Noor Perambaloor:
வலிமார்கள் மீது மௌலித் ஓதுவதற்கு ஆதாரம்
♣ எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல் என்றார்கள்.
ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் புகாரி 5147, அபூதாவூத், திர்மிதி
♣ எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் போரில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிந்தார்கள்.
ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் மு அவ்வித் ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் புகாரி 3700, திர்மிதி :1010, அபூதாவூத் : 4276
♣ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிராத்தனை செய்து கவி படித்தார்கள். திண்ணமாக, வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வுமில்லை. இறைவனே! அன்ஸார் - முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹு
[8/8, 8:10 AM] Noor Perambaloor: ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 2622,2623,2741,3616
♣ நாங்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் ரழியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிந்தார்கள் (அவற்றில் ஒன்று) ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவுமிக்கவர்கள். ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணை பற்றியும் தவறாக பேசமாட்டார்கள்.
ஹழ்ரத் மஸ்ரூக் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 3831, ஸஹிஹ் முஸ்லிம் 4543
♣ இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக்கூறுங்கள்.
ஹழ்ரத் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 940, அபூதாவூத் 4254
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
நபிமார்களை நினைவு கூறுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூறுவது பாவ பரிகாரமாகும்.
அல்ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299
♣ ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். இறந்துபோன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்தீர்கள். எனவே, அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என கூறினார்கள்.
ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி எண் 1278, ஸஹிஹ் முஸ்லிம் 1578
[8/8, 8:11 AM] Noor Perambaloor: ஸஹாபாக்கள் ஓதிய மௌலித்
♣ ஹழ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:
1) இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.
2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545
♣ ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:
1) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஒதுகிறார்கள்.
2) குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3) இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 1087
♣ ஹழ்ரத் கஃப்
இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:
1) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2) மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம
[8/8, 8:12 AM] Noor Perambaloor: அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒப்புகொள்ளப்பட்டது.
3) திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும்,இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.
ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாகிம் - 6558
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களின் முகம் சந்திரனில் இருந்து (வெட்டி எடுக்கப்பட்டு) ள்ள ஒரு துண்டை போன்று (பேரொளியால்) பிரகாசிக்க துவங்கி விடும்.
ஹழ்ரத் கஹ்பு பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி 3556 , முஸ்லிம் 2769 , முஸ்னத் அஹமத் 3 - 459 , மிஷ்காத் 5798
♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முகம் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் வட்ட வடிவமாக இருந்தது.
ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹ் முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் 515
♣ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுகம் வாளைபோன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.
ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு )
ஸஹிஹுல் புகாரி 3552
♣ ஹழ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.'
திர்மிதி 3648, மிஷ்காத் 5795, முஸ்னத் அஹ்மத் 2-350
[8/8, 8:13 AM] Noor Perambaloor: ♣ ஸய்யிதத்துனா ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடத்தில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடைய நெற்றிக் கோடுகள் (மின்னலைப் போன்று) பளிச்சிடக் கூடியவைகளாக இருந்தன.
புகாரி 3555, 6770, 6771
♣ பறா இப்னு ஆஸிகப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் நபிகளாரைப்பற்றி வர்ணிக்கையில், 'அண்ணலார் அன்னவர்களை விட அழகான ஒருவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை' என்றும் அவர்களின் முகம் சந்திரன் போல் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.
(நூல்: புகாரி 4ம் பாகம், 165ம் பக்கம்)
♣ ஹழ்ரத் அபூ ஜூஹைஃபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருக்கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியை விட குளிர்ச்சியானதாகவும், கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகவும் இருந்தது.
ஸஹிஹுல் புகாரி 3553
♣ ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ரஸூலே கரீம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருவதனம் சூரிய, சந்திரனைப்போல் வட்ட வடிவமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் - 5779
♣ ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமூரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:
'சந்திரன் சூழ்ந்த இரவில் நான் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பார்த்தேன். பின்னர் சந்திரனையும் பார்த்தேன். (அச்சமயம்) கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது சிவப்பு நிறப்போர்வையொன்று இருந்தது. அப்போது அன்னவர்கள் சந்திரனை விட அழகாக இருந்தார்கள்.
திர்மிதி 2811, தாரமி 57, மிஷ்காத் 5794
[8/8, 8:13 AM] Noor Perambaloor: ♣ ஹழ்ரத் அபூஉபைதா இப்னு முஹம்மத் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நான் ருபய்யிஃ (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடத்தில், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'அருமை மகனே! அருமை நபி; (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை நீ பார்த்தாயானால், சூரியன் உதிப்பதாகவே காண்பாய் என்று கூறினார்கள்.
தாரமி 60, மிஷ்காத் 5793
♣ ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாள்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.
ஹாகிம் 6558
♣ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அ
ன்ஹூ) அவர்களுக்கு, பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள். அதிலே அவர்கள் ஏறி நின்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களையே புகழ்வார்கள்.
திர்மிதி 2773
♣ ஹழ்ரத் இப்னு ஜத்ஆன் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'கஃபு இப்னு ஸூஹைர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பள்ளிவாசலில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை புகழ்ந்து படித்தார்கள்.
ஹாகிம் 6555
♣ ஹழ்ரத் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கூறினார்கள்:
'(இறைமறுப்பாளர்களே!) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் அன்னவர்களை நான் புகழந்து படிப்பேன். அல்லாஹ்விடம் அதற்குரிய நற்கூலி உண்டு.
முஸ்லிம் 4545
[8/8, 8:15 AM] Noor Perambaloor: நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தங்களை புகழ்ந்து கூறிய ஹதீஸ்கள்
அல்லாஹூதஆலா தமக்கு வழங்கிய சிறப்புகளையும் உயர்வுகளையும் பற்றி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களே கூறிய அல்-ஹதீஸ்களில் சில:
♣ அல்லாஹூதஆலா அருள்களை என் கையில் கொடுக்கிறான். அவைகளை நான் பங்கீடு செய்கிறேன்.
ஸஹிஹுல் புகாரி 71
♣ பூமியிலுள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸஹிஹுல் புகாரி 1344
♣ நான் உங்களைப் போன்றவன் அல்ல. (அல்லாஹ்விடமிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது.
ஸஹிஹுல் புகாரி 1922
♣ மறுமை நாளையில் நான்தான் 'லிவாஉல் ஹம்து' எனும் புகழுக்குரிய கொடியை ஏந்தி நிற்பேன்.
திர்மிதி 3615, 3616, இப்னு மாஜா 4308, முஸ்னத் அஹ்மத் 2-243, தாரமி 47
♣ ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் முதற் கொண்டு அனைவரும் அதன் (லிவாஉல் ஹம்து கொடியின்) கீழ்தான் இருப்பார்கள்.
திர்மிதி 3615, 3616, இப்னு மாஜா 4308
♣ யார் என்னை கனவில் கண்டாரோ, அவர் என்னை விழிப்பில் காணுவார்.
ஸஹிஹுல் புகாரி 6993, முஸ்லிம், இப்னு மாஜா 3900, முஸ்னத், அஹ்மத் 5-306, மிஷ்காத் 4611
♣ எனது உள்ளங்கையைப் பார்ப்பது போல் உலகம் முழுவதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். (திர்மிதி)
♣ நிச்சயமாக நான் அல்லாஹூ தஆலாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்.
மிஷ்காத் 5800, தாரமி 15, ஸூபுல் ஈமான் 1446
♣ நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மக்களில் நான்தான் மிகவும் இறைபக்தி மிக்கவன். (நஸாஈ)
♣ நான் அல்லாஹ்வின்பாலிருந்து நற்குணங்கள் முழுமைப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளேன். (முஅத்தா)
♣மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில், மக்கள் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன்.
ஸஹிஹுல் புகாரி 6518
கருத்துரையிடுக