ஆதி ஏகன் தூதரே
ஜோதியாம் நபி தாஹாவே
நானும் காண நாளும் காண
ஆசையாய் அழைக்கின்றேனே!
இருள் படிந்த இதயம் யாவும்
உங்கள் வரவால் ஒளிர்ந்ததே
அன்பே அருளே அழகே அமுதே
அஹ்மத் யா நபி ஸலாம்!
اَلصَّلٰوةُ وَالسَّلَامُ
பொருள் விரிந்த புண்ணிய வேதம்
உங்கள் வரவால் வளர்ந்ததே
பொங்கும் பொழிவே பூவின் உயிரே
பூமான் யா நபி ஸலாம்!
اَلصَّلٰوةُ وَالسَّلَامُ
பாவை இனமே பாவம் உங்கள்
வரவால் தானே நிமிர்ந்ததே
பரிவின் உருவே கனிவின் திருவே
ஹாத்தம் யாநபி ஸலாம்!
اَلصَّلٰوةُ وَالسَّلَامُ
பொன்னும் மணியும் யாவும் உங்கள்
வரவால் தானே மின்னுதே
சங்கைத் தங்கும் சாந்தம் தவழும்
சர்தார் யா நபி ஸலாம்!
اَلصَّلٰوةُ وَالسَّلَامُ
விண்ணும் மண்ணும் மதியும் உங்கள்
வரவால் தானே மிளிர்ந்ததே
சொல்லும் செயலும் கந்தங் கமலும்
கண்மணி யாநபி ஸலாம்!
اَلصَّلٰوةُ وَالسَّلَام
0 கருத்துகள்