27/03/2018

தப்லீக் ஜமாத்தின் தஃலீம் கிதாப் படிக்கலாமா?


தப்லீக் ஜமாஆதின் 'தஃலீம் கிதாப்' படிக்கலாமா? அதுவும் விஷேசமாக பள்ளிவாசலில்

♦ இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் பரவலாகப் பலராலும் பேசப்படுகின்ற ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத் ஆகும் . நபிமார்கள் செய்த வேலையை வழி காட்டும் ஒரே வழிகாட்டி தப்லீக் ஜமாஅத் என அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் மக்களிடத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் . பலரும் இதன் பெயரினைக் கேட்டு அதன் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அதனை உண்மையான நேர்வழி பெற்ற இயக்கம் எனக் கருதி அதன் பின்னே செல்ல முற்படுகின்றனர். மேலும் தப்லீக் ஜமாஅத் அமைப்பினர்கள் 'தஃலீம் கிதாப்' வைத்திருப்பார்கள் இந்த நூலில் உள்ள விடயங்கள் குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் முறனான செய்திகள் உள்ளன, ஆகவே வெளித் தோற்றத்தை கண்டு ஏமாந்து ஈமானை இழந்து வழி தவறிவிட வேண்டாம். 

♦ ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள் 'ஃபளாயிலே அஃமால்'என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. அத்தொகுப்புப் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் அல்லாஹ்வின் சில பள்ளிகளில் படிப்பில் இருக்கிறது. தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயரில் 'அமல்களின் சிறப்புகள்' என்பதாகும். ஆகவே நூல்களைப் படிப்பதையும் உரைகளைக் கேட்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால், செயல்பாட்டைப் பொருத்தவரை படிப்பதையும் கேட்பதையும் சிந்தித்துச் செயல்படுமாறு கட்டளையிடுகின்றது. 
நன்மை - தீமையைப் பிரித்தறிந்து செயல்படுவதற்காகவே மனிதனுக்குப் பகுத்தறிவு வழங்கப் பட்டுள்ளது. 

♦'அமல்களின் சிறப்புகள்' என்ற தொகுப்பில் வழிகெட்ட ஸக்கரியா ஸாஹிப் என்பவரைப் பற்றியும், அவர் கூறிய கருத்துக்களும் இஸ்லாதுக்கு முறனான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில இட்டுக்கதைகளை வழிகெட்ட தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் சேர்த்துள்ளார்கள். தங்கள் சிந்தனைக்காக அவைகளை சுருக்கமாக இங்கு கீழே தந்துள்ளேன். ஆகவே வழிகெட்ட ஸக்கரியா ஸாஹிப் என்பவர் வஹ்ஹாபிக் கொள்கையில் உள்ளவர். குர்ஆன், ஹதீஸ்களுக்கு விளக்கம் என்ற பெயரில் பாமர மக்கள் மத்தியில் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணாக விளக்கம் கூறிக்கொண்டு மக்களை வழிகெடுக்க வந்தவர். இப்படிப்பட்ட கொள்கை சரியில்லாதவர்களின் நூல்களை படித்து நாமும் வழிகெட்டு, மற்றவர்களையும் வழிகெடுக்காமல் அந்த நூல்களை படிப்பதை விட்டு விட்டு புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை படித்து நாமும் நேர்வழி பெற்று மற்றவர்களையும் நேர்வழி படுத்துவோம். 

1)கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தார்கள்.
(பக்கம் 943)

2)கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கினார்கள.
(பக்கம் 925)

3)அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657)

இதுபோன்ற அனைத்தும் ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்டது என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கிக்கொள்ள முடியும் . ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு. ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தின் நிலமை தலைகீழாகதான் இருக்கின்றன.

♦ அஷ்ரஃப் அலீ தானவி என்பவர் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத்(ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்' என்று சொல்ல முயல்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ் என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் 'அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி' என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார். அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்கள். 

இந்தப் பிரச்சினை அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்படி ஃபத்வா மார்க்கத்துக்கு முரணானது; குப்ரை ஏற்படுத்தக் கூடியது; எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரஃப் அலி தானவியின் பத்வா சரியானதே என ஸக்கரிய்யா ஸாஹிப் நியாயப்படுத்தி எழுதியுள்ளார். ஆகவே தப்லீக் பெரியார்களுக்குப் புனித பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் பல இட்டுக்கதைகளையும வேறு சில நூல்கள் மூலம் புனையப்பட்டுள்ளன. 

♦ "இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று தப்லீக்கின் அடிப்படைகளை வஹீ மாதிரி ஷேக் இல்யாஸ் கூறுகின்றார். இதற்கு விளக்கமாக மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி, "அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்" என்கிறார். இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம். 
(தப்லீக்கே தஹ்ரீக், பக்கம் 57). 

♦ தப்லீஃக் ஜமாஅத்திற்கு மவ்லவி இல்யாஸ் சாஹிபுக்குப் பின்னர் அவரது மகன் மவ்லவி யூசுஃப் சாஹிப் அமீராக இருந்தார். அவருக்குப் பின் மவ்லவி இன்ஆமுல் ஹஸன் இருந்தார். அவருக்குப் பின் ஒரு ஷீராஜமாஅத்தே இருந்து வழி நடத்தியது. யாரும் அமீராக நியமிக்கப்படவில்லை; டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம் என்பது உண்மை தான். நாமே பலமுறை சென்று பார்த்திருக்கிறோம். செலவினங்களுக்கும் இன்றைய இயக்கவாதிகள் போல் மக்களிடம் கை பகிரங்கமாக ஏந்தாமலேயே வசதி தவறாமல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தப்லீஃக் ஜமாஅத்தில் தஃலீம் என்ற பெயரால் வாசிக்கப்படும் அமல்களின் சிறப்புகள் நூல்களை அப்புறப்படுத்திவிட்டு குர்ஆன், ஹதீஃத்கள், இமாம்களின் கருத்துக்களை வைத்து மக்களுக்குப் படித்துக் காட்டினால் நிச்சயம் பெரியதொரு மாறுதல் எழுச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்படிப்படட வழிகெட்ட தப்லீக் வஹ்ஹாபிகள் எழுதிய புத்தகங்களை பள்ளிவாசல்களில் அமீர்சாபுகள் படிப்பதும் அதை கேட்பதற்கு ஒரு கூட்டமும் 
இது சரிதானா என்று மேலே கூறப்பட்ட விடயங்களை சிந்தித்து பாருங்கள், அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன். 

♦ இப்பொழுது கூறுங்கள். தப்லீக் ஜமாஅத்தும் வஹாபிகளும் ஒன்றா? வேறா? வஹாபிசத்தைப் பரப்பும் நோக்கில் தோன்றிய இயக்கம்தான் தப்லீக் ஜமாஅத்தாகும். தொழுகை என்ற போர்வையில் வந்தால்தான் பள்ளிவாசலில் தங்க முடியும்.மக்களைச் சந்திக்க முடியும் என்பதற்காகவே தொழுகையை எடுத்தார்கள். மக்கள் தங்களைச் சந்தேகப் படாமலிருக்கவே தொழுகை என்ற வேஷத்தை அணிந்து கொண்டுள்ளனர்.மேலும் தஃலீம் என்ற பெயரால் வாசிக்கப்படும் அமல்களின் சிறப்புகள் என்ற நூல்களை எடுத்தார்கள், எனவே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற இயக்கம், தஃலீம் 'அமல்களின் சிறப்பு' என்ற கிதாப் போன்றவைகள் ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச் செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் தடம் மாற்றி அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம் என்பதில் சந்தேகமில்லை. நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே தான் பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை என்று எச்சரிக்கின்றோம். 

நன்றி : Mailofislam

����ஹலாவதுல் ஈமான்����
✳ BY Moulavi 
S.L Abdhur Rahman Ghawsi

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search