எழுத்து;
மௌலவி V.M.முஹம்மது
ஜகரிய்யா யாஸீனிய்
(கராமத்)
(பிறந்த குழந்தை பேசியது)
(Copy right கட்டுரை)
காஜா முயீனுத்தீன் சிஷ்தி
( ரலியல்லாஹு அன்ஹு)
மார்க்கப்பணி செய்ய குத்புத்தீன்
( ரலியல்லாஹு அன்ஹு)
அவர்களை டில்லிக்கு அனுப்புகிறார்கள்.
ஷரீஅத்; ஹகீகத்; மஃரிபத்
எனும் ஞான விஷயங்களை மக்களுக்கு
மத்தியில் சொல்ல வேண்டும் என்று
தங்கள் கலீபா
குத்புத்தீன் வலி அவர்களுக்கு கட்டளை
பிறப்பிக்கிறார்கள்.
டில்லி சென்ற குத்புத்தீன் வலி அவர்களின் மார்க்கப்பணி மிக வேகமாக வளர்ந்தது;
மக்கள் அவர்களை கொண்டாட ஆரம்பிக்கிறார்கள்.
எங்கு வலிமார்கள் ஹக்கை
சொன்னாலும் அங்கே அவர்களை எதிர்ப்பதற்கு ஓர் கயவர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
அது போல் ஓர் கூட்டத்திலுள்ள்
பெண்;
குத்புத்தீன் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று ஓர் ஆணுடன் விபச்சாரம் புரிந்து ;
நன்றாக கருவுற்றபின் ;
குத்புத்தீன் வலி அவர்களின் சபைக்கு வந்து;
நான் கருவுற்று இருப்பது
குத்புத்தீன் வலி அவர்களுக்காக தான்.
அவர்கள் மூலம்தான் நான் கருவுற்றேன் என்றாள்.
இதை கேட்ட குத்புத்தீன் வலி அவர்கள் கவலை தோய்ந்து
யா அஜ்மீர் காஜா நாயகமே! என்று அழைத்தவுடன்
காஜா நாயகம் வருகிறார்கள்.
தன் சீடர் கவலை தோய்ந்த
முகத்துடன் இருப்பதை பார்த்த நாயகமவர்கள்,
என்ன கவலை என்றார்கள்.
நாயகமே!
இது போல் இது போல் என்று நடந்தவைகளை கூறுகிறார்கள்.
இச்சமயம் அப்பெண்மணி குழந்தையையும் ஈன்றெடுக்கிறாள்.
பிறந்த அக்குழந்தையைப் பார்த்து அஜ்மீர் நாயகம்
உன் தந்தை யார்? என்றார்கள்.
தங்கள் சீடர் குத்புத்தீன் வலி அவர்கள் மிக பரிசுத்தமானவர்கள்
அவர்களுக்கும் என் தாய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்று குழந்தை கூறியது.
*கராமத் என்பது வலிமார்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அவர்கள் இறைவனை அறிந்து அடைந்தவர்கள்.
ஆனால் குழப்பம் செய்யும் ஓர் வஹ்ஹாபிய கூட்டம்
ஓ! அது என்ன
பிறந்த குழந்தையை பேச வைப்பது..குர்ஆன் ஹதீஸ்கள்ல இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா என்று கேட்டால் சுர் என்று கோபம் தான் வரும். உண்மையில் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று.
*குழந்தை பேசிய சம்பவம் என்று பெருமானார்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் பட்டியலை போடும் போது;
பனு இஸ்ரவேலர் ஜுரைத்
( ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அவர்கள் சம்பவமும் இடம் பெறுகிறது.
வணக்க சாலியான ஜுரைதின் வணக்கத்தைப் பார்த்து;
ஆஹா! ஜுரைத் இப்படி அல்லாஹ்வை வணங்குகிறாரே ! என்று மக்கள் புகழ்வதை கேட்ட ஒரு பெண்மணி;
அவரை நான் வழிகெடுப்பேன் என சொல்லி; ஜுரைத்
(ரஹ்மதுல்லாஹி
அலைஹி)
அவர்களிடம் சென்று ஆசை காட்டினாள்.
ஆடையையும் கழட்டினாள்.
எதற்கும் அசைய வில்லை ஜுரைத்
(ரஹ்மதுல்லாஹி)
அலைஹி அவர்கள்.
கடைசியாக ஓர் இடையனுடன் சேர்க்கை கொண்டு;
பிள்ளை பெற்றெடுக்கிறாள்.
இந்த குழந்தை ஜுரைத்துக்கு பிறந்தது என்று மக்களிடத்தில் சொன்ன உடன்
ஜுரைத்
( ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அவர்களை பிடித்து அடிக்கிறார்கள்.
ஏன் அடிக்கிறீர்கள் என்று ஜுரைத்
(ரஹ்மதுல்லாஹி
அலைஹி)
கேட்ட போது
நீ தான் அப்பெணுக்குத் தந்தை;
எல்லா விஷயங்களும் செய்து விட்டு அல்லாஹ்வை வணங்குவாயா! என்று சொன்ன உடன்;
ஓ! இது தான் விஷயமா?
அப்பெண்ணையும் குழந்தையையும் அழைத்து வாருங்கள் என்றவுடன்:
இருவரும் வந்தனர்.
பிறந்த குழந்தையைப் பார்த்து
உன் தந்தை யார் என்றார்கள்?
நிச்சயமாக நீங்கள் இல்லை.
இந்த ஆட்டு இடையன் தான் என் தந்தை என்றது குழந்தை..
(நூல்; முஸ்லீம்)
ஈசா ( அலை) குழந்தையாக இருக்கும் போது பேசினார்கள்.
காரணம் நபி.
இங்கே பனு இஸ்ரவேலர்களில் ஓர் இறைநேசர்.
மூஸா ( அலை) உம்மதுக்கே இப்படி என்றால்: முஹம்மது ரஸுல் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் உம்மத்து மட்டும் இல்லை.
அவர்களின் இரத்தம்
அஜ்மீர் காஜா நாயகம் அவர்கள்.
கருத்துரையிடுக