கண்ட ஹதீதுக்கு பின்வருமாறு விளக்கம் எழுதுகின்றார்கள். யஹுதிகளும், நஸறானிகளும் சபிக்கப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் பிரதானமானவையாகும்.
1) நபிமார்களின் கப்றுகளைக் கண்ணியப்படுத்துவதற்காக அவர்களின் கப்றுகளுக்கு ஸுஜூது செய்தனர். இது மறைமுகமான ஷிர்க் ஆகும்.
2) அல்லாஹ்வைத் தொழுவதற்கு நபிமார்களின் அடக்கஸ்தலங்களின் கப்றுகளை தேர்வு செய்து கொண்டனர்.அவர்களின் கப்றுகளை (கிப்லாவாக) முன்நோக்கியே தொழுதனர்.
3) அல்லாஹ்வின் அனுமதியின்றி நபிமார்களின் கப்றுகளை எல்லைமீறி கண்ணியப்படுத்தினார்கள்.
கருத்துரையிடுக