#மௌலவி அல்ஹாபிழ்#
#V.M.முஹம்மது ஜகரிய்யா # யாஸீனிய் #
( தொடர் : 1 )
அல்லாஹ் குர்ஆனில்..
" سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير " [ الإسراء 1 ] .
“(முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து,
நாம் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன்
( அல்லாஹ் ). நம் அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே
( மிஃராஜ் எனும்பயணத்தை
(இவ்வாறு செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.” (17:1)
* நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வாக இஸ்ராவும் மிஃராஜும் அமைகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இது “இஸ்ராஃ” என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது “மிஃராஜ்” என்று கூறப்படும்.
# முஹம்மது முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அற்புதங்கள்:
முஸ்லீம் ஷரீபில் மட்டும் கிட்டத்தட்ட 1200 மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டு சில...
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1: திருக்கரத்திலிருந்து தண்ணீர் ஆறாய் ஓடும்.
2; உணவின் அளவை அதிகரிப்பார்கள்
3: விலங்குகள், மரங்கள் மற்றும் பிற பொருள்களுடன் தொடர்பு கொள்வார்கள்.
4: முழு நிலவை பிளந்தார்கள்.
அது அவர்களிடமிருந்து விலகியிருக்கவில்லை.
5: மவ்தானாவர்களை உயிர்ப்பிப்பார்கள்.
6: மண்றை நிகழ்வுகளைப் பார்ப்பார்கள்.
7: மிஃராஜ் பயணம்.
8: அவர்கள் கட்டளையிட்டால்
மரம்; மட்டை ;
கல் அனைத்தும் கீழ்படியும்.
9: நபி கோபப்பட்டுப் பார்த்தாலே எதிரிகள் அழிந்துவிடுவார்கள்.
(இந்த அற்புதங்ஙகளை பெரும்பாலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளிப்படுத்தியதில்லை
காரணம் ரஹ்மதுல் லில் ஆலமீன்..)
10: ஒரு மனிதனின் பாவத்தை மன்னிப்பவர்கள்.
அழிப்பவர்கள்.
11: திருக்குர்ஆன்.
* மிஃராஜ் என்றால் என்ன?
உடலுடன்
கண் இமைக்கும் நேரத்திற்குள், அல்லாஹ்வை ரஸுல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்த நிகழ்வுதான் மிஃராஜ்.
* கண் இமைப்பதற்குள் எப்படி செல்ல முடியும் என்ற கேள்விக்கு?,
அல்லாஹ் உலகை சுழல்வதை விட்டும் நிறுத்தி விட்டான் என்று சூபியாக்கள் சொல்கிறார்கள்.
நம் அடிப்படை கொள்கையே அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும் என்பதுதான்.
அதனால்தான் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அபூஜஹல்
குழப்ப நினைத்த சமயத்தில் கூட, இதைவிட மிகப் பெரிய விஷயத்தை நாயகம் கூறினாலும் நான் நம்புவேன் என்றார்கள்.
* மிஃராஜ் ஏற்படக் காரணம்?
ஒரே வருடத்தில் தங்களுக்கு முழு ஒத்துளைப்பாக இருந்த அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்,
கதீஜா அம்மையார் மறைந்ததாலும்,
தன் ஹபீபின் கவலையைப் போக்க, மிஃராஜ் பயணத்தை அல்லாஹ் அமைத்தான் என்றும்,
தன் ரஸுலுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் நிகழ்வு என்றும்
வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.
எதற்காக விண்வெளிப் பயணம்?
எல்லா நபிமார்களும் கேள்விப்பட்ட விஷயங்களை LIVE ஆக தன் அருமை ஹபீபுக்குக் காட்டத்தான் மிஃராஜ் எனும் பயணம்.
*நபித்துவம் பெற்ற 11.. 1/2...ஆண்டு ரஜப் மாதம் திங்கள் பின்னேரம் இப்பயணம் தொடங்கியது.
* மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு
அழைத்துச் செல்லப்பட்டு,
அங்கிருந்து ஏழு வானங்களை எப்படி கடந்தார்கள் என்பது காலம் காலமாக நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான்.
ஏழாம் வானில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்ட அற்புத காட்சிகள்:
அல்லாஹ்வை தரிசித்த காட்சிகளின் தாற்பரியம் என்ன? என்பதை தெளிவாக நம் கட்டுரைத் தொடரிலே காணலாம்.
1; விண்ணகத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைந்தவுடன் முதன் முதலில்
பைத்துல் மஃமூர் பள்ளியின்
பச்சை மரகத வாயிலில் செய்யதினா இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையோ எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.
பைத்துல் மஃமூரைப் பார்ப்பது நன்மை.
ஆனால் அதை விட ஒரு நன்மை,
இப்போழுது வரும் ஒரு நபரைப் பார்ப்பது தான்
என்பதை உணர்ந்திருந்தார்கள்
செய்யதினா இப்ராஹீம் அலைஹி வஸல்லம்.
அவர்கள் வேறு யாருமல்ல.
காதமுன் நபீயின் செய்யதுல் முர்ஸலின் முஹம்மது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம்.
தன் தவக்கொழுந்து முஹம்மது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடன்
வரவேற்ற இப்ராஹீம் அலைஹி வஸல்லம்,
எமதருமை பிள்ளையே!
தங்கள் உம்மத்துக்கள் ஒவ்வருவரும் உலகில் வாழும் காலத்திலயே சொர்க்கத்தில் அவர்களுக்கு ஒரு மரத்தை நடச்செய்யுங்கள். அதிலிருந்து அவர்கள் பழங்களை புசிப்பார்கள் என்றார்கள்.
அது எப்படி என அண்ணல் நபி கேட்க,
✿ لا حول ولا قوة إلا بالله ✿
سبحان الله ✿ الحمدلله ✿ لا إله إلا الله ✿ الله أكبر
என்ற தஸ்பீஹ்களை தங்கள் உம்மதுக்கள் சொன்னால் அவர்களுக்காக
இங்கு ஒரு மரம் நடப்படும் என்றார்கள் செய்யதினா இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்கள்.
2: ஆவதாக
கற்பனை செய்து பார்க்க முடியாத
பைத்துல் மஃமூர் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மலக்குகள் நுழைவதைப் பார்க்கிறார்கள்.
பள்ளிக்குள் செல்பவர்கள் திரும்பி வருவதில்லை.
இந்த மலக்குகள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்க,
நான்காவது வானில் ஜீப்ரீல் அலைஹி வஸல்லம்
"நஹ்ருல்ஹயா" நதியில் குளிக்கும்போது அவர்கள் இறக்கையை ஒரு சிலிர்ப்பு சிலிப்பும் போது, அதிலிருந்து உதிரும் தண்ணீர் முத்துக்களாக மாறி பின் மலக்குகளாக வருகிறார்கள் என்று ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்லப்படுகின்றது.
3 :ஆவதாக முகம் வெளுத்த; முகம் மங்கிய இரு கூட்டத்தினரைப் பார்க்கிறார்கள்.
ஓடும் நதியில் இரு கூட்டத்தினரும் முகம் கழுவுகிறார்கள்.
முகம் வெளுத்தவர்கள் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. முகம் மங்கியவர்கள் பிரகாசமாகிறார்கள்.
இரு கூட்டத்தினரும் பாவிகள்தான்.
முகம் வெளுத்தவர்கள் தங்கள் பாவத்துக்கு தவ்பா செய்யாதவர்கள்.
முகம் மங்கியவர்கள் தங்கள் பாவத்துக்கு தவ்பா செய்தவர்கள். அவர்கள் செய்த தவ்பாதான் இந்த ஆறு என்று சொல்லப்படுகின்றது.
4 : ஆவதாக அல்லாஹ்வுடைய தஜல்லியும்,.ஜன்னதுல் மஃவா எனும் சொர்க்கமும் இருக்கின்ற
சித்ரதுல் முன்தஹாவைப்
பார்க்கிறார்கள். அங்கே
தங்க வெட்டுக்கிளிகள்,
பல கலர்களை கொண்டதாக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
அதன் இலையின் வடிவம் யானைகளின் காதுகள் போலவும்,
ஒரு இலையை வைத்து இந்த பூமியை மூடும் அளவிற்கு அகலம் கொண்டதாக இருப்பதையும் பார்க்கிறார்கள்.
5 : ஆவதாக சொர்க்கத்திற்கு செல்கிறார்கள். அங்கே நீராறு, பாலாறு, மதுவாறு,
தேனாறு, ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜிப்ரீல்! இது எங்கிருந்து வருகிறது?
நாயகமே! நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே இந்த ஆறு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
அது எங்கிருந்து வருகின்றது என்று தெரியவில்லை நாயகமே!
என் ஹபீப் கேள்வி கேட்டு விட்டால் நான் பதில் சொல்வேன் என்று அல்லாஹ் சொல்லி, ஒரு மலக்கை அனுப்பினான்.
மஹ்மூது நபியிடம் வந்த அவர், வாருங்கள் நாயகமே! நாம் செல்வோம். என்று அழைத்துச் செல்கிறார்.
பிரமாண்டமான ஒரு மாளிகையைப் பார்க்கிறார்கள்.
அதில் அழகிய குப்பா இருக்கின்றது.
இவ்வுலகை அதன் மேல் வைத்தால் சிறு குருவி போல் இருக்கும் அதன் அளவு.
அவ்வளவு பிரமாண்ட குப்பா.
இப்பொழுது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாளிகைக்குள் செல்கிறார்கள்.
அங்கே நான்கு தூண்கள் இருக்கின்றது.
ஒரு தூணில் பிஸ்மி என்றும், மற்றொன்றில் அல்லாஹ் என்றும்,
இன்னுமொன்றில் ரஹ்மான் என்றும்,
கடைசி தூணில் ரஹீம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
பிஸ்மியின் "மீமி"ல் இருந்து நீராறும், அல்லாஹ்விலுள்ள "ஹே"
விலிருந்து பாலாறும்,
ரஹ்மானிலுள்ள "மீம்" இல் இருந்து மதுவாறும்,
ரஹீம் என்பதிலுள்ள "மீமி"ல் இருந்து தேனாறும் ஓடுவதைப் பார்க்கிறார்கள்.
"முஹம்மது" என்ற பெயரில் எப்படி 3 மீம் உள்ளதோ அது போலவே இங்கேயும் 3 மீம் உள்ளது.
இதன் விளக்கத்தைப்பற்றி சொல்லும் போது; தன்னிலிருந்து வெளியான இந்த படைப்புகளை தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தார்கள் என்று சூபியாக்கள் சொல்வார்கள்.
( தொடரும் : 1 )
ந
கருத்துரையிடுக