✴✴✴✴மதீனாவின் மாண்பு✴✴✴✴ ✴✴✴✴✴✴கட்டுரை :3✴✴✴✴✴✴
✴✴✴✴✴✴✴எழுத்து✴✴✴✴✴✴✴ ✴✴ரபீக் மிஸ்பாஹி ஹஜ்ரத்✴✴
இறைத்தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
“மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!” என அனஸ் இப்னு மாலிக்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.
5. கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்.
ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள்
மதீனாவிற்கு வந்தபோது
அபூபக்ர்(ரலியல்லாஹு அன்ஹு)
பிலால்
(ரலில்லாஹு அன்ஹு)
ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.
அபூபக்ர்(ரலியல்லாஹு அன்ஹு) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!” என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால்(ரலியல்லாஹு அன்ஹு) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி,
‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா?
‘மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா?
ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும்,
பிலால்(ரலியல்லாஹு அன்ஹு)
‘இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!” என்று கூறுவார்கள்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) ‘புத்ஹான்’ எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!
ஷஃபாஅத் பூமி
وَقَالَ صلى الله عليه وسلم : (( مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன்.
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
( اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )
رواه البخاري (رقم/1890)
யா அல்லாஹ்.உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் ரலி அவர்கள் துஆ செய்தார்கள்.
وقد علق عليه الإمام النووي رحمه الله بقوله :
" يستحب طلب الموت في بلد شريف " انتهى.
" المجموع " (5/106)
சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி ரஹ் அவர்கள் கூறுவார்கள்.
கருத்துரையிடுக