ஸலவாத் என்றால் என்ன? அதன் பயன்?

*ஸலவாத்தின் பயன்கள்*

ஸலவாத் என்பதற்கு அரபியில் அழைப்பு என்று நேரடிப் பொருள் குறிப்பிடப்பட்டாலும், நடைமுறையில் ஸலவாத் என்பது , விசேடமான பிரார்த்தனையைக் குறிப்பதாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களுக்காக அல்லாஹ் மனிதர்கள் மீது கடமையாக்கியுள்ள பிரத்தியேக நற்கிரியை என்றும் இதனைக் குறிப்பிடலாம். 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்' (யாஅல்லாஹ்! நபி முஹம்மத் அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக!) என்பதே இதன் வார்த்தைப் பிரயோகமாகும். நபியவர்களின் திருப்பெயரைக் கேட்கும்போது, 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று கூறுவதும் அவர்கள் மீதான ஸலவாத்தேயாகும்.

அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது : ' நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத் சொல்கின்றார்கள். ஆகவே, விசுவாசிகளே! நீங்களும் அந்த நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக!'

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதென்பது பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒரு விசேட அமலாகும். இவ்வகையில் சிறப்புகளையும் பயன்பாடுகளையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1) நபியின் மீது ஸவாத் சொல்பவருக்கு அல்லாஹ் பதில் ஸலவாத் சொல்கின்றான். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எவரொருவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்கின்றான்' (முஸ்லிம்)

2) ஸலவாத் சொல்பவர் நபியவர்களின் பதில் ஸலவாத்துக்குத் தகுதி பெறுகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' ஒருவர் என் மீது ஸலவாத் சொன்னால், அவருடைய ஸலவாத் என்னை வந்தடைகின்றது. அவருக்கு நான் பதில் ஸலவாத் சொல்கின்றேன். அது மட்டுமன்றி , அவருக்கு பத்து நன்மைகளும் எழுதப்படுகின்றன. (தபரானி)

3) ஸலவாத் சொல்பருக்கு மலக்குகள் ஸலவாத் சொல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' வெள்ளிக்கிழமை தினத்தில் என் மீது ஸலவாத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். ஜிப்ரீல் என்னிடம் வந்து சொன்னார்: எந்த மனிதர் தங்கள் மீது ஸலவாத் நொல்கின்றாரோ அவருக்காக நானும் ஏனைய மலக்குகளும் பத்து முறை ஸலவாத் சொல்கின்றோம்'. (தபரானி)

4) ஸலவாத் சொல்பவருக்கு உயர்ந்த அந்தஸ்துகள் வழங்கப்படுவதோடு, நன்மைகள் அதிகரிக்கப்பட்டு பாவங்களும் அழிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எனது உம்மத்தை சேர்ந்த ஒரு மனிதர் தூய மனதுடன் எனக்கு ஒரு தடவை ஸலவாத் சொன்னால், அவருக்கு அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்கின்றான். அவருக்கு பத்து வகையான உயர்ந்த அந்தஸ்துகளைக் கொடுக்கின்றான். அவருக்காக பத்து நன்மைகளை எழுதி, அவருடைய பத்து பாவங்களை அழித்து விடுகின்றான்'. (நஸாஈ)

5) ஸலவாத் சொல்பவர், பத்து அடிமைகளை உரிமையிட்ட நன்மையை பெறுகின்றார். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து நன்மைகனை எழுதுகின்றான். அவருடைய பத்து குற்றங்களை மன்னிக்கின்றான். அவருடைய பத்து அந்தஸ்துகளை உயர்த்துகின்றான். மேலும் பத்து அடிமைகளை அல்லலாஹ்வுக்காக உரிமையிட்ட நன்மையையும் கொடுக்கின்றான்'. (தபரானி)

6) ஸலவாத் சொல்வதென்பது நபியவர்கள் மீதான அன்புக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்புக்கு காரணமாகவும் அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: 'எவர் என் மீது கொண்ட அன்பினதும் காதலினதும் காரணமாக, ஒவ்வொரு பகலில் மூன்று முறையும் ஒவ்வொரு இரவில் மூன்று முறையும் ஸலவாத் சொல்லி வருகின்றாரோ, அவருடைய பாவங்களை மன்னிப்பதென்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடும்'. (தபரானி)

7) ஸலவாத்தானது, அதனை சொல்பவருக்கு பாவமன்னிப்புக் கோரக்கூடியதாகவும், அவருடைய மண்ணறையில் ஒளி தரக்கூடிதாகவும் அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' ஒருவர் என் மீது ஸலவாத் சொன்னால், அந்த ஸலவாத்திலிருந்து ஒரு மலக்கு உற்பத்தியாகி அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு செல்கிறார். ஸலவாத் சொன்ன மனிதர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டபின், அந்த மலக்கைப் பார்த்து அல்லாஹ் கூறுவான்: ' என்னுடைய அடியானின் கப்றுக்குச் செல்வீராக. அவருக்காக பாவமன்னிப்புக்கோரி, அவருடைய கப்ரில் ஒளியை ஏற்படுத்துவீராக!'. (அபுதாவூத்)

8) ஸலவாத் சொல்பவருக்கு, மறுமையில் நபியின் ஷபாஅத் கிடைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எவர் உண்மையான எண்ணத்துடன் பாவமன்னிப்புக் கோருகின்றாரோ அவருக்கு பாவமன்னிப்பு அளிக்கப்படும். எவர், லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிவிட்டாரோ அவருடைய மீஸான் பாரமானதாகி விடும். எவர் என் மீது ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு நான் மறுமையில் பரிந்துரை செய்வேன்'. (அபுதாவூத்)

9) ஸலவாத்தானது ஏழ்மையை நீக்கி, நன்மையையும் செழிப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ' அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான அமல் எது?' என்று வினவினார். அதற்கு நபியவர்கள், 'உண்மையும் நேர்மையும்' என்ற கூறினார்கள். ' மேலும் கூறுங்கள்' என்று அம்மனிதர் வேண்டிய போது, ' இரவு நேர வணக்கமும் இறையச்சமுள்ள நோன்பும்' என்று நபியவர்கள் கூறினார்கள். 'மேலும் கூறுங்கள்' என்று அம்மனிதர் வேண்டிய போது, ' அதிகமான திக்ரும் அன்பான ஸலவாத்தும்'. நிச்சயமாக ஸலவாத்தானது வறுமையைப் போக்கிவிடக்கூடியதாகும்' என்று பதிலிறுத்தார்களள். (அத்துர்ருல் மன்தூர்)

10) ஸலவாத் சொல்வதன் மூலமாக நபியவர்களிடத்தில் மதிப்புக்குரியவராக ஆக முடியும்.நபி (ஸல்)அவர்கள் குறிப்பிட்டார்கள்: 'மறுமையில் உன்னிடத்தில் மிகச்சிறந்த மனிதராக இருப்பவர் என் மீது அதிகமாக ஸலவாத் சொன்னவராவார்' (திர்மிதீ)

11) ஸலவாத்தின் மகிமை, அதனைச் சொல்பவரையும் அவருடைய சந்ததிகளையும் சென்றடைகின்றது. ஹுதைபா (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' நபியின் மீது ஸலவாத் சொல்கின்ற போது, அதன் பரக்கத் அவரை மாத்திரமன்றி, அவருடைய பிள்ளையையும் அவருடைய பிள்ளையின் பிள்ளையையும் சென்றடைகின்றது' (அத்துர்ருல் மன்ள{த்)

12) ஸலவாத்தானது, அதனைச் சொல்பவரின் ஸகாத்தாக அமைகின்றது. அவருடைய உள்ளத்தில் ஆன்மீக-இளெகீக தூய்மையையும் ஏற்படுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள: 'என் மீது ஸலவாத் சொல்லுங்கள். அது உங்களுக்கான ஸகாத்தாக அமைகின்றது. மேலும் அது உங்களது பாவங்களுக்கான பரிகாரமாகவும் அமைகின்றது'. (அபூதாவூத்)

13) ஸலவாத்தானது, தானதர்மம் வழங்கிய நன்மையையும் பிறருக்கு உதவிய சிறப்பையும் பெற்றுத் தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: 'தர்மம் செய்ய விரும்பும் ஒரு முஸ்லிமிடம் அதற்கான வசதி இல்லையெனில், அவர் தன்னுடைய பிரார்த்தனையின் போது இவ்வாறு ஓதிக் கொள்ளவும், யா அல்லாஹ்! உனது தூதரும் அடியாருமான முஹம்மத் நபியின் மீதும், முஃமினான ஆண்கள் பெண்கள், முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவர் மீதும் ஸலவாத் சொல்வாயாக! இவ்வாறு ஓதிக் கொண்டால் அது அவர் ஸதக்கா செய்த நன்மையை அவருக்கு வழங்கும்' (இப்னு ஹிப்பான்)

14) நபியின் மீதான ஸலவாத்தானது, நயவஞ்சகத்தனத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் விடுதலையளிப்பதில் முக்கிய காரணமாக அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எவர் என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்கின்றான். எவர் என் மீது பத்து முறை ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் நூறு தடவை ஸலவாத் சொல்கின்றான். எவர் என் மீது நூறு தடவை ஸலவாத் சொல்கின்றாரோ, அல்லாஹ் அவருடைய இரு கண்களுக்கிடையில் நயவஞசகத்தனத்திலிருந்தான விடுதலையையும் நரகத்திலிருந்தான விடுதiயையும் எழுதுகின்றான். மேலும் அவரை மறுமையில் ஷுஹதாக்களுடன் வாழச் செய்கின்றான்'. (தபரானி)

15) நபியின் மீதான ஸலவாத்தானது, இவ்வுலக-மறுவுக தேவைகள் நிறைவேற்றுவதற்குக் காரணமாக அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' எவர் மீது ஒவ்வொரு நாளும் நூறுதடவை ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அவருடைய நூறு தேவைகளை நிறைவேற்றிக் கொடக்கின்றான். அவற்றில் எழுபது மறுமைக்காகவும் ஏனைய முப்பது இம்மைக்காகவுமாகும்' (தபரானி)

16) ஸலவாத்தானது மறுமையில் ஒளியாக பிரனமிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: 'என் மீது ஸலவாத் சொல்வதானது, மறுமையில் சிராத் பாலத்தில் ஒளியாக இருக்கும்'. (பைஹகீ)

17) ஸலவாத்தானது, மறுமையின் அதிர்ச்சிகளிலிருந்து பாதுகாப்பையும் விமோசனத்தையும் அளிக்கக்கூடிதாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' மனிதர்களே! நிச்சயமாக மறுமையின் தீங்குகள், அதிர்ச்சிகளிலிருந்து ஈடேற்றம் பெறக்கூடியவர், இம்மையில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்பவராவார்'. (தர்ஹீப்)

18) ஸலவாத்தானது மறுமையில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பெற்றுத் தரக்கூடிய அமலாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' மறுமையில் மூன்று கூட்டத்தினர் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நின்று சுகம் பெறுவார்கள். எனது உம்மத்தினரின் கஷ்டங்களை நீக்குவதற்கு முயற்சித்தவர், எனது வழிமுறைகi உயிர்பித்தவர், என் மீது அதிகமான ஸலவாத் சொன்னவர் ஆகியோரே அவர்களாவர்'. (முவத்தா)

19) ஸலவாத்தானது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பிரதான காரணமாக அமைகின்றது. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' உங்களில் ஒருவர் தனது பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளின்ன வேண்டுமென நாடினால், மதலில் அவனைப் புகழ்ந்து துதிக்க வேண்டும். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். அதன் பின்பே தனது தேவைகளை முறையிட வேண்டும்'. (அல்ஜாமிஉஸ் ஸஹீர்)

20) ஸலவாத்தானது நன்மைகளை இரட்டிப்பாக்கித் தரக்கூடிய அமலாக விளங்குகின்றது. ஹஸரத் அலி (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ' ஒருவர் ஒரு தடவை ஸலவாத் சொல்வாரானால் அவருக்கு அல்லாஹ் ஒரு கீறாத் நன்மையை எழுதுகின்றான். ஒரு கீறாத் என்பது உஹத் மலையின் அளவைப் போன்றதாகும்'. (அல்ஜாமிஉலஸ் ஸஹீர்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்