# எழுத்து : V.M.முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் #
# அறிவின் பட்டணம் அலி ரலியல்லாஹு அன்ஹு #
( பகுதி : 1 )
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும் என்பதைப் போல்;
மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்ததினால் ஸஹாபாகக்ள் அறிவுக்கள்ளாக மிளிர்கிறார்கள்.
அதில் பட்டை தீட்டப்பட்ட வைரக்கள்ளாக ஹஜ்ரத் அலியிப்னு அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒளிர்கிறார்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி மாநபி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சொல்கிறார்கள்.
حديث: أنا مدينة العلم وعليّ بابها ،
நான் கல்வியின் பட்டணம்;
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதன் தலைவாயில் என்கிறார்கள்.
அலி நாயகத்தின் மூன்று சிறப்புத் தன்மைகளைப் பற்றித் தான் வரலாறுகள் அதிகம் பேசுகின்றன.
1: அறிவு
2: வீரம்
3: தாராளத் தன்மை
அறிவு இரு வகை:
1; உலகில் கற்றுக் கொள்கின்ற அறிவு.
2: அல்லாஹ்வால் உந்தப்படும்
(இல்மே லதுன்னி)
அறிவு.
இரண்டாவதாக சொல்லப்பட்ட அறிவு நபிமார்களுக்கும்; வலிமார்களுக்கும் பிரத்யேகமாக அல்லாஹ் கொடுத்தது.
இந்த அறிவைதான் அலி நாயகம் பெற்றார்கள் என்று இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்.
*சுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அறிவைப் போல் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களது அறிவும் இருக்கின்றது என்ற பொருளில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
"தஸவ்வுஃப்; தப்ஸீர் இலக்கணம்: இலக்கியம்;
பிக்ஹ்; கணிதம்: மருத்துவம்: மொழி; பழமொழி
என்று அலி நாயகத்திற்கு தெரியாதது ஏதுமில்லை.
எழுத்தாலும்; நாவன்மையாலும் அவர்களை மிஞ்ச யாருமில்லை.
அனைத்தும் தெரிந்தாலும்; தெரியாமல் இருப்பதுவே அவர்களது இயல்பு.
அதற்கு உதாரணம்;
"ஓர் எழுத்தை எனக்கு கற்றுத் தந்தாலும் அவருக்கு நான் அடிமை என்றார்கள் அலி நாயகம்.
#அலி ரலியல்லாஹு அன்ஹு திருக்குர்ஆன் வள்ளுனர்#
1: திருக்குர்ஆன் வசனங்கள் எங்கே; எப்போது இறங்கியது என்று தெளிவாக சொல்வதோடு அதனை முழுமையாக ஓதிக்காட்டுவார்கள்.
2: திருமறை வசனங்களை அது வந்த காலம் வாரியாக ஒன்று சேர்க்கும் பணியில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.
3: எந்த வசனத்தை ஓதினால்
அதிக நன்மையும்;
நோய் நிவாரணமும் தரும் என்பதை விளங்கியிருந்தார்கள்.
4: ஹதீஸ் கலையை உண்டு பண்ணியவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு
5: அரபி இலக்கணம் உண்டு பண்ணியவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு
6: பிஸ்மில்லாஹ்விலுள்ள
ஓர் எழுத்திற்கு நான் விளக்கம் சொன்னால் அது நூறு ஒட்டகை சுமக்கும் என்றார்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு
7: ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் முறை ஆயத் ஓதும் போதே அலி நாயகம் அதை மனனம் செய்துவிடுவார்கள்.
8: தப்ஸீர் கலையை உண்டு பண்ணியவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு.
9: தவ்ராத்; இன்ஜீல்; ஜபூர் வேதத்தை தெளிவாக அறிந்திருந்தார்கள்.
10; பிக்ஹ்
(மார்க்க சட்ட காழி)
நீதிபதி.
#அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவைப் பற்றி ஸஹாபாக்கள்#
*ஒரு முறை திருக்குர்ஆனின் முதல் வசனத்தில் முதல் வார்த்தையை ஒரு இரவு முழுவதும்;
அலி ரலியல்லாஹு அன்ஹு விளக்கம் சொல்லியும் விளக்கி முடிக்கவில்லை.
பெரும் கடலில் சிற்று எறும்பு இருப்பது போல் என்னை நான் உணர்ந்து கொண்டேன் என்றார்கள் அப்துல்லாஹிப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
*இஸ்லாமிய மார்க்க கடமைகளை
அலி நாயகம் போல்
அறிந்தவர்கள் மதீனாவில் எவருமில்லை என்றார்கள்
அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
*உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாக இருக்கும் போது மூன்று கிறிஸ்துவ மத குருமார்கள் வந்து, உமரே! ஒரு புதைக்குழி ஒரு பிரேதத்தை சுமந்து கொண்டு
சுற்றித்திரிகிறது? இது என்ன?
விடை தெரியா விட்டால் நாங்கள் சொல்கிறோம். எங்கள் மார்க்கம் உண்மை என தாங்கள் ஏற்க வேண்டும் என்றார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு யோசித்துக் கொண்டிருக்கும் போது அலி நாயகம் வருகிறார்கள்.
மத குருக்கள் கேட்ட கேள்விகளை அறிந்து கொள்கிறார்கள்.
சரி! இக்கேள்விக்கு சரியான பதில் சொன்னால் எங்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்து விடுவீர்களா? என்று அலி நாயகம் கேட்க,
உடன் படுகிறார்கள் மதகுருக்கள்.
நபி யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களையும்,
அவர்களை சுமந்து சென்ற மீனும் தான் நீங்கள் கேட்டவைகளுக்கான விடை என்றார்கள் அலி நாயகம். இரு மத குருக்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன்,
மற்றொருவர் கஹ்ப் வாசிகளைப் பற்றி கேட்கிறார். அதற்கும் அலி நாயகம் விடை தந்தவுடன்:
அவரும் இஸ்லாத்தை தழுவினார்.
* உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி புரிந்த சமயம், சபைக்கு வந்த ஒருவர்,
"நான் பித்னாவை (குழப்பத்தை நேசிக்கிறேன்"
"உண்மையை ( ஹக்கு) வெறுக்கிறேன்."
"நான் பார்க்காத ஒன்றைப்பற்றி சாட்சியம் பகர்கிறேன் என்றார்."
மார்க்கத்திற்கு முரணாக பேசிய இவரை சிறையில் அடையுங்கள் என்றார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு.
இதை அறிந்த அலி நாயகம்
நேராக உமர் ரலியல்லாஹு அன்ஹு சபைக்குச் சென்று,
உமருல் பாருக்கே! ஒருவரை அநியாயமாக சிறைவைத்துள்ளீர்கள் என்றார்கள்.
எப்படி என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு கேட்க,
1; அவர் பொருளையும், பிள்ளைகளையும் நேசிக்கிறார்.
'உங்களுடைய பொருளும்;
பிள்ளைகளும்தான் பித்னா என்கிறான் அல்லாஹ் குர்ஆனில்."
2: (அவர் இறப்பை வெறுக்கிறார்)
இறப்பு (ஹக்கு) உண்மையானது.
" இறப்பின் மயக்கம் உண்மையைக் கொண்டு வந்துவிட்டது "
என அல்லாஹ் கூறுகின்றான்.
3; அவர் பார்க்காத ஒன்றை சாட்சியம் பகர்கிறார்.
" அவர் அல்லாஹ்வைப் பார்க்காமல் சாட்சியம் சொல்கிறார். என்றார்கள் அலி நாயகம்.
உடனே உமர் ரலியல்லாஹு அன்ஹு அம்மனிதரை விடுவித்து விட்டு;
*அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லையேல் இந்த உமர் எப்போதோ
இறந்திருப்பார் என்றார்கள்.
*உமர் ரலியல்லாஹு அன்ஹு
சபைக்கு ஒரு பெண் அழைத்து வரப்பட்டு;
இவள் 6 மாதத்திற்குள் கருவுற்று குழந்தை பெற்றாள் என புகார் வருகின்றது.
கல்லால் அடித்து அவளை கொள்ளுங்கள் என்றார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு.
இதை அறிந்த அலி நாயகம்
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்:
கருத்தரித்து குழந்தை பெரும் காலம் இரண்டு வருடங்களும்:
ஆறு மாதங்களும் என்ற வசனத்தையும்,
அதில் இரண்டு ஆண்டுகள் பால் கொடுக்க வேண்டும் என்ற கருத்துப் பொதிந்து இருப்பதையும் சொல்லிகாட்டினார்கள்.
குருகிய கால கருத்தறிப்பைக் கொண்டு தண்டிக்கக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
இக்கருத்தை ஏற்றுக்கொண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
அலி இல்லாவிட்டால் உமர் அழிந்திருப்பார் என்றார்கள்.
(அறிவுச்சுடர்: 1 : தொடரும்)
அ
கருத்துரையிடுக