*யா காதீர் முராது ஹாஸில்*
அன்றும் வழக்கம் போல் நாகூர் தர்காவில் *எஜமான் பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு* அவர்களின் கால்மாட்டு வாசலின் நடு மத்திய ஹால் காலையிலேயே பரப்பரப்பாக காணப்பட்டது காரணம் எஜமானின் ஆசியை பெறுவதற்காகவும் அவர்களின் மீது *முராது* வைத்து தங்களின் நாட்டங்களை நிறைவேற்ற வேண்டியும் மதம் கடந்த மனிதர்கள் சங்கமிக்கும் எல்லோரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற ஆன்மீக தத்துவத்தை போதித்த அஹ்லுல் பைத்துகளின் குல கொழுந்தான அரசர்கள் போற்றிய ஆன்மீக பேரரசர் *எஜமான் ஷாகுல் ஹமீது பாதுஷா ரலியல்லாஹு அன்ஹு* அவர்களின் தர்பார் எப்பொழுதும் மாற்று மத ஆஷிகீன்களுக்கும் சாதாரண மக்களுக்கும் அருள் வழங்கும் ஸ்தலமாக தான் இருந்து வருகிறது காரணம் அவர்கள் வாழ்ந்த காலத்தல் எத்தனையோ மாற்றுமத சகோதர மக்கள் பலன் அடைந்திருக்கிறார்கள் அதற்கான வரலாற்று ஆவணம் பறைசாற்றுகிறது தஞ்சை மன்னன் வரலாறு அதற்கு உதாரணமாகும் அவர்களின் மறைவிற்கு பின் பலன் அடைந்தவர்களின் எண்ணிலடங்காத வரலாறாகும் அவர்களின் கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறும் கூத்தாநல்லூரின் பல குடும்பங்கள் அடைந்த சம்பவங்கள் ஏரளாம் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம் அதுவும் குறிப்பாக கூத்தாநல்லூரின் *மஹாதேவ ஐயர் அவர்களின் வராலாறு ஒரு உதாரணமாகும் நாகூர் எஜமான் மூலமாக அவர் அடைந்த பலனின் விளைவாக நாகூர் பிரதான மினாரவின் உச்சியில் வெள்ளி கலசத்தை நேர்ச்சையாக வழங்கி இருக்கிறார்கள் அதன் வரலாற்று பதிவை அங்கே மினாரா கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதை இன்றும் காணலாம் அதே போல் சதக்கத்துல்லா அப்பா அவர்கள் நின்று ஜியாரத் செய்த இடத்தையும் அடையாளமிடப்பட்டுள்ளார்கள்
இவ்வாறு இருக்க அன்றைய காலை பொழுதில் பரதேசி கோலத்தில் அல்லது பார்ப்பதற்கு பிச்சைக்காரரை போன்று தோற்றத்தில் ஒருவர் தர்காவின் பிரதான வாசலுக்கு வருகிறார் அவர் தோலில் ஒரு பை தொங்குகிறது வந்தவர் தர்காவிற்கு புதியதாக போன்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு எஜமான் அவர்களின் வெள்ளிக்கதவை பார்க்கிறார் கதவு மூடி இருக்கிறது சிறிது நேரம் அங்கேயே நிற்கிறார் சிலர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே செல்வதை பார்த்து விட்டு தானும் உள்ளே செல்ல ஆசைப்பட்டு டோக்கன் எடுக்க செல்கிறார் ஆனால் அங்கே அமர்ந்திருக்கும் ஸாஹிபு இவரின் அழுக்கான அலங்கோல தோற்றத்தை பார்த்து விட்டு உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விடுகிறார் அதற்கு அந்த மனிதர் ஒன்றும் சொல்லாமல் தான் ஏற்கனவே நின்ற இடத்திற்கு சென்று அந்த வெள்ளிக்கதவை பார்த்த வாறே நிற்கிறார் இப்படியே அன்று லுஹர் தொழுகை முடிந்தும் விட்டது அஸர் தொழுகையும் முடிந்தும் அவர் அங்கிருந்து நகரவே இல்லை அங்கே பலர் வருவார்கள் போவார்கள் என்பதால் இவரை யாரும் கவனிக்க வில்லை சில நிமிடங்கள் காணாமல் போவார் மறுபடியும் வந்து அதே இடத்தில் நின்று கொள்வார் தர்காவில் அவர் உட்கார கூட இல்லை ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு எஜமானின் மஜார் சரீஃபை பார்த்தவாறே இருப்பார் இப்படியே ஒரு நாளல்ல இரு நாளால்ல ஒரு வாரகாலம் இருந்தார் ஸாஹிபுமார்களுக்கு அவர் நிற்பது சாதாரண விஷயமாகி விட்டது இருந்தாலும் அவரை ஒரு அந்நியனாக ஒரு பரதேசியாக தான் பார்த்தார்கள் காரணம் அவரின் தோற்றம் அவ்வாறு இருந்த்து
ஒரு வாரம் கழித்து லுஹருடைய வக்தில் திடீரென அவர் தர்காவின் பிரதான உண்டியல் பக்கம் வந்து தனது பையில் கையை விட்டு 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டுகளை வரிசையாக எடுத்து உண்டியலில் போட்டுக்கொண்டே இருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் சில பல ரூபாய் நோட்டு கட்டுகளை அவர் உண்டியலில் போடுவதை பார்த்த ஸாஹிபுமார்கள் திகைத்து போய் நின்று விட்டார்கள் ஒரு கணம் மனதிற்குள் ஆகா நாம் இவரை பரதேசி அல்லவா என்று நினைத்தேன் ஆனால் நாம் நினைத்தது தவறாகி விட்டதே என்று நினைக்கும் பொழுதே அந்த நபர் விறுவிறுவென தர்காவை விட்டு வேகமாக வெளியேறி விட்டார் அந்த சமயத்தில் ஒரு ஆலிம் அங்கே நின்று இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்து அவரை உடனே பின்னாலேயே பின் தொடர்ந்து சென்றார் அவர் வேகமாக தர்காவை விட்டு வெளியேறி சில்லடி பக்கம் சென்று விட்டார் இந்த ஆலிமும் அவரை சில்லடியில் வைத்து அவரை பார்த்து விட்டார்
அவரை பார்த்த ஆலிம் அவர்கள் அவரை விஸாரிக்கிறார் ஆனால் அதற்கு அவர் உடனே பதில் சொல்ல வில்லை சிறிது நேரம் கழித்து அவர் ஹிந்தியில் பதில் சொல்கிறார் நமது ஆலிமுக்கு உர்து தெரிந்திருந்த்தால் அவர் பேசும் ஹிந்தியை ஒரளவு புரிந்து கொண்டு பேசினார் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் பையில் இருந்து செல்போன் அடிக்கும் ஒலி கேட்க அவர் அவசரமாக எடுத்து பேசினார் அவர் பேச்சிலும் அவர் முகத்திலும் சந்தோஷம் பொங்க அப்புறம் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு தன்னை பற்றி கூறினார்
*தான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும் என் கம்பெனி பார்னர்ஸிப் பிரச்சனையில் சிக்கி எனது கம்பனியை தந்திரமாக பார்னர்கள் அபகரித்து விட்டார்கள் என்றும் அதை எதிர்த்து கோர்
டில் வழுக்கு தொடத்து அதிலும் அவர்கள் வெற்றிடைந்து விட்டார்கள் தான் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் வழக்கிற்காக தனது பணம் முழுவதும் செலவாகி கொண்டிருந்த நிலைமையில் தனது மனைவிக்கும் ஒரு விதமான நோய் வந்துவிட்டது இவ்வழக்கில் தான் தோற்று விட்டால் தனது வாழ்க்கையே சூனியமாகி விடுமோ என்ற கவலையில் இருந்த பொழுது தான் தனது நணபர் தமிழ்நாட்டில் நாகூரில் ஒருவர் அடங்கியிருக்கிறார் அவரிடம் போய் நீ முராது* *வைத்து அவர்களிடம் உமது பிரச்சனையை கூறினால் அவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று கூறியதால் இங்கு வந்தேன் ஆனால் யாரும் என்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக சாதாரண பழைய ஆடையில் வந்தேன் ஆனால் இங்கு வந்து பார்த்தால் எல்லாமே தலைகீழாக இருந்தது இங்கே இருக்கும் நபர்கள் பணத்துக்கும் ஆடைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தால் மனம் கஷ்டப்பட்டு நின்றேன் இருந்தாலும் இவர்களையா நாம் தேடி வந்தோம் நாம் வந்தது ஆண்டவரை நாடி முராது வைப்பதற்காக எனவே அவர்களை பற்றி கவலை படவில்லை இருந்தாலும் மனம் சஞ்சலம் அடைந்த தால் ஆண்டவர்கள் அவர்களிடம் மனமுறுகி ஒரு வேண்டுதல் வைத்தேன் அதாவது என்னுடைய எல்லா பிரச்சனைகளும் அகன்று எனது கம்பெனியும் மற்றும் சொத்துக்களும் திரும்ப என் கைக்கு கிடைக்கனும் அதற்க்கு ஆதாரணமாக என் மனம் ஆறுதல் அடைய எஜமானாகிய நீங்கள் உங்கள் சமாதியிலிருந்து வெளியேறி வந்து என் கண்களுக்கு காட்சி தர வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில் அவர்களின் சமாதியை விட்டும் என் கண்களை அகற்றாமல் கண் விழித்து பார்த்து கொண்டே இருந்தேன் அப்படி இருக்கையில் இன்று எஜமான் அவர்கள் அவர்களின் சமாதியிலிருந்து வெளியேறி என் கண்முன்னே காட்சியளித்தார்கள் அதனால் நான் உடனே எனது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன் வரும் பொழுதே எனது செல்போனை ஆன் செய்து விட்டேன் இப்பொழுது பேசியது எனது வக்கீல் காலையிலிருந்து போன் செய்தேன் சுவிட்ச் ஆப் ஆக இருந்த்து சுப்ரீம் கோர்டில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது கம்பெனியும் சொத்துக்களும் மீட்டியாச்சி நீங்கள் எங்கே உள்ளீர்கள் என்று கேட்கிறார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் உடனே எனது ஊருக்கு செல்ல வேண்டும் என்று உணர்ச்சி பொங்க அவர் அந்த ஆலிமிடம் கூறினார் உடனே ஆலிம் அவர்கள் அவரிடம் அவரின். அட்ரஸ் போன் நம்பர் வாங்கிக்கொள்கிறார்*
நாகூர் எஜமான் கருணை கராமாத்துகள் ஏராளமான சம்பவங்கள் உள்ளன யார் உறுதியோடு நம்பிக்கையோடு அவர்கள் மீது *முராது வைத்து அதாவது யா காதீர் முராது ஹாசில்* என்று பல முறை அவர்களை அழைக்கிறார்களோ அவர்களுக்கு எஜமான் அவர்களின் ஆசி கிடைக்கும் ஒரு முஸ்லிம் அல்லாத மேற்கண்ட ராஜஸ்தான் நபருக்கு உள்ள உறுதி கூட இல்லாமல் வெறுமெனே முராது வைக்காமல் அவரை போல் உறுதியாக முராது வைத்தால் அது எப்படி பட்ட பிரச்சனையாக இருந்தாலும் எஜமானின் பார்வையில் அவையெல்லாம் சர்வ சதாரணமாக நீக்கி விடுவார்கள் ஆகவே முஃமி்ன்களே முஸ்லிம்களே நாகூர் எஜமான் அவர்கள் மீது *முராது வைத்து*நமது பிரச்சனைகளை அவர்களை தீர்த்து மன மகிழ்வோடு வாழ்வோம் அதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
*யா காதீர் முராது ஹாசில்*
ஆக்கம்:
மேற்கண்ட சம்பவத்தில் வரும். ஆலிம் சொல்லி நேரடியாக கேட்டதை அவரின் அனுமதியோடு பதிவு செய்தது
*அ.ஷே.முஹம்மது ஆரிஃப்*
*செல் : 9976063985*
*கூத்தாநல்லூர்*
*பதிவு நாள் : 12-02-2018*
கருத்துரையிடுக