அந்த மதீனாவில் தான் ஒரு நாள் எந்தன் உயிர் போகும்
மாநபி நடந்த காலடி மண் அது பொன்னாகும்
அந்த காருண்யர் வாழும் மதீனா எந்தன் கண்ணாகும்
மாநபி காலடி மண்ணில் அடியேன் அடங்கிடனும்
நாளை மஹ்ஷரில் யானும் நபியுடன் சேர்ந்தே எழுந்திடனும்
பூமியில் சுவனம் மதீனா சில நாள் வாழ்ந்திடனும்
அந்த பூமான் நபியின் அணைப்பில் எங்கும் இருந்திடனும்
இதயத்தின் வேந்தரை உதயத்தில் ஏந்திய மண்ணாகும்
ஒரு சுவனத்தின் துண்டு மதீனத்தில் உண்டது மெய்யாகும்
உஹது மலை சமம் ஈமான் அங்கே உண்டாகும்
நம் உத்தம நபியை சுற்றும் இதயம் வண்டாகும்
மதீனத்து மண்ணை எடுத்து சுர்மா இட வேண்டும்
அந்த மகிமை பேற்றால் கண்கள் சுடரொளி பெற வேண்டும்
மதீனத்து தென்றலில் மனமுடன் குளித்து விடவேண்டும்
அந்த குளியலில் அடியேன் பாவங்கள் ஓடி விடவேண்டும்
கருணை நபிமேல் கோடி ஸலாம் மொழிந்திட வேண்டும்
எந்த காலமும் முழங்கும் ஸலவாத்தை செவி மடித்திடனும்
அருள் நபி மஸ்ஜிதில் ஸஜ்தா பல செய்திடவேண்டும்
அந்த ஆனந்தக் களிப்பில் அங்கேயே வாழ்ந்துயிர் விட வேண்டும்
பெற்றவர் உற்றவர் அனைவரை விட நபி மேலாகும்
இறை பேரருள் கொடையாம் உயிரை விட நபி மேலாகும்
படைப்புகள் யாவும் அழிந்தாலும் நபி புகழ் வாழும்
அந்த பெருமான் வாழும் மதீனா எந்தன் தலை போலும்என்
கருத்துரையிடுக