ஏழையாக வாழ்ந்ததேனோ யாரஸூலல்லாஹ்
நாளை மஹ்ஷர் வேலை உதவும் யா ஹபீபல்லாஹ்
ஏந்தலரை தான்இருந்தும்
ஏற்றமான வாழ்விருந்தும் 2
யா ஹபீபல்லாஹ்...
ஏழையாக
எல்லாம் வல்ல இறைவன் தூதே எம்மான் முஸ்தபாவே
நல்லோர் போற்றும் நபிள்கரசே நாதர் முஸ்தபாவே
தொல்லை துன்பம் சூழ்ந்த போதும் தூய வெற்றி கண்டீர் நாளும் 2
தூதர் முஸ்தபாவே....
ஏழையாக வாழ்ந்த
அல்லாஹுவின் அருமை நபியே அண்ணல் முஸ்தபாவே
அல்லல்களை வாழ்வாய் கொண்ட அஹ்மத் முஸ்தபாவே
அடி வயிற்றில் கல்லைக் கட்டி
அற்புதமாய் பசியை மறைத்தீர் 2
ஆற்றல் முஸ்தபாவே.....
ஏழையாக வாழ்ந்ததேனோ ....
தீனோரின் திருவின் திருவே தீனின் முஸ்தபாவே
வானோர்கள் வாழ்த்தும் வனப்பே வல்லல் முஸ்தபாவே
ஏனோ வாழ்வில் இன்னல் கண்டீர்
ஏகன் அருள் ஏற்று கொண்டீர் 2
ஏந்தல் முஸ்தபாவே...
ஏழையாக வாழ்ந்த...
0 கருத்துகள்