# பகுதி : 2 #
இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தனிச்சிறப்புகள்:
1; இறை ஞானம்
2: வணக்கசாலி
3: நற்குணங்கள்
4: பேச்சாற்றல்
5: எழுத்தாற்றல்
6: கராமாதுல் வலி
7: இமாம் : வலி:
அஹ்லுல் பைத் என மூன்றையும்
தாங்கியவர்கள்.
#இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
தங்கள் பாட்டனார் ரஸுல் ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வழி முறையை தவராமல் பின்பற்றினார்கள்.
#வேர்வை உதிரும் முன்#
"தங்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடத்தில் வேர்வை ஆறு போல் விழுவதைப்பார்த்து,
எங்கள் பாட்டனார் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; உழைப்பவரின் வேர்வை உதிர்வதற்கு முன் ஊதியத்தை கொடுங்கள் என்றார்கள்,
என்று சொல்லி ஒரு பெரிய பண முடிப்பை எடுத்து,
உழியர்களுக்கு கொடுத்தார்கள்.
#யாராக இருந்தாலும்#
தங்கள் வீட்டிலுள்ள ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார்கள் இமாம் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு.
பசி மயக்கம் முகத்தில் தெரிகிறது.
இமாம் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் செல்வதற்கு இப்னு கனீஸ் அவர்களுக்குப் பல நாள் ஆசை.
ஆனால் நிறைவேறியதில்லை.
ஜஃபர் நாயகம்"வேண்டாம்" என தடுத்துவிடுவார்கள்.
இன்று ஒரு முடிவுடன் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் செல்ல தீர்மானித்து,
பின் தொடர்கிறார்.
ஒரு இருட்டுப் பகுதியில்
அவர்கள் கொண்டு வந்த ரொட்டுத்துண்டு விழுந்து விடுகின்றது.
ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு கீழே குனிவதற்கு முன் வேகமாக வந்த
இப்னு கனீஸ்,
நாயகமே! நான் எடுத்து தருகிறேன் என்று சொல்லி,
சிதறிய ரொட்டிகளை எடுத்துத் தந்து விட்டு
தாம் இப்னு கனீஸ் என்பதையும் தெரிவிக்கிறார்.
இருவரும் பனு சயீதா என்ற ஊருக்கு வந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த அவ்வூர்
மக்களைப் பார்க்கிறார்கள் இமாம் ஜஃபர் நாயகம்.
வறுமையும்; ஏழ்மையும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
ரொட்டித் துண்டுகளை எடுத்து, ஒவ்வொரு படுக்கை அடியிலேயேயும் வைத்து விட்டு வந்துவிடுகிறார்கள்.
தம் பசியை மறைத்து மக்கள் பசி போக்கும் குணம் இயற்கையிலயே தங்கள் பாட்டனார் முஹம்மது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தும்;
அலி நாயகம்;
ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு:
ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களிடமிருந்தும் வந்தது.
# இறை நேசர்களை
சீண்டினால் #
1: அப்பாஸிய கலீபா மன்சூர், தனது பணியாளர்களில் ஒருவரான ரபீஐ அனுப்பி, இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்துல்லாஹி அலைஹி) அவர்களை தனது தர்பாரிற்கு அழைத்து வரச் சொன்னார். இமாமவர்கள் மன்சூரின் இருப்பிடத்தை வந்தடைந்ததும்,
மன்சூர் பெரும் சினத்துடன் இமாமவர்களை நோக்கி, 'நான் உம்மைக் கொல்லாது விட்டால் இறைவன் என்னைக் கொல்லட்டும், எனது ஆட்சியை எதிர்த்து எனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயற்சி செய்கிறீரோ?' எனக் கேட்டார்.
இமாமவர்கள் கூறினார்கள்: 'இறைவன் மீது ஆணையாக, நான் இவ்வாறான ஒரு வேலையை செய்யவில்லை, இவ்வாறான ஒரு தகவல் சொல்லப்பட்டிருந்தால் அது பொய்யாகும், சொன்னவரும் ஒரு பொய்யராவார்:
இப்போது மன்சூரின் கோபம் சற்றுத் தணிந்தது.
அவர், இமாமவர்களை தன்னிடம் அழைத்து, 'இன்னாரின் மகன் இன்னார் தான்
இந்த செய்தியை எனக்குச் சொன்னார்' என்று கூறினார்.
அவரை எனக்கு முன்னால்
அழைத்து வரச்செய்யுங்கள் என இமாமவர்கள் கூறினார்கள்.
அவரும் வந்தார்.
அவரைப் பார்த்த
மன்சூர்,
'நீ ஜஃபர் ஸாதிக் அவர்களை அவ்வாறு கூறப்பட்டதை செவிமடுத்தாயா?' எனக் கேட்டார்.
அதற்கவர் 'ஆம்' என்றார். இமாமவர்கள், மன்சூரை நோக்கி, 'அவ்வாறெனில் அவரை சத்தியம் செய்யச் சொல்லுங்கள்' என்றார்கள். 'சத்தியம் செய்வீரா?' என மன்சூர் கேட்க, அம்மனிதர் 'ஆம்' என்றார். அவர் சத்தியம் செய்யத் தயாரான போது, இமாமவர்கள் அம்மனிதரை நோக்கி, 'சத்தியம் செய்வதெனில், இவ்வாறு கூறும்: 'நான் இறைவனின் சக்தியை விட்டும் தூரப்பட்டு, என் சக்தியின் மீது சத்தியம் செய்கின்றேன்'. அம்மனிதன் இதைச் சொல்லுவதற்குச் சற்று தயங்கினான். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வாறு சத்தியம் செய்தான். அடுத்த நொடியே, அவன் தரையில் விழுந்து தனது கைகால்களை உதறிக் கொண்டு மரணித்துப் போனான்.
( இறை நேசர்களை இட்டுக்கட்டும் அனைத்து கூட்டங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் இது போல்தான் நடக்கும்)
2: மதீனாவின் ஆட்சியாளராக இருந்த தாவூத் இப்னு அலி இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பவன், இமாமவர்களின் பிரதிநிதியான முஅல்லீ இப்னு குனைஸைக் கொலை செய்து விட்டு, அம்மனிதரிடமிருந்த இமாமவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டான். அதையறிந்த இமாமவர்கள் தாவூதின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த தாவூதைப் பார்த்துக் கூறினார்கள்: 'என்னுடைய பிரதிநிதியைக் கொன்று விட்டு அவரிடமிருந்த என்னுடைய சொத்துகளையும் அபகரித்துக் கொண்டாயா? அநீதி இழைக்கப்பட்டவனின் சாபம் மனிதனை அழித்துவிடுமென்று உனக்குத் தெரியாதா? இறைவன் மீது ஆணையாக உன் மீது அழிவு உண்டாகட்டும்'.
'என்ன ஜஃபர்
உமது துஆவைக் கொண்டு பயமுறுத்துகிறாயோ?' என தாவூது இருமாப்புடன் கூறி, இமாமவர்களை அனுப்பி வைத்து விட்டான்.
தமது இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்ட இமாம்;
அன்றைய இரவு முழுவதும் இறைவனை வணங்குவதில் கழித்தார்கள். பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
அதிக நேரம் செல்லவில்லை. தாவூதின் வீட்டிலிருந்து அழுகை ஓசை கேட்டது.
அது தாவூத்தின் மரண ஓசை...
# தொடரும் : 2 #
கருத்துரையிடுக