11/04/2018

தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா?

#தேன்_இனிக்க_காரணம்_என்ன_தெரியுமா

அறிவியல் ரீதியாக இல்லை !
ஆய்வு ரீதியாகவும் இல்லை !
மெய்சிலிர்க்க வைக்கும் அர்ப்புதமான காரணம்... !

தேனிக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுரக்கும் இடையேயான
அந்த அற்புதமான நிகழ்வு :

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் )அவர்கள் தேனியே !
நீ எப்படி தேனை உற்பத்தி
செய்கிறாய்..? என்று கேட்டர்கள்
அதற்க்கு தேனீ : நாங்கள் பூஞ்சோலைகளுக்குசென்று
அங்குள்ள மலர்களின் மகரந்தத்துகள் களையும்,
அமுதினையும் எங்கள் வாய்களால் உறிஞ்சி
சேகரித்து வைத்துக்கொள்வோம்.

சேகரிக்கப்பட்டதை எங்கள் கூட்டிலே உமிழ்ந்து
(துப்பி) விடுவோம்.

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கேட்டார்கள் ; சரி . பூக்கள் பலவகையுண்டு. சில
பூக்களின் மகரந்தம் இனிக்கும். இன்னும் சில
பூக்களின் மகரந்தம் கசக்கும். இன்னும் சில
புளிக்கும்.
ஆனால் எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்ட ஓர்
தேனி அதை எப்படி மிகுந்த
சுவையானதாகவும், அமுதமாகவும்
மாற்றுகிறது........?

தேனீ சொன்னதாம்............,,, ?

தேனீ ; நபியே ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தாங்கள் சொல்வது சரிதான்.

பல இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்வற்றை
சாப்பிட்டுவரும் எங்களுக்கு அல்லாஹ்
தங்களின் மீது ஸலவாத் ஓத கற்றுக்கொடுத்தா
ன்.
எங்கள் கூட்டை அடையும் வரை விடாது
தங்கள் மீது ஸலவாத் ஓதிக்கொண்டே
வருவோம்.
கூட்டை அடைந்ததும் நாங்கள்
சேகரித்தவைகளை உமிழும்போது,
ஸலவாத்தின் பரக்கத்தினால் அது சுவைமிகு
அமுதமாய் மாறிவிடுகிறது.
கூறுங்கள் ஸலவாத்தை:

                                          ﺍﻟﻠﻬﻢﺻﻠﻲﻋﻠﻲﻣﺤﻤﺪﻭﻋﻠﻲ       ﺍﺑﻮﻳﻪﻭﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺑﺎﺭﻙ ﻭﺳﻠﻢ

நூல்; மஸ்னவி ஷரீஃப

இது ஒரு அற்புதமான வரலாறு ஸலாவாதின் சிறப்பை விளக்குகிற வரலாறு .இறைவன் தன் நேசர் ஹபீபுல்லாவின் மீது வைத்து உள்ள அன்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஏன்என்றால்
العاقل بالاشارد
புத்திசாலிகளுக்கு சைக்கினையே போதும்

தேன் ஈ -க்கு தெரிந்தது கூட இன்று உள்ள வஹ்ஹாபிஸ குழப்ப வாதிகளுக்கு  தெரிய வில்லையே ! அதை அறியவும் முற்பட வில்லையே .

நம்மில் சிலர் நினைக்கிறார்கள் :

அது எப்படி தேன் ஈ பேசியது ? அது பேசும்மா ? அது பேசினால் புரியுமா ?
என்று கேட்கிறார்கள் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ   வஸல்லம் அவர்களை சாதரன மனிதனை போல் நினைக்கிறார்கள் .உண்மையாகவே அவர்களின் சிந்தனை தவறு .ஈமானிலும் குறை உள்ளது ..!

ஏன் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லா ஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் தேன் ஈ மட்டும் பேச வில்லை ...!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மான் பேசியது ,கல் பேசியது ,ஒட்டகம் பேசியது ,மரம் பேசியது மட்டும் மல்ல அவர்கள் அலைப்புக்கு வேரோடு பிடுங்கி வந்தது சிரம் பணிந்தது. இதையே ! ஆச்சரியமாக பார்கிறீர்கள் .அல்லவா !

இதை விட ஆச்சரிய மான விசையத்தை கூறட்டுமா ... !

மேலே சொன்ன பொருட்கள் எல்லாம் உயிர் அற்ற ,இன்னும் உயிர் உள்ள வஸ்துவுகள் .இவைகளை நாம் கண்கொண்டு பார்கிறோம்.ஆனால்

நம்மால் பார்கமுடியாத , அதற்கு உருவம் உண்டா ? இல்லையா ?  என்று நம் கற்பனை கூட நினைத்து பார்திருக்கவே மாட்டோம் ..?
அப்படி பட்ட ஒன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பேசியது அனுமதி கேட்டது  என்றால் !
நபிகள நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவத்தை உலகில் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளும் நன்கு அறிந்து வைத்து உள்ளது . இந்த வஹ்ஹாபியஸ ஷைத்தான்களை தவிர ?

காய்ச்சல் என்ற நோயை கண்ணால் யாராவது பார்த்து பேசியதாக வரலாறு உண்டா ?

எந்த மருத்துவ சிகாமணியான வல்லுனராவது பார்த்ததுண்டா ?

குபா எனும் ஊரிலே காய்ச்சல் நுழைவதற்கு முன் பெருமானாரிடம் அனுமதி கேட்டதாக ஹதீஸ்கள் சொல்கிறது !

காய்ச்சல் கூட கண்மணி ரஸூலுல்லாஹ்விடம் அனுமதி கேட்டு வந்து இருக்கிறது !

உன் பணி என்ன ? என்று கேட்ட ரஸூலுல்லாஹ் நாயகத்திடம் காய்ச்சல் சொன்னது " ரத்தத்தை உறிஞ்சி கொள்ளுவேன் .
சதைதுண்டுகளை கசக்குவேன் .
இதுதான் என் வேலை "என்றது காய்ச்சல் !

இதனால் என் உம்மத்துக்கு என்ன கிடைக்கும் ?
காய்ச்சல் சொன்னது "உம்முடைய உம்மத்துக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் !
என்றது !
பாவங்கள் மன்னிக்கப்படுவது நல்லது தானே ..என அனுமதி கொடுக்கவே ..ஊர் முழுக்க காய்ச்சல் தொற்றியதாக ஹதீஸ் சொல்கிறது !

குபா வாசிகள் எல்லாம் வந்து நாயகத்திடம் முறையிட ...இப்படி ஒட்டுவாரொட்டி நோய் ஒன்று எங்களை வேதனை படுத்துகிறது சரி செய்யுங்கள் என்று ....

நான் துஆ செய்தால் உடனே சுகம் கிடைத்து விடும்...சுகம் வேண்டுமா ?
உங்கள் பாவங்கள் மன்னிக்க பட வேண்டுமா ?
என கேட்க்க ..
எங்கள் பாவங்கள் மன்னிக்க பட வேண்டும் நாயகமே ..என்று ஒருமித்து சொல்கிறார்கள் !
அப்படியானால் காய்ச்சலை சகித்து பொறுமையைக் இருங்கள் ..என அனுப்பி வைக்கிறார்கள் !

அப்படியானால் பெருமானாரின் பார்வையின் ஆற்றலின் அலாதி தான் என்ன ?

உணருங்கள் ..திருந்துங்கள் !
நம்மைப்போன்றவர் என்ற என்னத்தை விட்டு அகலுங்கள் !
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஓதும் " ஸலவாத்து " ஆகிரத்தில் அமளி ,அதாபுகளை அகற்றிவைக்கும் போது ,ஆலத்தில் ஏற்படும் வருத்தங்களை அகற்றிக் காப்பது அதற்குப் பெரிதல்ல நிச்சயம் அது நீக்கியே வைக்கும் ..
ஸலவாத்...சொல்வோம்.

வெற்றி அடைவோம்

ஆமீன்  ....,

யா ரப்பல் ஆலமீன் ...!!

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search