*பல்வேறு வகை
ஸலவாத்களும்;
அதன் பலன்களும்.
♦ ஸலவாத்து இப்ராஹிமிய்யா
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ،
وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
மறுமையில் பெருமானாரின் பரிவுரை பெற:
இந்த ஸலவாத்தை ஒருவன் ஒதிவரின் மறுமையில் அவனுக்குத் தாம் பிணை ஏற்று இறைவனிடம் அவனுக்காகப் பரிந்துரைப்பதாகப் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
இதனை ஒருவன் ஆயிரம் தடவை ஓதிவரின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ ஸலவாத்துல் முன்ஜியா
الَّلهـُمَّ صَلِّ عَلىَ سَيِّدِـناَ مُحَمَّـدٍ صَلَتً تُنْـجِـنَا بِهَا مِنْ جَـمِيـْعِ اَلْاَ هـوَالِ وَاَلْاَ فاَتِ
وَتـَقْضِى لَنَا بِـهـَا جَـمِيْعَ الْحَا جَاتِ ، وَتُـطَـهِـرُنَا بِهاَ مِنْ جَمِيعِ السَّـيِئاَ تِ،
وَتَرْ فَعُناَ بِهاَ اَعْلىَ الدَّ رَجاَتِ ، وَتُبَـلِّـغُـنَا بِهاَ اَقْصَ الْغاَ ياَتِ، مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ
فِى الْحَياَتِ وَبَعْدَ الْمَماَتِ اِنَّكَ عَلىَ كُلِّ شَيئٍ قَـدِ يْرٌ.
எண்ணங்கள் நிறைவேற:
இதனை ஆயிரம் தடவை ஓதின் இறையருளால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
துன்பம் நீங்க:
இதனைத் துன்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பவன். ஆயிரம் தடவை ஓதின் அவன் இறையருளால் துன்பம் நீங்கப் பெறுவான்.
இரணம் அதிகரிக்க:
இதனை ஒருவன் வழக்கமாக ஆயிரம் தடவை ஓதிவரின் அவனின் இரணம் அதிகரித்து அவன் செல்வனாவான்.
நாடிய நாட்டங்கள் நிறைவேற:
இதனை ஒருவன் நள்ளிரவு ஆயிரம் தடவை ஓதி இறைவனிடம் இறைஞ்சின் அவன் நாடிய நாட்டங்கள் நிறைவேறும், மின்னலின் வேகத்தில் அவனுடைய இறைஞ்சுதல் இறை சந்நிதானத்தை எய்தும் எண்டும் கூறப்படுகிறது. ‘இது அர்ஷின் புதையல்களில் ஒன்று’ என ஷைகுல் அக்பர் இப்னு அரபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்
♦ ஸலவாத்துல் ஃபாத்திஹி
اللَّهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا مُحَمَّدٍ الفاتِحِ لِمَا أُغْلِقَ و الخاتِمِ لِمَا سَبَقَ نَاصِرِ الحَقِّ بَالحَقَّ و الهَادِي إلى صِرَاطِكَ المُسْتَقِيمِ و عَلَى آلِهِ حَقَّ قَدْرِهِ و مِقْدَارِهِ العَظِيمِ
இறைஞான இரகசியங்களை அறிய:
இதனை வழக்கமாக நூறு தடவை ஓதிவரின் மறைவான இறைஞான இரகசியங்களை அறியலாம்.
விருப்பங்கள் நிறைவேற:
இதனை ஓருவன் தன் ஆயுளில் ஒரு தடவை ஓதினும் அவன் நரகம் புகுத மாட்டான்.
பெருமானாரை நேரில் காண:
ஒருவன் வெள்ளி அல்லது வியாழன் அல்லது திங்கள் இரவுகளில் முதல் ரகஅத்தில் ஸூரா ஃபாத்திஹாவுக்குப் பின் இன்னா அன்ஸல்னாஹு ஸூராவையும் இரண்டாம் ரகஆத்தில் இதா ஸுல்ஸில்லத்துல் அர்ளு ஸூராவையும் மூன்றாம் ரகஅத்தில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் ஸூராவையும் நான்காம் ரகஅத்தில் குல் அவூது பிறப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஸூராக்களையும் ஓதி நான்கு ரகஅத் நஃபில் தொழுது பின்னர் நறுமணம் நிறைந்த சூலில் இந்த ஸலவாத்தை ஆயிரம் தடவை ஓதின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ ஸலவாத்துல் திப்பில் குலூப்
اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوَائِهَا . وَعَافِيَةِ اْلأَبْدَانِ وَشِفَائِهَا . وَنُوْرِ اْلأَبْصَارِ وَضِيَائِهَا وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
நோய், ஆபத்து அணுகாதிருக்க:
இதனை வழக்கமாக ஒதிவரின் நோய், ஆபத்து முதலியவை அணுகா.
உடல் வேதனை நீங்க:
உடலில் வேதனை, வலி ஏற்படின் இதனைத் தொடர்ந்து ஓதி ஊதினால் இறையருளால் நிவாரணம் கிடைக்கும்.
கண்ணொளி பெற:
பார்வை குறைந்தவர்கள் அல்லது பார்வையை இழந்தவர்கள் இதனைக் காலையில் நூறு தடவையும் மாலையில் நூறு தடவையும் வழக்கமாக ஓதிவரின் அவர்கள் கண்ணொளி எய்தப் பெறுவர்.
நோய் நீங்க:
“நோயாளன் ஒருவன் தூய்மையாக அமர்ந்து நல்லெண்ணத்துடன் இதனை ஓதின் இதன் பொருட்டால் நோய் நீங்கப் பெறுவான்” என இமாம் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினர். இதனை நோயுற்றவர்மீது ஓதி ஊதவும் தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கவும் கொடுப்பின் அவர்கள் விரைவில் நலம் பெருவர்.
♦ ஸலவாத்துல் தஃப்ரீஹிய்யா ஸலவாத்துந் நாரிய்யா
اَللّٰهُمَّ صَلِّ صَلَاةً كَامِلَةً وَسَلِّمْ سَلَامًا تَامًّا عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ الَّذِى تَنْحَلُّ بِهِ الْعُقَدُ، وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ، وَتُقْضٰى بِهِ الْحَوَآئِجُ، وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ، وَحُسْنُ الْخَوَاتِمِ، وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ، وَعَلٰى اٰلِهِ وَ صَحْبِهِ فِي كُلِّ لَمْحَةٍ
وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ
இதனை முஃப்தாஹுல் கன்ஸுல் முஹீத்தி என்றும் கூறுவார். இது அல்லாஹ்வின் புதையல்களில் ஒன்றாகும். இதனை வழக்கமாக ஓதி வருவது அதனைத் திறப்பதற்கான திறவுகோலாகும்.
பெறும் துன்பங்கள் நீங்கப் பெற:
இதனைப் பலரும் ஒருங்கு சேர்ந்து அமர்ந்து 4444தடவை ஓதின் இறைவனருளால் அப்பெரும் துன்பம் பொங்கிச் சாம்பலாகி நிவாரணம் ஏற்படும். எனவே தான் இதற்கு ஸலவாத்துன் நாரியா எதற பெயரும் ஏற்பட்டது. இதனை ஒருவர் மட்டும் தனித்து ஓதின் நாளொன்றுக்கு 440 ஸலவாத்து வீதம் பத்து நாட்களுக்கு ஓதிப் பதினொன்றாம் நாள் 44 ஸலவாத்துகளை ஓதி முடித்து இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
செல்வந்தனாக:
“இந்த ஸலவாத்தை ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பின்பும் பதினொரு தடவை வழக்கமாக ஓதிவரின் அவனுக்குரிய இரணம் அதிகப்பட்டு அவன் விரைவில் செல்வனாவான்” என்று இமாம் தைனூரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
சுகப்பிரசவம் ஏற்பட:
இதனைத் தட்டைப் பீங்கானில் எழுதிப் பிரசவவேதனைக்காளானவளுக்குக் கரைத்து ஊட்டின் விரைவில் வேதனை நீங்கிச் சுகப் பிரசவம் ஏற்படும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
இதனை ஒருவன் வழக்கமாக ஒதிவரின் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ தாஜுஸ் ஸலவாத்
இது அதன் பெயருக்கேற்ப ஸலவாத்துகளின் மணிமகுடம் போன்றுள்ளது. இதனுடைய மாண்பு அளப்பரியதாகும்.
இதனை ஓத இந்த லிங்கை அழுத்துங்கள்
குழந்தை பெற:
இருபத்தியொரு பேரீத்தம் பழங்களை ஒன்றாக வைத்து அவற்றின் மீது ஏழு தடவை இதனை ஓதி நாளொன்றுக்கு ஒன்று வீதம் இருபத்தியொரு நாட்கள் அந்தப் பேரீத்தம் பழங்களை ஒரு பெண் உண்டு அதன்பின் தன் கணவனுடன் மருவின் இறைவனருளால் கருவுறுவாள். அதன்பின் கருவில் ஏதேனும் கோளாறு ஏற்படின் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இதனைத் தண்ணீரில் ஓதி ஊதிக்குடித்துவரின் கரு காக்கப் பெற்று குழந்தை பிறக்கும்.
குறிக்கோள் எய்தப் பெற:
நள்ளிரவில் விழித்தெழுந்து ‘உளு’ வுடன் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது தடவை இதனை ஓதின் எண்ணிய குறிக்கோளை இறையருளால் எய்தப் பெறலாம்.
வறுமை நீங்க:
இதனை ஒருவன் இஷா தொழுதபின் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது நாட்கள் ஓதிவரின் அவனைப் பிடித்த வறுமை தோலையும்.
இரணம் அதிகரிக்க:
இதனை ஒருவன் வைகறைத் தொழுகைக்குப் பின் வழக்கமாக ஒரு தடவை ஓதிவரின் அவனுடைய இரணம் அதிகப்படும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
ஒருவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணவிரும்பின் வளர்ப்பிறையில் வரும் ஒரு வெள்ளி இரவில் தூய்மையான உடையணிந்து நறுமணம் பூசி இஷாத் தொழுகை முடித்து உளுவுடன் நூற்று எழுபது தடவை இந்த ஸலவாத்தை ஓதி விட்டு உறங்கவும். இவாறு தொடர்ந்து மொத்தம் பதினொரு இரவுகள் செய்துவரின் இவ்விரவுகளில் எதிலாவது அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
0 கருத்துகள்