( எழுத்து : V.M. முஹம்மது) (ஜகரிய்யா யாஸீனிய் )
#கர்நாடகாவிற்கும் *நமக்கும் என்ன பிரச்சனை?
"தண்ணீர் பிரச்சனை எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது. கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது. மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.
#நீர் பற்றாக்குறை#
*தண்ணீர் வாழ்வின் மிகச்சிறந்த அம்சம், அனைத்து பொருட்களின் விலைமதிப்பற்றது. துரதிருஷ்டவசமாக, நிலத்தில் இருப்பதை விட நமது கிரகத்தில் இன்னும் அதிக தண்ணீர் உள்ளது, இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சுத்தமான நீர் இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்திய ஆய்வுகள் படி, சுமார் 1.2 பில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாத கிட்டத்தட்ட இல்லாத நிலையில் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். கிட்டத்தட்ட 2.6 பில்லியன் மக்கள் அடிப்படை சுகாதாரத்திற்கான தண்ணீர் இல்லை. இவை ஆபத்தான புள்ளிவிவரம் மற்றும் ஏதேனும் கவலை இல்லாவிட்டால், இந்த புள்ளிவிவரங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் மோசமடையக்கூடும் என்பதுதான்.
#தண்ணீர் சண்டை#
*1995 இல், உலக வங்கி துணைத் தலைவர் இஸ்மாயில் செராகல்டின், "அடுத்த நூற்றாண்டின் போர்கள் தண்ணீர் மீது சண்டையிடப்படும்.
*மெசொப்பொத்தேமியாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் சண்டையிட்ட கடைசி போர்,
*குறைந்த நீர் பற்றாக் குறையால் 2003 ல் தொடங்கிய டார்பூர், சூடான் இரத்தம் தோய்ந்த மோதலில் 400,000 ஆப்ரிக்கர்கள் கொல்லப்பட்டனர்,
#தண்ணீர் அல்லாஹ்வின் அருட் கொடை#
இன்னும் அவன் எத்தகையவனென்றால்
(மழை என்னும்) தன் அருளுக்கு முன்
குளிர்ந்த காற்றுகளை நற்செய்தியாக அனுப்புகின்றான்.
(அன்றியும்; நபியே)
வானத்திலிருந்து தூய்மையான நீரை நாமே இறக்கி வைக்கிறோம்.
(குர்ஆன் 25:48) ).
அதைக்கொண்டு (மழை)
வரண்ட பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும்;
நாம் படைத்த மிருகங்ளுக்கும்; மனிதர்களுக்கும் புகட்டுவதற்காகவும் (மழை)யை நாம் இறக்கினோம்.
( குர்ஆன் : 25: 49 )
உண்மையில், இன்று பூமியின் மேற்பரப்பு 70% (அதிகமான கடல்கள்)
நீர் உள்ளடக்கியது என்று நமக்குத் தெரியும். மேகங்கள் - பால்வெளி - - அத்துடன், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் எல்லா பிராணிகளையும் தண்ணீரிலிருந்து படைத்தான்.
அவற்றில் சில தன் வயிற்றின் மீது ஊர்ந்து நடப்பவை;
இன்னும் சில இரண்டு கால்களால் நடப்பவை.
இன்னும் அவற்றில் சில நான்கின் மீது நடப்பவை. அல்லாஹ் தான் நாடியதைப் படைப்பான் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் "(குர்ஆன் 24-45).
சுகாதாரக்கு மிக முக்கியமான காரணி தண்ணீர்:
உண்மையில் அது நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.
நம் மூளை 95% நீர்,
இரத்தம் 82% மற்றும்
நம் நுரையீரல் 90% நீர். தண்ணீர் இல்லாமல் நாம் இறந்துவிடுவோம்.
பிறந்த குழந்தைகளுக்கு
75% தண்ணீர் இருக்கிறது. இன்னும் ஒரு வயது வந்தவுடன் அக்குழந்தையின் உடலில் தோராயமாக 60% நீர் இருக்கின்றது.
விலங்குகளில் சராசரியாக 60% தண்ணீர்.
மற்றும் 75% வரை காய்கறிகளில் உள்ளன. மனித மூளை 90% நீர் கொண்டது.
நாம் பேசுவது;
சிந்திப்பது;
சாப்பிடுவது,
எழுதுவது;
அனைத்தும்
நம் உடலில் தண்ணீர் இருப்பதின் அடிப்படையிலேயே நடைபெருகின்றது.
(மேல நாம் ஆயத்துடன் இதை ஒப்பிட்டு பாருங்கள்)
# தண்ணீரை தடுக்க யாருக்கும் அனுமதியில்லை#
*நீங்கள் பருகும் தண்ணீரைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் இறக்குகிறீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் விரும்பினோம் என்றால் நீங்கள்
(குடிக்க முடியாதபடி) அதை கசப்பானதாக ஆக்கி விடுவோம்.
"(குர்ஆன் 56: 68-70).
அனைத்து மனிதர்களையும், விலங்குகளையும்,
தாவர உயிரினங்களிடையேயும் சமபங்கு கொண்டு நிர்வகிக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்க வேண்டும். உண்மையில், இது சஃபா என்ற நீரில் உரிமை என்ற சட்டத்தில் விதிக்கப்படுகிறது.
நாம் தண்ணீரில் உள்ளோம், நாம் அதில் வாழ்கிறோம். எனவே, இந்த விலைமதிப்பற்ற தண்ணீர் அல்லாஹ்வுக்கு சொந்தமானது.
உலகப் பார்வையில் இயற்கை வளங்கள்
"பொது சொத்து"
அதை பறிப்பதற்கோ;
அழிப்பதற்கோ;
குறைப்பதற்கோ
எந்த கொம்பனுக்கும் அதிகாரமில்லை.
#அல்லாஹ்வின் அருட்கொடைகாளை நாம் வீண்விரயம் செய்யக்கூடாது#
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ مَا هَذَا السَّرَفُ فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَار
ரஸுல் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நடந்து செல்கிறார்கள்.
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு ஒழு செய்கிறார்கள்.
எது என்ன வீண்விரயம் என்று கேட்டார்கள் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்.
ஒழு செய்யக்கூடிய தண்ணீரீல் வீண்விரயமா?
ஆம்! அது ஓடக்கூடிய தண்ணீராக இருந்தாலும்தான்.
இன்றைய வசதியான உலகில், நம் கார்களை கழுவுதல்;
அல்லது
தண்ணீர் குழாய்கள் சரி வர மூடாமலிருப்பது;
பல் துலக்குவதில்; குளிப்பதில்; குடிப்பதில்;
இப்படி எதில் வீண் விரயம் செய்தாலும் அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்ல வேண்டும்.
*நினைவில் கொள்க!
அரேபியா, அருகிலுள்ள கிழக்கு, மற்றும் சஹரன் வட ஆபிரிக்காவின் கடுமையான பாலைவன சூழல் காரணமாக
தண்ணீர் மிகவும் விலையுயர்ந்த வளங்களாக கருதப்படுகின்றது.
# தர்மத்தில் சிறந்தது தண்ணீர்#
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم " ليس صدقة أعظم أجرا من ماء "
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
தண்ணீரை விட பெரிய ஸதக்கா (தர்மம்) இல்லை என்றார்கள்.
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ النبي صلى الله عليه وسلم نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ
3664
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து;
என் தாய் மரணித்துவிட்டார்கள்
அவர்களுக்காக தர்மம் செய்யலாமா? என்று கேட்டார்கள்.
செய்யலாம் என்றார்கள் மாநபி.
தர்மம் செய்வதில் எது சிறந்தது என்றார்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு.
தண்ணீர் புகட்டுவது என்றார்கள் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
(தண்ணீரை சேமித்து தர்மம் செய்வோம்)
கருத்துரையிடுக