எழுத்து: அல்ஹாபிழ் V.M.முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய்
(*இஃதிகாப்*)
ரமளான் மாதம் வந்துவிட்டாலே மகிழ்ச்சியும்; சந்தோஷமும்- நம்மை வந்து ஒட்டிக் கொள்கின்றது. தொழுகை; நோன்பு;
ஜகாத் என- நல் அமலில் அதிகம் திளைத்து; அளம் பெரும் அருளை நாம் பெருகிறோம். ஆனால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும் மிக இலேசாக விட்டு விடுகிறோம்.
இஃதிகாப் ஒரு மஹல்லாவிற்கு ஒருவர் இருக்க; நம் மார்க்கம் சொல்ல-
ஊருக்கே ஒரு நபர் மட்டும் இஃதிகாப் இருக்கும் சூழ்நிலையை நாம் கான்கிறோம்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வை தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காக) தன் குடும்பத்தினர்களையும் எழுப்பி விடுவார்கள். (புகாரி)
ஆனால் இன்று நம் நிலைமை?
என்னப்பா? இன்னும் ட்ரஸ் எடுக்கலையா? கடைசி பத்து நாள்ல கலேக்ஸன்ஸ் நல்லா இருக்கும் அப்ப எடுத்துகுவோம்பா.
அப்பப்பா என்னா வெயிலு; என்னா வெயிலு; குடும்பத்தோட சேர்ந்து நைட்ல ட்ரஸ் எடுத்தாதான் நல்லா இருக்கும். (நபியகவர்கள் குடும்பத்துடன் தொழுதார்கள் என ஹதீஸ் இருக்க) நம்மாலு குடும்பத்தோட ட்ரஸ் எடுத்துட்டு வந்த கதைகளை நாம பார்த்துகிட்டு தான் இருக்குறோம்.
இப்படி நோன்பின் கடைசிப் பத்து நாட்களை செலவழிப்பதை விட்டு விட்டு- நல் அமல்களை செய்வதற்கு; பள்ளிவாயில்களில் இஃதிதாப்
இருப்பதற்கு நாம்முயற்சி செய்வோம்.
அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!
(*இஃதிகாப் இருப்பதின் நோக்கம்*)
அன்னை ஆயிஷா( ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமளானின் கடைசிப் பத்து நாளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள். லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என கூறுவார்கள்.
(புகாரி:2020)
(*இஃதிகாப் இருப்பதின் அவசியம்*)
ஹஜ்ரத் அபூஸயீதுல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் ரமளானின் முதல் பத்தில் இஃதிகாப் இருந்தோம். ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து; அடுத்த பத்திலே லைலதுல் கத்ர் இரவை தேடும்படி சொன்னார்கள். எனவே நாங்களும் நடுப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் பிந்திய பத்தில் லைலதுல் கத்ர் இருப்பதாக அறிவித்தார்கள்.
நபி (ஸலல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) 20-வது நாளின் காலையிலே என்னோடு யார் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் பிந்தைய இரவிலேயும் இஃதிகாப் இருக்கட்டும். ஏனெனில் நான் லைலதுல் கத்ரை பார்த்தேன். என்றாலும் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். இன்னும் அன்று நான் ஈர மணலில் ஸஜ்தா செய்வதாக கண்டேன் என கூறினார்கள்.
(நூல்:புகாரி)
*ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்*
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாப் இருந்தனர்.
(நூல்:புகாரி;2026)
(*இஃதிகாப் இருக்க சிறந்த இடம்*)
அப்துல்லாஹிப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஃதிகாப் இருப்பார்கள். இதன் அறிவிப்பாளரான நாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்-(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்து வந்த இடத்தை அப்துல்லாஹிப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் எனக்கு காட்டினார்கள்.
(நூல்:முஸ்லீம்
(*இஃதிகாப் இருப்பவருக்கு கிடைக்கும் நன்மைகள்*
ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரமளான் மாதத்தில் கடைசி நாள் யார் இஃதிகாப் இருக்கிறார்களோ; அவர்களுக்கு இரண்டு ஹஜ்-உம்ரா செய்த நன்மை உள்ளது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: பைஹகி)
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இஃதிகாப் இருப்பவர் பாவங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்றார். இவருக்கு அனைத்து வேளையும் நன்மையை செய்பவரின் கூலி போன்றதைக் கொடுக்கப்படும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அருளினார்கள்.
(நூல்:இப்னு மாஜா)
(*இஃதிகாபின் சட்டதிட்டங்கள்*)
1: ஐந்து நேரத் தொழுகை ஜமாஅத்துடன் நடைபெரும் பள்ளியில் இஃதிகாப் இருக்கிறேன் என்று நிய்யத் செய்து தங்குவதற்கு இஃதிகாப் எனப்படும்.
2: இஃதிகாப் மூன்று வகைப்படும்.
1: வாஜிப்
2: சுன்னதே கிஃபாயா
3: நபில்
(ரமளான் மாதத்தி
ன் பிந்தயை பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பது சுன்னதே கிஃபாயாகும்.)
3: இஃதிகாபின் பர்ளு:
குறிப்பிட்ட பள்ளிகளில்
தங்குவதாகும்.
(ஜும்ஆ பள்ளிகளில் இஃதிகாப் இருப்பது சிறந்தது)
4: இஃதிகாபின் ஷர்துக்கள்:
1: முஸ்லீமாக இருத்தல்.
2: அறிவுள்ளவனாக இருத்தல்.
3: இஃதிகாப் இருக்கிறேன் என
நிய்யத் செய்தல்.
4: ஜமாத் நடைபெரும்
பள்ளிகளில் இஃதிகாப்
இருத்தல்.
5: அசுத்தங்களை விட்டும்
தூய்மையாக இருத்தல்.
6: மாத விடாய்- பிள்ளை தீட்டில்
இருந்து சுத்தமாக இருத்தல்.
7: இஃதிகாப் இருக்கும் பெண்
சுன்னத்-வாஜிபான
இஃதிகாபில் நோன்பு வைத்தல்
(*இஃதிகாபின் நேரம்*)
ரமளானின் இருபதாம் நோன்பின் அஸருக்குப் பின்- சூரியன் மறையும் முன்- பள்ளியில் நுழைய வேண்டும்.
சூரியன் மறைந்த பின் பள்ளியில் நுழைந்தால் இஃதிகாப் ஆகாது.
முஸ்தஹப்பான இஃதிகாப்பாக ஆகிவிடும்.
பெருநாள் பிறை பார்த்தவுடன் இஃதிகாப்பை நிறைவு செய்தல்.
(*இஃதிகாபின் நிய்யத்*)
இறை பொருத்தத்தை நாடி இப்பள்ளியில் இஃதிகாப் இருக்கிறேன் என நிய்யத் செய்தல்.
(*இஃதிகாப் முறிப்பவைகள்*)
1: தேவையில்லாமல் பள்ளியை விட்டும் வெளியேறுவது.
2: பெண்களுக்கு மாதத் தொடக்கு;
பிரசவ தொடக்கு ஏற்படுவது.
3: உடலுறவு கொள்வது.
4: உடலுறவை தூண்டக்கூடிய காரியங்களை செய்வது.
(*பெண்களின் இஃதிகாப்*)
வீட்டிலேயே தொழகைக்கென தனி இடம் அமைத்துக் கொள்ளுதல்.
(அல்லது) ஒரு தூய்மையான இடத்தை குறிப்பாக்கி அவ்விடத்தில் இஃதிகாப் இருத்தல்.
கருத்துரையிடுக