25/03/2018

யார் இந்த இப்னு தைமிய்யா





+91 97301 67915‬: இப்னு தைமிய்யா என்பவன் யார்? முஸ்லிம் உம்மாவில் தோன்றி,அறிவு மேதைகள் என்று சிலரால் புகழ்ந்துரைக்கப்பட்ட மூன்று நபர்கள் ஹக்கான உலமாக்களின் பேனை என்ற வாள் வீச்சுக்கு இறையானார்கள். வேறு எந்த உலமாக்களும் இவர்கள் போல விமர்சனத்திற்கு உள்ளானதாக இஸ்லாமிய சரித்திரத்தில் இல்லை.

 அதில் முதலாவது நபர் இந்த இப்னு தைமிய்யா. இரண்டாவது இப்னு அப் தில் வஹ்ஹாப்.மூன்றாவது அல்பானீ.

இஸ்லாமிய உலகு இன்று வரை போற்றும் சில உலமாக்கள் இப்னு தைமிய்யாவை விமர்சித்த முறையைப் பின்னால் பார்க்கலாம்.  

  1.அவரின் புத்தியை விட அவரது அறிவு அதிகம்.அல்ஹாபிழ் வலிய்யுத்தீன் அல்இராகீ றழியல்லாஹுஅன்ஹு

நூல் அல் அஜ்விபதுல் மர்ழிய்யா.   
                            இவ்வார்த்தையை எமது நடையில் கூறுவதானால் படித்த முட்டாள் என்று கூறலாம்.ஏனெனில் அவரிடம் அறிவு இருந்தது.ஆனால் அவரது புத்தியால் நல்ல அறிவையும் தீய அறிவையும் வேறு பிரித்து விளங்க முடியாதவராக அவர் இருந்தார்.
பல இடங்களில் தத்துவ வித்தகர்களை இகழ்ந்து விட்டு சில நூல்களில் அவர்களின் வழிகேடுகளை தனது கொள்கைகளாக ஆக்கிக் கொண்டார்.    

    2.அல்ஹாபிழ் இப்னு தூலூன் றஹிமஹுல்லாஹ் இப்னு தைமிய்யாவின் பிரச்சினைக்குறிய மஸாயில்களை் [விசயங்களை] எழுதி விட்டு இறுதியாக அவர் கூறிய வார்த்தை இதோ:இவற்றைக் கொள்கையாக ஏற்றதற்காக அல்ல அவற்றை எழுதியதற்காக அல்லாஹ் விடம் மன்னிப்புத் தேடுகிறேன். [அவ்வளவு ஆபத்தான கொள்கைகள் இப்னு தைமிய்யாவிடம் இருந்தது] நூல்:தகாயிருல் கஸ்ர்.பக்கம் 19 /கை எழுத்துப் பிரதி   
                      3.அல்ஹாபிழ் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கீ.சுமார் ஏழு நூல்களை அவருக்கு மறுப்பாக எழுதியுள்ளார். 4.இப்னு ஷாகிர் அல் குத்பீ இப்னு தைமிய்யாவின் மாணவர்.நான்கு மத்ஹப்களைச் சேர்ந்த நான்கு நீதியரசர்களால் வழிகேடன் என்றும்,அவரைப் பற்றி [மக்களுக்கு] எச்சரிப்பது கடமை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்.

 நூல்: உயூனுத் தவாரீக்  

 5. அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்மக்கீ...... அவர் அல்லாஹ் வழிதவரச் செய்த ஒரு மனிதன்.........அவர் அல்லாஹ் வை மரியாதைக் குறைவாகப் பேசியவர் என்பதால் நபிகளாரை அவ்வாறு அவர் பேசுவதென்பது ஆச்சரயமான ஒன்றல்ல...........அதிகமான உலமாக்கள் அவரைக் காபிர் என்று கூறியுள்ளார்கள்.
நூல் : ஹாஷியதுல் ஈழாஹ். 5.அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ.இப்னு தைமிய்யா அலீ றழியல்லாஹுஅன்ஹு விசயத்தில்,அவர்கள் பதனேழு விசயங்களில் தவறு செய்து விட்டதாகக் கூறுகிறார்..........அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹு முதுமையில் இஸ்லாத்தை ஏற்றவர்.அதனால்,அவர் என்ன கூறுவார் என்று அவருக்கே தெரியாது.
உஸ்மான் றழியல்லாஹுஅன்ஹு பணம் விரும்பி......இப்னு தைமிய்யாவின் இதுபோன்ற வார்த்தைகளுக்காக அவன் முனாபிக், ஸின்தீக்,அல்லாஹ்வுக்கு உருவம் கற்பித்தவன் என்றெல்லாம் மக்கள் அவருக்குச் சொன்னார்கள்.
 நூல்: அத்துரருல் காமினா.1/153. இது இன்னும் பல..... 

 தொடரும்..   
                  ஆக்கியோன் ;முஹம்மத் அமீன் நுழாரீ
[10:49pm, 22/03/2018] ‪+91 97301 67915‬: இப்னு தைமியா என்பவன் யார்?
தொடர்: 02

தம்மை தௌஹீத் வாதிகள் என்று அழைத்துக்கொள்ளும் தற்காலத்து கவாரிஜ்கள் என்று நல்ல உலமாக்களால் அடையாளப்படுத்தப்பட்ட வஹ்ஹாபிகளின் பெறிய தந்தையாகவும்,அச்சாகவும்,மூலையாகவும் இருப்பவர்தான் இந்த இப்னு தைமிய்யா

இவர் பெரிய தந்தை என்றால் சிறிய தந்தை யார்?என்பீர்கள்.அவர் யாரும் அல்ல.நமது இப்னு அப்துல் வஹ்ஹாப்தான்.
சரி,இனி வழிகேடன் இப்னு தைமியாவின் சில வழிகேடுகளைப் பார்ப்போம்.

வழிகேடு (1) அல்லாஹ்வை நாம் கதீம் பூர்வீகமானவன்,ஆரம்பம் இல்லாதவன் என்று நம்புகிறோம்.இத்தன்மை யாருக்கும் கிடையாது.ஹுவல் அவ்வல் என்ற அல் குர்ஆனின் வார்த்தை சுட்டும் கருத்தும் அதுவே ஆனால் இப்னு தைமியா என்ன சொல்கிறார்?
அல்லாஹ்வை போன்றே படைப்புகளும் பூர்வீகத் தன்மை கொண்டவை.ஆரம்பம் இல்லாதவை.அதனை அவரது பாணியில் சிறிது விளக்கத்தோடு சொல்கிறார்.அதாவது,படைப்புகள் என்ற வகை பூர்வீகத் தன்மை உடையவ.அவற்றில் உள்ள குறித்த ஒவ்வொன்றும் பூர்வீகத் தன்மைபற்ற படைப்புகள்.
(உ+ம்.அதாவது மனித இனம் என்று பார்த்தால் அதற்கு ஆரம்பம் இல்லை.ஆனால் தனித்தனியாக ஆதம்,ஈஸா,தனியால் என்று பார்த்தால் அவற்றுக்கு ஆரம்பம் உண்டு)
இச்சிந்தனையை இப்னு தைமியா தனது ஏழு நூல்களில் அள்ளி வீசுகிறார்.
அவை:1.முவாபகது சரீஹில் மஃகூல் லிஸஹீஹில் மன்கூல்.
2.மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ் 
3.ஷரஹ் ஹதீஸின் நுஸூல்
4.ஷர்ஹு ஸதீஸி இம்ரான் 
5.நக்து மராதிபில் இஜ்மாஃ 
6.குர்ஆனின் ஆறு அத்தியாயங்களுக்கான விரிவுரைத் தொகுப்பு.
7.அல் பதாவா 
இக்கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்.

1.அல்லாமா கௌசரீ.
பைத்தியம் பிடித்தவனிடம் மாத்திரமே வெளிப்படும் வார்த்தைகள்.
         நூல்:தஃலீகுஸ் ஸைபிஸ்ஸகீல்.

2.பத்ருத்தீன் அஸ்ஸர்கஷீ.
இக்கருத்தைச் சொன்ன தத்துவ மேதைகள் பற்றி அவர் பின் வருமாறு கூறுகிறார்.
இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் அவர்களை வழி தவரியவர்கள் என்றும்,காபிர்கள் என்றும் கூறுகிறார்கள்.
         நூல்:தஷ்னீபுல் மஸாமிஃ

3.காழீ இயாழ் 
அவ்வாறே உலகைப் பூர்வீகமானது என்று சொல்வோர் காபிராவார் என்பதை நாம் உருதியாகச் சொல்வோம்.
             நூல்:அஷ்ஷிபா.

4.இப்னு தகீக் அல் ஈத் 
இப்னு தைமிய்யாவின் மாணவர்.

5.இப்னு ஹஜர் அல் அஸ்கலானி 

6.ஸைனுத்தீன் அல் இராகீ.

7.முஸம்மத் முர்தழா அஸ்ஸபீதீ 
மற்றும் வேறு பலர்.

தொடரும்......

ஆக்கியோன்:முஹம்மத் அமீன் நுழாரி.
[10:50pm, 22/03/2018] ‪+91 97301 67915‬: #யாரிந்த__இப்னு_தைமியா_3

இப்னு பதூத்தா ... 
இவரது முழுப் பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் லவாத்தீ தன்ஜீனி பதூதா... 

இவ்வுலகம் முன் எப்போதும் கண்டு கேட்டிராத மாபெரும் இஸ்லாமிய தேச சஞ்சாரி. 
இவரைப் போற்றி புகழாத நல்லறிஞர்கள் இல்லை. 

மாமேதையான இவர்கள் மொரோக்கோ நாட்டில், நல்லறிஞர்கள் குடும்பத்தில் தன்கியர் நகரில்,கி.பி 1304 பெப்ரவரி 25ல் பிறந்தார்கள். ஸுன்னி மாலிகி மத்ஹப் நல்லறிஞர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்கள். 

1325ல் தனது 21வது வயதில் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு சென்றார்கள். அக்காலத்தில் 16 மாதப் பயணம் அது. அதன் பிறகு 24 வருடங்களுக்குப் பிறகுதான் இப்னு பதூத்தா மொரோக்கோ... தன் தாய்நாடு வந்து சேர்ந்தார்கள். 

இந்த 24 வருடங்களும் ஆபிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள், சீனா என உலகம் பூராவும் சுற்றித் திரிந்தார்கள். 

இப்பிரயாணத்தின் போதே சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸையும் வந்தடைந்தார்கள். அன்று ஜுமூ'ஆ தினம். டமாஸ்கஸ் மஸ்ஜிதை அடைந்தார்கள். 

அன்று வழிகேடர் இப்னு தைமியா ஜுமூ'ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

 பிரசங்கத்தில் அல்லாஹ் عزوجل வானுலகிலிருந்து பூமிக்கு இறங்கும் விடயம் வந்தது. "அல்லாஹ் எப்படி இறங்கினான் தெரியுமா?... இப்படிதான்... நான் இப்போது இறங்குவது போல்தான் இறங்கினான் " என்று பிம்பர் படியிலிருந்து கீழே இறங்கிக் காட்டினான். 

ஸுப்ஹானல்லாஹ் ... எப்படி வழிகேட்டின் ஆரம்பம்? 

இச்சம்பவம் தேச சஞ்சாரி இப்னு பதூத்தா எழுதிய, 'துஹ்fபதுன் நுஸ்ஸார்' என்றக் கிதாபில் பதிவாகி உள்ளது.

1 கருத்து:

  1. இப்னு தைமியா பிறந்தது கவ்வி கற்றது ஸஹாபாக்கள் பத்வாவை விமர்சனம் செய்தது என்பன உள்ளிட்ட ஒரு ஆக்கம் தேவை காரணம் சிலர் அவரை ஸஹாபி தாபிஈன் இமாம் முஜத்தித் என்றெல்லாம் நினைத்து அவர் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர்

    பதிலளிநீக்கு

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search