✴நாம் அறிந்திராத✴
✴ஸஹாபாக்காள்✴
✴பகுதி:1✴
✳பயான் தொகுப்பு: H.A. அஹ்மத் அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்கள்✳
✳எழுத்து வடிவில்: V.Mமுஹம்மது ஜகரிய்யா யாஸீனிய்✳
✳அபானிப்னு ஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு)✳
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பூட்டனார் அப்துல் முனாப். அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் அப்துஷ் ஷம்ஸ். இவர்களின் வழித் தொடரில் வந்தவர்தாம் ஸயீத்.
இவர்களின் மகன் அபான் (ரலியல்லாஹுஅன்ஹு)அவர்கள்.
தந்தை ஸயீத் இஸ்லாத்திற்கு எதிராக; பத்ர் போர் களங்களில் கலந்து கொண்டு அலீ(ரலியல்லாஹு அன்ஹு) உபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் கொல்லப்பட்டு போனார்.
அபான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தன் ஆரம்ப கால கட்டங்களில் அபூஜஹ்ல் உடன் சேர்ந்து ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் தொல்லைகள் பல கொடுத்து வந்தனர்.
இப்படி இருந்த அவர்களின் வாழ்வில்; ஒருமுக்கிய நிகழ்வின் மூலம் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
ஒரு சமயம் யூத பாதிரியார் ஒருவரை சந்திக்க வெளியூர் செல்கிறார்கள்.
அபான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் பாதிரியார்-
உங்கள் ஊரில் தன்னை நபி என்று யாராவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்களா? ஆமாம் அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்.
ஒன்றுமில்லை! தெரிந்து கொள்வதற்குத்தான்!
அவர் எந்த கோத்திரம்?
எங்கள் குறைஷி கோத்திரம்தான்.
அவருடன் பெரிய குழப்பமாய் போய் விட்டது என்று அபான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வரிசையாக அடுக்க;
அவர் பெயர் என்ன? என்று பாதிரியார் கேட்கிறார்.
முஹம்மது என்றார்கள் அபான் (ரலியல்லாஹு அன்ஹு).
அம்முஹம்மதின்
முகம் இப்படி இருக்கும்.
தாடி இப்படி இருக்கும்
கை; கால்கள்; பற்கள்; கண்ணங்கள்;
பார்வைகள்; சிரிப்புக்கள்; என்று மாநபி தோற்றத்தை ஒன்று விடாமல் அடுக்கி வைக்கிறார் பாதிரியார்.
என்ன பாதர்! முஹம்மதை நேரடியாக பார்த்தது போலவே அவரின் அங்க அடையாளங்களை சரி வரச் சொல்கிறீர்கள் என அபான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கேட்க;
நான் சொல்லவில்லை; தவ்ராத்தும்;
இன்ஜீலும் சொல்லுகிறது.
நீர்! அவரை ஏற்பதும்; ஏற்காமல் இருப்பதும் உம் முடிவு. ஆனால்
எனக்கு ஒரு கடமையை மட்டும் செய்துவிடு. அம்முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நீர் பார்த்தால் இப்பாதிரியார் ஸலாம் சொன்னார் என மறவாமல் எத்தி வைத்து விடு என்று பாதிரியார் சொல்கிறார்.
வேதகங்களில் தெளிவாக சொல்லப்பட்ட ஓர் இறை தூதரிடமா நாம் சண்டயிட்டு வாழ்ந்து வந்தோம்;
இனி தாமதிக்காமல் இஸ்லாத்தை ஏற்க வேண்டியதுதான் என கருதி ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடிந்த கால கட்டங்களுக்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றனர்.
இவர்களை பஹ்ரைன் நாட்டின் கவர்னராக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆக்கினார்கள்.
திருநபியின் வபாத் செய்தி பல நாட்களுக்கு பின்னால்தான் இவர்களுக்கு கிடைத்தது.
உடனே மதீனா வந்து நபியின் ரவ்ழாவை தரிசித்தார்கள்.
மீண்டும் பஹ்ரைன் செல்ல அபுபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்ல;
மாநபி தந்த மணிமகுடமே போதும் எனச் சொல்லி மதீனாவிலேயே தங்கினார்கள்.
உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் நடந்த யர்மூக் போரில் கலந்து கொண்டு வீர ஷஹீத் ஆனார்கள்.
கருத்துரையிடுக