+91 97861 00691 : ...
ரூஹ் மற்றும் உயிர் பற்றி ஒரு விஞ்ஞான விளக்கம்...!!
السلام عليكم ورحمة الله وبركاته
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..!!
ஏக இறைவனின் சாந்தியும்.,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக...!!
உலகிலுள்ள மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் ஏன் ஜின்கள், மலக்குகள் என அனைத்தையும்விட மனிதன் உயர்ந்தவனாக இருப்பதன் காரணம் அவனில் ஊதப்பட்டிருக்கின்ற #ரூஹ்தான்.
இவ்வுலகில் மனிதனின் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்று வகையான அம்சங்களால் ஆனவன். உடலை பொறுத்தவரை அதனை எமக்கு இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும் உயிர்.,ஆன்மா என்பன விளங்கிக்கொள்ள சற்று சிக்கலானவைகளாகும். இன்றைய சடவாத மேற்கு உலகம் உடலையும், உயிரையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆன்மாவை மறுக்கிறது. அதனால்தான் ஆன்மீகம் இல்லாத அறிவியலை மேற்கு வளர்த்து வருகின்றது.
ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன?
“ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன?” என்ற கேள்வி இன்று மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களது காலத்திலும் இருந்துள்ளது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஒரு முறை நான் மதீனாவில் நபியவர்களுடன் ஒரு வேளான்மை பூமியில் இருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை நாம் கடந்து சென்றோம். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து “அபுல் காஸிமே ரூஹ் என்றால் என்ன என்று எமக்கு அறிவியும்” என்றார். நபியவர்கள் மவுனம் ஆனார்கள். அவர்களுக்கு இறைவனிடமிருந்து செய்தி (வஹி) அறிவிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். (வஹி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் நிதானித்த பின்னர் நபிகளார் பின்வரும் திருமறை வசனத்தை அந்த யூதருக்கு ஓதிக் காண்பித்தார்கள்.
“وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِ قُلِ ٱلرُّوحُ مِنْ أَمْرِ رَبِّى وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلْعِلْمِ إِلَّا قَلِيلًا”
“நபியே உம்மிடம் அவர்கள் ரூஹை பற்றி கேட்கிறார்கள். ரூஹ் என்பது என் இறைவனுடைய கட்டளையிலிருந்து உள்ளதாகும். அது பற்றி உமக்கு மிக சொற்ப அறிவே அன்றி நாம் வழங்கவில்லை என்று நீர் கூறும்” (17:85)
"ரூஹ்" என்பது உயிரல்ல. நாம் கூட உயிரும் ரூஹும் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் ரூஹ் என்பது வேறு உயிர் என்பது வேறு. அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு ரூஹ் பற்றி அல்லாஹ் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்து பார்த்தாலே போதும் ரூஹும் உயிரும் வேறுபட்ட இரண்டு அம்சங்கள் என்பதை அறிய முடியும். இங்கு ரூஹ் மற்றும் உயிர் என்பன எவ்வாறு வேறுபடுகின்றன என்பதற்கான சில ஆதாரங்களைப் பார்ப்போம்.
1. “வளர்கின்ற அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது” என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கின்றது. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தும் வளர்கின்றன. எனவே அவற்றுக்கு உயிர் உள்ளதென்பதை எம்மால் விளங்க முடியும். அப்படியாயின் ஒரு பெண்ணின் சினை முட்டையும் ஆணின் விந்தனுவும் ஒன்று சேர்ந்ததிலிருந்து 42 ஆம் நாள் ஆகும் வரை அக்கரு வளர்ச்சியடைகின்றது. வளர்ச்சியடைகின்றதென்றால் அதற்கு உயிர் இருக்கின்றது என்று பொருள். நபி (ஸல்) அவர்களது ஹதீஸின் படி 42 ஆம் நாளில் அல்லாஹ் ஒரு வானவரை அழைத்து அவ்வானவரிடம் ஒரு ரூஹைக் கொடுத்து அதனை குறித்த தாயின் கருவறையில் உள்ள சிசுவில் கொண்டு சேர்க்குமாறு கட்டளையிடுகின்றான். தற்போது சற்று சிந்தியுங்கள். கரு 42 ஆம் நாள் ஆகும்வரை வளர்ச்சியடைகின்றது எனவே அதற்கு உயிர் இருக்கின்றது. 42ம் நாளில்தான் ரூஹ் ஊதப்படுகின்றது. அப்படியாயின் உயிரும் ரூஹும் வெவ்வேறு பொருள்கள் என்பது தெளிவாகிறது.
2. நாம் உறக்கத்திற்குச் செல்லும்போது அல்லாஹ் எமது ரூஹை எம்மைவிட்டும் உயர்த்துகின்றான். ஆனாலும் உடலுக்கும் ரூஹிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கும். யாருடைய அஜல் இன்னும் உள்ளதோ யார் மீண்டும் விழித்தெழ வேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அவரது ரூஹை அல்லாஹ் அவ்வுடலுடன் சேர்த்துவிடுவதாகவும் யாரது அஜல் முடிகின்றதோ யார் விழித்து எழக்கூடாதென இறைவன் நாடுகின்றானோ அவரது ரூஹை அப்படியே தன்பக்கம் எடுத்துக்கொள்வதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் 39:42/6:60 கூறுகின்றான். அப்படியாயின் உறக்கத்திலும் எமது இதயம் தொழிற்படுகிறது. நாம் அசைகின்றோம், சுவாசிக்கின்றோம். ஏனெனில் ரூஹ் உயர்த்தப்பட்டாலும் உயிர் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது. எனவே ரூஹும் உயிரும் வெவ்வேறு என்பது இதிலிருந்து விளங்குகிறது.
3. எமது மரணத் தருவாயில் மலக்குல் மௌத் அவர்கள் வருகை தந்து ரூஹை கைப்பற்றிக்கொண்டு வானத்தை நோக்கி உயர்ந்து செல்வார்கள். அப்போது அந்த ரூஹ் செல்லும் திசையை எமது பார்வை பின்தொடர்வதாக அல்குர்ஆன் கூறுகின்றது. ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருக்கின்றதென்பதை இதிலிருந்து அறிய முடியும். உடலில் உயிர் இருப்பதால்தான் கண்கள் பார்க்கும் தொழிலைச் செய்கின்றன. ரூஹ் பிரிந்ததும் மரணித்தவரது கண்களை மூடிவிடுவது நபிகளாரின் சுன்னாவாகும்.
4. கண் தானம், இதய தானம், கிட்னி தானம
் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான உறுப்பு தானங்கள் செய்வது மரணித்ததன் பின்னர்தான். இங்கு மரணித்ததன் பின் என்பது ரூஹ் கைப்பற்றப்பட்ட பின், உயிர் பிரிய முன் என்பதாகும். ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருப்பதால்தான் உறுப்புக்கள் வேரறுக்கப்படுகின்றன. உடல் உஷ்னம் தனிய முன்னர் உறுப்புக்களை மாற்றவேண்டும் என்று நாம் கூறுவது இதனைத்தான். ஆக இங்கும் உயிர் வேறு ரூஹ் வேறு என்பது அழகாகத் தெரிகின்றது. உடலில் இருந்து உயிர் படிப்படியாகப் பிரிந்து தொண்டைக் குழியால் வெளியேறும் காட்சியை நவீன மறுத்துவத் தொழில்நுட்பம் Thermal imaging camera மூலம் படம்பிடித்துள்ளனர்.
ரூஹ் பிரிந்தாலும் உடலில் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு உயிர் இருக்கின்றது. அதனால்தான் அந்த ஜனாஸா வானவர்களால் ரூஹ் சுமந்து செல்லப்படுவதை பார்ப்பதாகவும் அவ்வுடலை மண்ணறை நோக்கிக் கொண்டு செல்லும்போது அது நல்ல மனிதனாக இருந்தால் விரைவாக கொண்டு செல்லும்படியும் கெட்ட மனிதனாக இருந்தால் மண்ணரைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் உரக்க கத்துவதாகவும் நபிகளார் கூறினார்கள். மண்ணரையில் அடக்கம்செய்துவிட்டு நாம் நடந்துவரும் காலடி ஓசைகள் கூட அவ்வுடல் கேட்கின்றது என்றார்கள். ஜனாஸாவை வீட்டில் மக்கள் பார்வையிடும் போதும், அதனைக் குளிப்பாட்டும் போதும், கபன் செய்து தொழுகை நடத்தும்போதெல்லாம் அவ்வுடலில் உயிர் இருப்பதால் அது சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்ளவும் கூடும். அல்லாஹ்தான் அனைத்தையும் அறிந்தவன். இதனோடு தொடர்பாக நபியவர்களது பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூறுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
அபூ தல்ஹா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
பத்ர் போரன்று நபி (ஸல்) அவர்கள் 24 குறைஷி தலைவர்களின் சடலங்களை நாற்றம் படித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபியவர்கள் போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது வழக்கம். அவ்வாறே பத்ர் போர் முடிந்த பின் அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தை தயார்செய்துகொண்டு தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அவர்களை அவர்களுடைய தகப்பனாரின் பெயரை கூறி அழைத்து “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எமது இறைவன் எமக்கு வாக்களித்ததை நாம் உண்மையாக கண்டுகொண்டோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் கண்டுகொண்டீரா?” என்று கேட்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே ரூஹ்களற்ற சடலங்களிடம் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை” மற்றுமொரு அறிவிப்பில் “அவர்களைவிட நீங்கள் கேட்கும் ஆற்றல் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் அளிக்க முடியாது” என்றார்கள்.
ஆதாரம் : (புஹாரி, முஸ்லிம், மிஷ்காதுல் மஸாபீஹ் 2/345)
ரூஹ் பிரிந்து குறிப்பிட்ட சில நேரங்கள் வரைதான் உயிர் உடலில் இருக்கும். உயிர் இருக்கும்போது அவற்றால் செவிமடுக்க முடிந்தாலும் உயிர் பிரிந்து மரித்தபின் ஒருபோதும் அவற்றால் செவிமடுக்கவும் முடியாது. யாராலும் செவிமடுக்க செய்யவும் முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் :
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படி செய்ய முடியாது” (27:80)
எமது ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனால் உயிர் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது உயிரை தியாகம் செய்யவேண்டும். உயிரை தியாகம் செய்தால் அதற்கு பகரமாக அல்லாஹ் எமது ரூஹிற்கு சுவனத்தை தருவதாக வாக்களித்துவிட்டான். கவனியுங்கள்....
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும் செல்வங்களையும் அவர்களுக்கு சுவனம் நிச்சயமாக உண்டு என்ற ஒப்பந்தத்தில் விலைக்கு வாங்கிவிட்டான் (9:111)
ரூஹை படைத்த ஆரம்ப நிலை :
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்துவிட்டு தனது ரூஹிலிருந்து முதலில் அவரது உடலுக்கு ஊதுகின்றான். தனது ரூஹ் செலுத்தப்பட்ட உடல் என்பதற்காக அல்லாஹ் ஆதமை கண்ணியப்படுத்தி அவருக்கு ஸுஜுத் செய்யுமாறு மலக்குகளைப் பணிக்கின்றான். இது பற்றி திருமறை இவ்வாறு பகர்கின்றது.
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும் அவரை நான் செவ்வையாக உருவாக்கி அவரில் என் ரூஹிலிருந்து ஊதியதும் அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். (15:30) (38:71) (32:09)
தாயகம் நோக்கிய ரூஹின் ஆறு க
கருத்துரையிடுக