*யார் இந்த தக்கலை ஞானமாமேதை?*
தமிழில் முதல்முதலாக குர்ஆனின் சூரத்துல் பாத்திஹாவை மொழிபெயர்த்த பெருமை சூபிஞானி பீர்முகமதுவையே சேரும். இது 400 ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ 17-ம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளது.
இன்னும் அவ்வல்கலிமா, பிஸ்மி, சூரத்துல் இக்லாஸ் , ஹதீசுகளின் சாராம்சம், ஆதம்நபி, தாவூத்நபி, சுலைமான்நபி, யூசுபுநபி, இபுராகீம்நபி, முகமதுநபி என நபிமார் வரலாறுகள், முன்கர்நகீர், மலக்குமார்கள் பிரபஞ்சம், மனிதப்பிறப்பு சார்ந்த பதிவுகள் பிக்ஹ÷ சட்டங்களின் நுணுக்கங்கள்அரபு கலாச்சாரங்களில் தென்படாத இந்திய, தமிழக கலாச்சார, மூச்சுப்பயிற்சி சரக்கலைதத்துவக் கூறுகள் என பீர்முகமது அப்பாவின்வின் படைப்புலகம் விரிந்துகிடக்கிறது.
.
குரானின் தோற்றுவாய்
அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன் வசனங்கள் ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் மூலமாக நபிமுகமது(ஸல்) விடம் வெளிப்பட்ட காலம் கி.பி. 610 முதல் 632 வரையாகும். முதல் வசனம் வெளிப்பட்டு 40 ஆண்டுகள் கழித்தும் நபி முகமது(ஸல்) மரணத்திற்கு பிறகு இருபது ஆண்டுகள் முடிந்த பிறகு கலிபா உதுமானின் காலத்தில் திருக்குர்ஆன் இறுதி செய்யப்பட்டது.
குர்ஆனை தர்ஜுமா செய்தலை மொழிபெயர்ப்பு செய்வதாகவும் தப்சீர் எழுதுதலை விளக்கவுரை எழுதுவதாகவும் புரிந்து கொள்ளலாம்.
குர்ஆன் மொழிமாற்றம்
அரபு மொழியில் இருந்து குர்ஆன் முதன்முதலில் பார்சியிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டது. கி.பி. 700க்கு முன்பதாக சல்மான் அல்பார்சி சூரத்துல் பாத்திஹாவை மொழிமாற்றம் செய்துள்ளார்.
கி.பி. 1143ல் மேற்கத்திய லத்தீன் மொழியில் ராபர்ட்ஆப் கெட்டன் குர்ஆனை மொழிமாற்றம் செய்தார். 1543ல் தியோடர் பிலியாண்டர் லத்தீனில் திரும்பவும் பதிப்பித்தார். கி.பி. 1647ல் பிரெஞ்சுமொழியில் அன்டெர் டியூ ரேயர் மொழிபெயர்த்தார்.
ஆங்கில மொழியில் கி.பி. 1649ல் அலெக்ஸôண்டர் ரோஸ், 1734ல் ஜார்ஜ் சேல், 1937ல் ரிச்சர்டு பெல், 1955ல் ஆர்தர் ஜான் அர்பெர்ரி ஆகியோர் குர்ஆனை மொழிமாற்றம் செய்தனர். இந்த அறிஞர்கள் அனைவரும் இஸ்லாம் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அறிஞர்கள் என்ற வகையில் 1917ல் மௌலானா முகமது அலி, 1937-ல் அப்துல்லா யூசுப் அலி, 1936ல் மர்மதுக் பிக்தால் ஆகியோர், குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இதற்கு பிறகான காலங்களில் மிர் அகமது அலி (ஷியா பிரிவு) முகமது முஷன்கான் (சலபி பிரிவு) ஷாவலியுல்லா (சூபி பிரிவு) மற்றும் ரஷாத்கலிபா (அஹ்லெகுர்ஆன்) வரையிலும் ஆங்கில மொழியாக்கங்களை தொடர்ந்து செய்துள்ளனர்.
தற்போது ஆங்கிலத்தில் துருக்கிய இஸ்லாமிய அறிஞர் எடிப்யுக்செல், லாயத்சலா அல்சைபான், மர்த்தா ஸ்கூல்ட் நாபி என ஒரு பெண் அறிஞர் உள்ளிட்ட மூவரின் மொழிபெயர்ப்பில் இறையை பாலின அடையாளமற்றதாக புரிந்து கொள்ளவும் மேற்கின் எதிர் விமர்சனங்களுக்கு மாற்றாகவும் தணிக்கை செய்யப்பட்ட நிலையில் குர்ஆன் ஒரு சீர்திருத்த மொழியாக்கம்(Quran A Reformistic Translation) வெளிவந்துள்ளது.
தமிழில் குர்ஆன்
முதன்முதலில் பாத்திஹாசூராவை முன்னூறுஆண்டுகளுக்கு முன்பு தமிழ்படுத்தியது பீர்முகமதுஅப்பா. பின்னர் ஞானியார்சாகிபு,வேதபுராணம் எழுதிய நூஹுலெப்பை என இந்த மரபு தொடர்கிறது.
முப்பதாண்டுகளுக்குமேல் உழைத்து முப்பது ஜுசுவையும் தமிழில் மொழியாக்கம் செய்தவர் ஆ.கா.அப்துல்ஹமீது பாகவி. இது 1948ல்தான் சாத்தியமாகியது.
ஆ.கா. அப்துல்ஹமீது பாகவியின் தப்ஸீரே தர்ஜுமதுல் குர்ஆன் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பின் விரிவுரையாக முதன்முதலில் வெளிவந்தது. மெள்லானா எம். அப்துல்வஹாப் (ம) கே.ஏ. நிஜாமுதீன் மன்பயீ கூட்டு மொழி பெயர்ப்பு, 1983-ல் முகம்மது ஜான்டிரஸ்ட் வெளியீடான குர்ஆன் மஜீத் திருக்குர்ஆன் மூலமும் தமிழ் உரையும், 1996-ல் ஐஎப்டி நிறுவனம் வெளியிட்ட மௌலானா சையித் அபுல்அலா மெளதூதியின் தமிழ்மொழி பெயர்ப்பும் விரிவுரையும், 2002-ல் குர்ஆனின் தமிழாக்கம் மற்றும் விளக்கங்களுடன் வெளிவந்த மௌலவி பி. ஜைனுல் ஆபிதீனின் மொழிபெயர்ப்பு, 2008-ல் வெளிவந்த எகிப்தின் இஸ்லாமிய அறிஞர் ரஷாத்கலீபாவின் குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு விரிவுரை என இவற்றை வரிசைப்படுத்தலாம்..
அரபு, தமிழ் இருமொழிப் புலமை மிக்க அறிஞர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். மதரஸாக்கள் என்னும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் மிகுந்த வலிமையோடு செயல்படுவதே இதற்கு காரணம். எனவே அரபு மொழியிலிருந்து தமிழுக்கு குர்ஆனை ஹதீஸ்களை, குர்ஆன் விளக்க உரைகளான தப்சீர்களை மொழிபெயர்த்தும் வருகின்றனர். சிலர் வணிகப் பொருளாக உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
ஆனால் இத்தகையதான வணிக நோக்கு எதுவுமின்றி தொடர்பு ஊடகங்கள் எதுவும் இல்லாத காலத்தில் பீர்முகமது வலியுல்லா திருக்குர்ஆனின் பாத்திஹா சூராவை ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் எவ்வாறு படைத்துள்ளார்கள் என்பதை இங்கு கவனப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
ம
ொழிபெயர்ப்பு இரு வகைப்பட்டது…
மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள பாடத்தை சொல், இலக்கணம், நடை, பேச்சுத் தன்மை தொடர் நிலைகளில் ஆய்வு செய்து மறு வடிவமைப்பு செய்து இன்னொரு மொழிக்கு மாற்றித் தரும் படைப்பாக்க முறையாகும்.
இது இரு வகைப்பட்டது. முதல் வகை உருவ ஒத்திசைவு இணை காணல் முறையாகும். இது வரிக்கு வரி, வாக்கியத்திற்கு வாக்கியம் அப்படியே மூலமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதாகும்.
இரண்டாவது வகை உள்ளடக்க ஒத்திசைவு இணை காணல் முறை என்பதாகும். இது மூலமொழியின் அதே உள்ளடக்கத்தை சாரமாக உள்வாங்கி மாறுபட்ட சொல், தொடர்களால் இன்னொரு மொழியில் மறுவடிவமைப்பு செய்வதாகும்..பீர்முகம்மது வலியுல்லாவின் மொழிபெயர்ப்பு முறையியல் உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை சார்ந்ததாகும்.
குர்ஆனின் தோற்றுவாய் சூரத்துல் பாத்திஹா
அரபு மூலமும் வசன மொழிபெயர்ப்பும் (உருவ ஒத்திசைவு)
அல்ஹம்துலில்லாகி (எல்லா புகழும் அல்லாவுக்கே), றப்பில் ஆலமீன் (அவன் அகிலத்தை (படைத்து) பராமரிப்பவன்,) அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), நிர்ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்), மாலிக்கி யெளமித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி), ஈயாக்க நகுபுது (உன்னையே வணங்குகிறோம்), வஇய்யாக்க நஸ்தகீன் (உன்னிடமே உதவியும் தேடுகிறோம்), இஹ்தின சிறாத்தல் முஸ்தகீம் (எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக), சிறாத்தல் அதீன அன்அம்த அலைகிம், கைறில் மகுலுபி அலைகிம் வலல்லாலீன் (உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாதவர்கள் நெறிதவறிப் போகாதவர்களின் வழி) ஆமீன்.
பீர்முகமது அப்பாவின்
கவிதை மொழிபெயர்ப்பு (உள்ளடக்க ஒத்திசைவு)
அல்ஹம்துலில்லாகி அனைத்தும் புகழ்வதை கபூல் செய் எல்லா திக்றுள்ளுறையும் ஏகனே - சொல்லந்த மேலும்
றப்பில்ஆலமீன் என்னிறைவ நீ ஆலமனைத்தும்
படைத்தாள்வோனே கோலமுடன்
அர்ரஹ்மான் என்றுலகில் அனைவர்க்கும் ஷபாஅத்திலொரு குறைபகராக் கிருபை தருங் கோமானே இறைவனுன்னை நின்று தெரிசிப்பவர்க்கு
நிர்ரஹீம் எனும் பழைய நன்றி கிருபை தரு நல்லோனே
என்றுமுயர்-ஏவலுறு
மாலிக்கி யெளமித்தீன் என்றடியார்க் காவலுறுங் கூலி
கொடுத்தாள் பவனே காவல்தரும் நிய்யாகும் என்றுலகில்
நின் சரணந்தொழுமவரோ
ஈயாக்க நகுபுது என்றேத் திறையே
வஇய்யாக்க நஸ்தகீன் என்று மிக நல்லுதவி தேடுமவர்
கஸ்திபோக்கிப் பதவி கண்போனே- விஸ்தி நலம்
எட்டணுகும் பெரியோர்க்கு
இஹ்தின சிறாத்தல் முஸ்தகீம் என்றொட்டு கடும் பாலத்துதவும்
பொருளே- பட்டுடையோர்க்கிரங்கி
சிறாத்தல் அதீன என்றருளு மெய்ஞானத் துரங்களறிந்
தீடேற்றுந் துய்யோனே þ வரங்கள்தரும்
அன்அம்த என்றொலி மார்க்காக வரு நிஃமத்திலொன்
றுன்னந்த மீந்தருளும் உத்தமனே
அன்அம்த அலைகிம் எனவே,
அவுலியாக்களொடு எங்களை நீ சலுகையுடன்
கூட்டியருள் தருவோனே பலவிதமாய் சதிகள அநியாயஞ்
செய்வோர் தம்முடன் கூட்டாமலே
கைறில் மகுலுபி என்றும் காப்பவனே தெரியுநலவாம்
அவுலியாக்களுடன் அடியேனையுஞ் சேர்த்து நேமநபியோ டெமதுள் நிற்பவனே யோமதனுள் ஒளிகள் தெரிசித்துணரா
வலல்லாலீன் என்றுன் வழி பிழைத்தாரோடு வருத்தாதவனே
தெளிவுறுதல் மூமின்களையும் பல் முசுலீமோ டெங்களையும்
ஆமீன் என்ற வழிதனில் ஆக்கு அல்லாவே.
1)இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா. அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும்.
2)இஸ்லாத்தின் அடிப்படைகளான அவ்வல் கலிமா ஷஹாதத் கலிமா,
99 இறைத்திருநாமங்கள் அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்முல் அக்ளம் பிஸ்மியின் தத்துவார்த்தவிளக்கம்,தன்ஸுலாத்பிரபஞ்சஉருவாக்கம்,உயிரின்தோற்றம்,
நபிமுகமது(ஸல்)வின்மாண்பு,ஆதம்நபி,நூஹூநபி,மூசாநபி,இபுராகீம்நபி,யூனூஸ்நபி,
யூசுப்நபி,எனநபிமார்களின் வரலாறு(பாடல்கள் 215 முதல் 225 முடிய) ஹதீஸ்மொழிகள்,என பல்வேறுவகைப்பட்ட இஸ்லாமிய மரபுகளை தமிழில் அற்புதமாக ஞானப்புகழ்ச்சியில் எடுத்துரைத்தது பீர்முகமது அப்பா .
3)பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐயாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கி.பி.1570/1670க்கு இடைப்பட்ட காலத்தில் உருவான இப்பாடல்களில் 4982 மட்டுமே தற்போது அச்சுப் பிரதிகளாக கிடைக்கின்றன
4)ஒற்றை வாசிப்பு முறைக்கு எதிரான பன்மைவாசிப்பை(multiplicity of meaning) உருவாக்கினால்தான்பீர்முகமதுஅப்பாபயன்படுத்தியிருக்கும் சக்தி,சிவன்,அங்கரன்,பஞ்சாட்சரம்,முகமாறுஎன அனைத்து யோக,பரிபாஷை சொற்களையும்,குறியீட்டு மொழிபற்றியும் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும்.
5) பீர்முகமது அப்பாவின் சில பாடல்களது பொருளை நெருங்க வேண்டுமானால் பழந்தமிழ் சங்க
இலக்கியம், 2-ம் நூறாண்டில் துவங்கும் வள்ளுவம் போன்ற சமண பெளத்த இலக்கியம்,7ம் நூற்றாண்டிற்கு பிறகான சைவ, வைணவ இலக்கியங்கள் வழியாக பல்சமயச் சூழல்தன்மையோடு பயணம் செய்ய வேண்டும்.
6)அரபுசொல்வரலாறு(அலிப்,பே,லாம்,ஹே,சீன்,நூன்,போன்றவை)அரபுமொழிச்சொற்கள்(தவக்கல்,தறஜாத்து,லவ்ஹு,ஷபாஅத்,அக்ல்,யகீன்,போன்றவை)அரபு மொழிக் கட்டமைப்பு(அவ்வல் அஹதாக நின்றமரம்/கொத்தாயிரங்கனியே ஹூ/துலங்கு ஷஹாதத்து,அத்தஹியாத்தும் மிக்கோர் புகழ்நபி சலவாத்தும் போன்றவை) தமிழோடு இணைத்து வாசித்து புரிந்திருக்க வேண்டும்.
7)இந்தியதத்துவமரபின் அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,வேத மறுப்புத் தத்துவங்களானசாங்கியம்,சாருவாகம்,உலகாயதம்,ஆசீவகம்,சித்தர்மபு
வாசித்திருக்கவேண்டும்.இஸ்லாமியசட்டவியல்ஷரீஅத்,ஆன்மீகவியல்தரீகத்,ஹகீகத்,மஹரிபத்,வஹ்த்துதுல்உஜூத்,வஹ்த்துல்ஷுஹுத்,உலூஹிய்யத்,ருபூபிய்யத் இவற்றின் துணையின்றி பீர்முகமது அப்பாவின் சில பாடல்களை பொருள் கொள்ள முயல்வது மிக கடினம்
8)இவை அல்லாத மிக எளிமையான தமிழிலும் மனிதகுலம் முழுமைக்கும் பிரார்த்தனைபுரிகிற
பீர் முகமது அப்பாவின் பாடல்களில் இறை நேயம் வழி வெளிப்படுகிற மானுட நேயம் என்பது கொடுமுடி.
நன்றி
பீர்முகமது அப்பாவின் குர்ஆனிய உரையாடல்
ஹெச்.ஜி.ரசூல்
வாழ்க வளமுடன் நாக/பெங்
கருத்துரையிடுக