26/03/2018

வறுமை போக்கும் அஜ்மீர் நாயகமே!

நாட்கள் ஒடின..ஒரு நாளல்ல இரு நாளல்ல
ஒரு மாதமல்ல இரு மாதமல்ல
ஒரு வருடமல்ல் இரு வருடமல்ல்
இப்படியே பல வருடங்கள் ஓடி விட்டன.
இருந்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் அவர்கள் மேல் அதீத நம்பிக்கையில் அங்கேயே இருந்து விட்டார் ஒரு நாள் திடிரென தனது மனைவி மக்கள் ஞாபகம் வந்து
ஆஹா! நாம் மிக பெரிய தவறு செய்து விட்டோம் .
சின்ன பிள்ளைகளை வைத்து கொண்டு மனைவி எப்படி எல்லாம் கஷ்டபட்டு இருப்பாள்.
நாம் கூட இருந்திருந்தால் ஏதாவது உதவியாக இருந்திருக்கும் இங்கே வந்து
நமது காலத்தை வீண்டித்து விட்டோமே என்று மனது நொந்தவராக
*காஜா கரீப் நவாஸ் என்று எல்லொராலும் அழைக்கிறாங்களே ஆனால் இந்த ஏழைக்கு உதவி செய்ய மனம் வரவில்லையா என கோபம் கொண்டவராக. தனது கையில் உள்ள சிறு குச்சியை அவர்களின் மஜார் சரீப் பக்கம் வீசி எறிந்து விட்டு கோபமாக தர்காவை விட்டு வெளியேறி தனது ஊருக்கு புறப்பட்டார்

அவர் ஊரில் அவர் வீடு திருமண விழா கோலம் கொண்டிருந்த்து அவரது மனைவியும் அவரது முதல் மூன்று பிள்ளைகளும் திருமணம் ஆன நிலையில் கடைசி மகளின் திருமண நாளில் அவர் வந்த்தால் அவருக்கு பலமான வரவேறபு கிடைத்தது
அவருக்கு தாம் காணுவது கனவா நினைவா என்ற நினைப்பதற்குள் அவரின் மனைவி சொன்னது அவருக்கு பேரதர்ச்சியாக இருந்த்து அவர் சொன்னது * நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணமும் அனுப்பி முதல் மூன்று மகள் திருமணத்துக்கு வந்திருந்து சிறப்பாக திருமணம் நடத்தி விட்டு சென்றீர்கள் எங்கே கடைசி மகள் திருமணத்துக்கு வருவீர்களோ வரமாட்டீர்களோ என்று நான் பயந்தேன் நல்லவேளை நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று கூறியதை கேட்டு மயக்கம் வராதகுறை தான்

நல்லவிதமாக திருமணம் முடிந்து அவசர அவசமாக அஜ்மீர் புறபட்டு சென்றார் அங்கே தர்காவில் ஒரு ஓரத்தில் மனம் சஞ்சலத்துடன் காஜா கரீப் நவாஸ் அவர்களிடம் மன்னிப்பபு கேட்டவராக அழுது புலம்பி கொண்டிருந்தார் அப்பொழுது வயதான ஒரு பெரியவர் அவரிடம் வந்து தம்பி ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார் அவர் அவருக்கு வேண்டா விருப்பா அதெல்லாம் உங்களுக்கு எதற்கு என்று கேட்கும்பொழுது அந்த பெரியவரின் மேலாடை விலகியது அந்த பெரியவரின் முதுகில் சில் அடிப்பட்ட தழும்புகள் இருந்தன அப்பொழுது இவர் அவரிடம் பெரியவரே என்ன தழும்பு என்று கேட்டார் அதற்கு அவர் என் பிள்ளை என்மீது குச்சியை கொண்டு்எறிந்தார் அதனால் வந்த தழும்பு என்று கூறினார் திடுக்கிட்டு கண்மூடி திறப்பதற்குள் அந்த பெரியவர் மறைந்து விட்டார் உடனே இவர் கதறி அழுது புரண்டு அயர்ந்து தூங்கி விட்டார்.

கனவில் கரீபே நவாஸ் வந்தார்கள் அவர்களிடம் நீங்கள. எவ்வளவு பெரிய உதவி புரிந்துள்ளீர்கள் ஆனால் என்னிடம் சொல்லாமல்இத்தனை வருடங்கள் ஏன் மறைத்தீர்கள் என்று கேட்டபொழுது *காஜா முயீனுத்தின் சிஷ்தி ரலியல்லாஹு அன்பு அவரகள்கூறினார்கள் முதல்நாளே உமக்கு உதவி செய்து அனுப்பி இருப்பேன் ஆனால் நீ ஒவ்வொரு நாளும் பஜ்ரு தொழுகைக்கு பின் இனிமையான குரலில் குர்ஆன் ஓதவதை கேட்டு நான் மெய்மறந்து போகிறேன் உனக்கு உதவி செய்து அனுப்பி விட்டால் உன் குரலை கேட்கமுடியாது அல்லவா அதனால் தான் உனக்கான உதவிகளை நானே சென்று செய்தேன் உன்னை இங்கேயே தங்கவைத்தேன் என்று கூறி சென்றார்கள்
மறைந்தும்அவர்கள் ஏழை பங்காளர் என்பதை மறைந்தும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்
இறை நேசர்களை நேசிப்பவர்களுக்கு இது ஒரு அற்புத நிகழ்ச்சி
மற்றவர்களை பற்றி கவலை இல்லை
கூத்தாநல்லூர் சிஷ்தி நகர் பள்ளி வாசலில் ஹழ்ரத் பௌஜ் அபதுர் ரஹீம் அவர்கள் செய்த பயானில் நேரிடையாக கேட்டது.

 *சூஃபியாக்களை அறிவோம்*

மறைந்தும்

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search