ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை
திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்றல் நடப்பதில்லை.
சங்கை நபிகள் அங்கம் முன்னே தங்கம் ஜொலிப்பதில்லை.
அண்ணல் நபிகள் அருகே இருந்தால் அத்தர் மணப்பதில்லை
கன்னல் நபியின் கருத்தை சுவைத்தால் கரும்பும் இனிப்பதில்லை.
பூமான் நபிகள் பொன் மொழி முன்னே புத்தகம் நயப்பதில்லை
கோமான் நபிகள் கூட நடந்தால் குடையும் தேவையில்லை.
ஏகன் தூதர் குரலை கேட்டோர் (2) இசையை ரசிப்பதில்லை
தாஹா நபியிடம் பழகிய குழந்தை தாயிடம் செல்வதில்லை.
மன்னர் நபிகள் வசிக்கும் பேறை மாளிகை பெறவில்லை.
தன்னோடிருக்க ஏழ்மையை தவிர வசதியை விட வில்லை.
பெருமான் நபிகள் எழுதும் பேறு பேனா பெறவில்லை.
உண்மை நபிகள் படிக்கும் பாக்கியம் நூற்கள் பெறவில்லை.
வள்ளல் நபிகள் வணங்கும் நேரம் வான் மழை பெய்வதில்லை
அள்ளிக் கொடுத்த கரத்தைப் பார்த்து ஆகாயம் சிவப்பதில்லை
பாச நபியின் வயிற்றை முழுதாய் உணவே பார்த்ததில்லை
காஸிம் நபியின் வீட்டில் இருக்க காசுக்கு தகுதியில்லை.
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை.
( கவி; S.ஹுஸைன் முஹம்மது ஆலிம் )
( ஜம்யிய்யதுல் உலமா சபை )
கருத்துரையிடுக