(ஞான மாமேதை
(இமாம் ஜஃபர் ஸாதிக்
(ரலியல்லாஹு அன்ஹு
( எழுத்து :
( V.M. முஹம்மது ) (ஜகரிய்யா யாஸீனிய்)
( பகுதி: 1 )
*அறிவியல் உலகில் இஸ்லாமிய அறிவைக் கொண்டு நம்மை வாழ வைப்பது இமாம்களின் அறிவுப் பணிதான்.
இரண்டு வகை அறிஞர்கள்;
1 : மார்க்க ( ஷரீஅத்) சட்டங்களை வடிவமைத்து
தந்தவர்கள்.
2 : அல்லாஹ் என்றால் யார்? எனும் ஞான அறிவைத் தந்த வலிமார்கள்.
தாயிப் போர் முடிந்து திரும்பிய சமயத்தில்
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் மருமகர் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆன்மிக விஷயங்களை எடுத்துக் கூறினார்கள்.
இதைக்கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு
நாயகமே! அலிக்கு மட்டும் தாங்கள் இரசியமாக ஏதோ கூறினீர்களே! அதை எங்களுக்கும் சொல்லுங்களேன் என்று இயம்பிய போது,
உமரே! நான் போதிக்கவில்லை!
அல்லாஹ்தான் போதித்தான் என்றார்கள்.
அன்றிலிருந்து
இன்று வரை
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றலில் வந்து கொண்டிருக்கும்
"அஹ்லு பைத்கள்"
மூலம் ஞான அறிவு
(இறையறிவு)
உலகம் முழுவதும் தரீக்கா வாயிலாக பரவுகின்றது.
இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
இப்படி சொல்கிறார்கள்;
இம்மனித அறிவு உலகறிவு.
எங்கள் ( வலீமார்கள் )
அறிவு இறையறிவு என்றார்கள்.
இவ்வனைத்தையும் தன்னுள் கொண்டு
மார்க்க அறிஞராகவும்,
ஞானக் கடலாகவும்
அஹ்லுல் பைத்தினர்களின்
முத்தாய்ப்பாகவும் நின்றிலங்கும் ஓர் உன்னத
ஞான மேதை தான்
இமாம் ஜஃபர் ஸாதிக்
( ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
#இவர்களின் இயற்பெயர் # ஜஃபர்.
*ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வர் ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பாக்கிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வந்து தந்தையே! தங்கள் பேரப்பிள்ளைக்கு தாங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டி நின்ற சமயம் ;
தம் பேரப்பிள்ளையைப்
தம் அருள் கண்களால் பார்த்து ஒரு புன்னகை பூத்து
ஜஃபர் எனும் பெயர் சூற்றி அகமகிழ்ந்தார்கள்.
*மக்கள் மத்தியில் இவர்களுக்கு புனைப் பெயராக அழைக்கப்பட்ட பெயர் அபூ அப்தில்லாஹ் என்பதாகும். இது தவிர, அபூ இஸ்மாயில், அபூ மூஸா போன்ற பெயர்களினாலும் அழைக்கப்பட்டார்கள்.
மேலும், ஸாதிக், பாழில், தாஹிர், ஸாபிர் போன்ற சிறப்புப் பெயர்களினாலும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
# பிறப்பு #
இமாமவர்கள் ஹிஜ்ரி 83ம் வருடம் ரபீஉல் அவ்வல் பிறை 17 ;
திங்கட் கிழமை பிறந்ததாக,
ஸஹீஹான ரிவாயத் கூறுகின்றது.
# தந்தையின் பெயர் #
முஹம்மத் இப்னு அலீ பாக்கிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆவார்கள்.
தாயாரின் பெயர் :
உம்மு பர்வா ஆவார்கள்.
( புனைப் பெயர். )
இவரின் பெயர் பாத்திமா
இவர் காசிம் இப்னு முஹம்மத் இப்னு அபீ பக்கர் அவர்களின் புதல்வியாவார்.
( கல்வி )
தங்கள் 31 ஆவது வயதில் மதீனாவில் மதரஸா ஒன்றை நிறுவி நடத்திவந்தார்கள்.
சிரியா; ஈராக் போன்ற பெரும் நாடுகளிலிருந்து 4000 க்கும் அதிகமான மாணவர்கள் குவிந்தனர்.
அஹ்லுல் பைத் குடும்பத்தினர் மதரஸாவாமே! என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
பல நாட்டின்
குதிரை மேய்ப்பாளர் கூட
மதரஸாவின் முழு விபரமும் தெரியுமளவிற்கு பிரபல்யமாயிற்று.
மாணவர்களைப் பார்த்து ஒரு முறை இவ்வாறு சொன்னார்கள் ;
வருங்கால ஆலிம்களான நீங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
மக்களிடத்தில் குறைவாக பேசுங்கள்.
அதிகமான நற்காரியங்களை செய்யுங்கள்.
இனி உங்கள் செயல் பேசும்.
உங்கள் பேச்சு குறையும் என்றார்கள்.
(முத்தாய்ப்பான கேள்விகள்
ஒருமுறை இவர்களை சந்தித்து பேச இரு நபர்கள்
வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர்
இமாம் அவர்களே!
இவர் யார் என தெரியுமா? எனக் கேட்கிறார்.
பகுத்தறிவுடன் பேசும் நுஃமானிப்னு ஸாபித்தானே என்றார்கள்.
மக்கள் மத்தியில் அபூ ஹனீபா என்ற பெயர் தான் பிரபல்யமாயிற்று. ஆனால் தங்கள் இயற் பெயரை தெரிந்து வைத்துள்ளார்களே!
என இருவரும் ஆச்சர்யப்பட்டனர்.
இப்பொழுது இமாமவர்கள்
யா அபூஹனீபாவே!
கண்களில் நீர் வழிகின்றதே?
காதில் குறும்பி கசப்பா இருக்கின்றதே?
நாவிற்கு அடியில் ஒரு வித நீர் உற்பத்தியாகின்றதே?
இவை எதனால் என்று தெரியுமா?
தெரியவில்லை நாயகமே!
தாங்களே!
சொல்லுங்கள்
என்றார்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
** கண்களில் நீர் சுரப்பதற்கு காரணம் கண்களை ஈரப்பசத்துடன் வைத்து;
விழிகளை சுழலச் செய்வவதற்கும்;
கண்களை பாதுகாப்பதற்கும் கண்ணீர் வருகின்றது.
** காதுகளிலுள்ள குறும்பி கசப்பாயிருப்பதற்கு ;
பூச்சி புழுக்கள் காது வழிகளில் நுழையாமல் இருப்பதற்குத்தான்.
** நாவிற்கு அடியில் நீர் உற்பத்தியாகுவதற்கு காரணம் ;
உணவின் ருசி தெரிவதற்கும்;
தொண்டையிலிருந்து குடலுக்கு வேகமாக உணவை எடுத்துச்சென்று செரிமானம் ஆக்குவதற்குத்தான் என்றார்கள் இமாமவர்கள்.
*நுஃமானிப்னு ஸாபித்தே
கொலை விபச்சாரம் இதில் எது பெரும் பாவம் ? எனக்கேட்டார்கள் ஜஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
கொலை என்றார்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி
கொலைக்கான சாட்சி இரண்டு நபர்கள்.
விபச்சாரத்திற்கான சாட்சி நான்கு நபர்கள் இப்பொழுது விபச்சாரம் தானே!
பெரும் பாவமாக தோன்றுகின்றது என்றார்கள்.
சரி...இஸ்லாத்தில் அதிக முக்கியத்துவம்? தொழுகைக்கா? நோன்பிற்கா?
தொழுகை
என்றார்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
மாத விடாய் காலத்தில் விடுபட்ட தொழுகை தேவையில்லை என்று சொல்லிய இறைவன்
நோன்பை மட்டும் வையுங்கள் எனச் சொல்ல காரணம்?
இப்படி அல்லாஹ்வுடைய சட்டத்தில் அதிகளவு பகுத்தறிவு செலுத்தி அல்லாஹ் ரஸுல் சொன்ன சட்டதிட்டங்களை மாற்றி விடாதீர்கள்.
அல்லாஹ்வை பயந்து உங்கள் சட்டங்களை இயற்றுங்கள் என்றார்கள் இமாம் ஜஃபர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
இதன் பின் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஜஃபர் நாயகத்திடம் மண்டியிட்டு ஆன்மீக விளக்கங்களை கற்றுக்கொண்டார்கள்.
*தங்கள் வயது என்ன? என்று ஒருவர் கேட்க
இரண்டு என்றார்கள்.
என்னது இரண்டா?
ஆம்! இரண்டு தான்.
நான் கற்ற அனைத்து (ஷரீஅத்) அறிவுகளும்;
ஆன்மீக அறிவிற்கு முன்னால் காணமற் போயின. ஜஃபர் சாதிக் (ரலி) அவர்களிடம்
இரண்டு வருடம் கற்ற இறையறிவு தான்
என்னை பரிசுத்த மனிதராக்கியது என்றார்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஅலைஹி அவர்கள்.
( உலகம் போற்றும் உன்னத மாமேதை இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எந்த பெருமையும் இல்லாமல் பணிவுடன் தங்கள் குரு
இமாம் ஜஃபர் சாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில்
ஞான அறிவை படித்தார்கள்.
ஒரு (ஷைக்) ஞான குருவிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இதுதான் உதாரணம்)
#அஹ்லு பைத்களுக்கே உண்டான குணம்#
*தங்கள் பாட்டனார் கால் பதித்த மதீனா பள்ளிக்கு தொழச்செல்கிறார்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
அவர்கள் தொழுது முடித்தவுடன்
வேகமாக வந்த
ஓர் மனிதர்;
ஆயிரம் பொற்காசுகள் உள்ள என் பணப்பையை தாங்கள் தான் எடுத்துள்ளீர்கள்.
ஒழுங்காக என்னிடம் கொடுத்து விடுங்கள் என்றார்.
விஷயத்தின் ஆழத்தை புரிந்து கொண்ட இமாம் ஒரு முடுச்சு பையை எடுத்துக் கொடுத்து
இதோ! உங்கள் பை என்றார்கள்.
வாங்கிய அவர் அதில் இரண்டாயிரம் பொற்காசுகள் இருப்பதைக் கண்டு அதிசயித்து
மறுப்பேதும் சொல்லாது சென்றார்.
இமாம் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் கதவை தட்டினார் ஓர் மனிதர்.
வெளியில் பள்ளியில் பார்த்த அதே மனிதர்.
மன்னியுங்கள் நாயகமே!
மன்னியுங்கள்.
தாங்கள் யார் என தெரியாமல் நான் பெரும் பாபம் செய்து விட்டேன்.
என்ன விஷயம் அன்பரே! என்றார்கள் இமாம்.
என் பணப்பை கிடைத்துவிட்டது நாயகமே!
தாங்கள் தான் எடுத்து விட்டீர்கள் எனக் கருதி விட்டேன். மன்னியுங்கள் நாயகமே! மன்னியுங்கள்.
இதோ உங்கள் பை என்றார்.
அவரை ஏறிட்டுப்பார்த்து ஒரு புன்னகைப் பூத்து
தோழரே! ஒரு பொருளை
அஹ்லு பைத்தினர்கள் அன்பளிப்பு செய்து விட்டால் அதை திரும்பி வாங்குவது அழகல்ல்.
தாங்கள் மகிழ்வுடன் செல்லுங்கள் என்றார்கள்.
( பாட்டனார் வழியே
தம் வழி)
# ஹன்னான் இப்னு சதீர் கூறுகிறார்: 'என்னுடைய தந்தை சதீர் சைய்ரபீ இவ்வாறு கூறியதை நான் செவியுற்றுள்ளேன்: 'நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கனவில் கண்டேன். அவர்களுக்கு முன்னால் ஒரு தட்டு இருந்தது. அது புடவையால் மூடப்பட்டிருந்தது. அப்போது நான் நபிகளாரின் அருகில் சென்று ஸலாம் சொன்னேன். அவர்களும் பதிலளித்தார்கள். அந்நேரத்தில் அத்தட்டின் மேலிருந்த புடவையை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விலக்கிய பின் அதிலிருந்த பேரீத்தம் பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள். நான் முன்னே சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் அந்த ஈத்தம் பழங்களில் சிலதை தாருங்கள்' என்று கேட்டேன்.
அவர்கள் சிலவற்றை எடுத்துத் தந்தார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இன்னுமொன்று தாருங்கள் என்றேன். மீண்டும் அவர்கள் தந்தார்கள்.
அதனையும் உண்டேன். இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்களை உண்டேன். அதன்பின்னும் ஒன்று கேட்டேன் .
நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) போதும் என்றார்கள் .
அந்நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த
அடுத்த நாள்
இமாம் ஜஃபர் ஸாதிக்
(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களைப் பார்ப்பதற்காகச் சென்றேன். இமாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தட்டு வைக்கப்பட்டிருந்தது.
நான் கனவில் கண்டது போன்றே அது இருந்தது.
இமாம் அவர்களுக்கு முன்னால் சென்று ஸலாம் கூறினேன். ஸலாத்திற்கு பதிலளித்தார்கள். அந்நேரத்தில் இமாமவர்கள் அத்தட்டின் மீதிருந்த புடவையை எடுத்தார்கள். அதனுள் புதிய பேரீத்தம் பழங்கள் இருந்தன. இமாமவர்கள் அதிலிருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள், ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து, 'எனக்கும் அந்த ஈத்தம் பழத்தில் தாருங்கள்' என்று கேட்டேன்.
ஒன்று தந்தார்கள். உண்டேன்.
பின்னும் ஒன்று கேட்டேன்.
இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்கள் வரையும் உண்டேன். பின் 'நபிகளாரின் மகனே! இன்னும் ஒன்று தாருங்கள்' என்றேன்.
அப்போது இமாம் அவர்கள்: 'எங்களுடைய முப்பாட்டனார் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விட அதிகமாகத் தந்திருந்தால் நாங்களும் தந்திருப்போம்' என்றார்கள். அவ்வேளையில்
நான் கண்ட கனவை இமாமவர்களிடம் கூறினேன்.
அப்போது இமாமவர்கள், தமக்கு ஏற்கனவே இச்சம்பவம் தெரிந்தவரைப் போன்று புன்முறுவல் செய்தார்கள்.
( தொடரும்: 1 )
கருத்துரையிடுக