கொள்கைகள்

 

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) YASEENIULAMA.COM -க்கு
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே...
இறைவா எங்களின் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் திருக்குடும்பத்தார்களான தூய்மை மிகு அஹ்லுல் பைத்தினர்கள் மீதும் சத்திய ஸஹாக்கள் மீதும்இமாம்கள் மீதும் மற்றும் வலிமார்கள் மீதும் உன் ஸலாத்தும் சலாமும் உண்டாவதாக அமீன்....

இப்புனிதத் தளத்தில் மனிதனின் உன்னத நோக்கமான தன்னையறிய செய்யும் மெஞ்ஞான உரைகள், கவிதைகள், செய்யுள்கள், சைய்குமார்களின் அமுதமொழிகள், பாடல்கள், கீர்த்தியுண்டாக்கும் திக்ருகள், துஆகள், உயர்வையும் தியாகத்தையையும் ஊட்டும் இஸ்லாமிய வரலாறுகள், சிந்தனைத் தூண்டும் சீரிய கட்டூரைகள், உணர்ச்சியூட்டும் கவிதைகள், இன்பமூட்டும் இஸ்லாமிய பாடல்கள், எழுச்சிமிகு அறிஞர் பெருமக்களின் உரைகள், வஹ்ஹாபிகளுக்கெதிராக முழங்கிய முழக்கங்கள், போன்றவைகள் அமையப்பெறும். மேலும் இஸ்லாமியரான நமக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வையும் இஸ்லாத்தையறிய ஆவல் கொண்டோருக்கும் இஸ்லாத்தில் தங்களை புதிதாய் இணைந்தோருக்கும் இஸ்லத்தின் அடிப்படையையும் மாண்பையையும் எளிதாய் அறிய ஏதுவாகும்.

இத்தளம் பொருளாதாரம் ஈட்டும் நோக்கில் அமைக்கப்பட்டதும் அல்ல ஒருகட்சியின் சார்போ அல்லது கட்சிசார் நோக்கமோ இத்தளத்திற்கில்லை. மேலும் இது பொது விமர்ச்சனத்திற்குரியதும் அல்ல. 

இத்தளம் முழுக்க முழுக்க அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை ஊடுறுவச் செய்வதும் தரீக்காகள் சம்பந்தமான அவசியத்தையும் கருத்துகளையும் எடுத்தியம்பவும் இஸ்லாமிய பெருமக்களின் உள்ளங்களில் எழும் சந்தேகத்திற்கும் குழப்பத்திற்கும் தீர்வுகாணவும் சுன்னத் ஜமாதெனும் பெயரில் உருவெடுக்கும் தீயகருத்துகளை கட்டறுக்கவும் அவர்களை மக்களுக்கு தோலுரித்துக்கட்டவும் அமைக்கப்பட்டுள்ளது இத்தளமான நம்தளம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் திருப்பொருத்ததால் சைகுமார்களின் நல்லாசியால் நல்லுயர்வு பெறவும் சமுதாயம் நலனடையவும் நாமெல்லாம் நல்லீடேற்றம் பெறவும் ஹக்குதஆலா அருள்புரியட்டுமாக..! ஆமீன்…!

நோக்கங்கள் :

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை ஆதாரங்களுடன் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். வலிமார்களை மதிக்கக் கூடிய நாம் அவர்கள் இவ்வுலகில் பரப்பிய தஸவ்வுப் எனும் இறை ஞான இரகசியங்களை அறிந்து கொள்ள மறந்து விட்டோம். ஆன்மிகம் வெகுதூரமானது.எல்லோரும் அதனை அடைய முடியாது என்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மார்க்கத்தில் முதன்மையானது இறைஞானத்தை அறிவதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஞான கருத்துக்களை மக்களிடம் எளிமையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search