11/04/2018

இஸ்லாம் காட்டித் தரும் முத்தங்கள்

இஸ்லாம் காட்டித்தரும் முத்தங்கள்.

♦ அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைவிட வயதில் முதிர்ந்தவர் என்ற ஒரு நோக்கத்துக்காக அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையையும் இரு காலையும் முத்தமிட்டார்கள்.

நூல்: இமாம் புஹாரியின் அதபுல் முப்ரத் பக்கம் 976

♦ இரு யஹூதிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் கிடைத்தவுடன் திடுக்கிட்டு நாயகத்தை நபியாக ஏற்று நபிகளாரின் கையையும் கால்களையும் முத்தமிட்டனர்.

நூல் : திர்மிதீ, பாடம்: சூரத் இஸ்ரா விளக்கவுரை

♦ முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகளாகிய அன்னை பாதிமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு சென்றால் அவர்கள் தன் தந்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிடுபவளாக இருந்தார்கள்.

நூல்: அபூ தாவூத், திர்மிதீ, நஸாயீ

♦ கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அல்லாஹ் மன்னித்து விட்டதாக நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த போது அந்த ஸஹாபியவர்கள் உடனே வந்து நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிட்டார்கள்.

நூல்: துர்ருல் மன்தூர் பாகம் 4, பக்கம் 314

♦ அப்துல் கைஸ் தூது குழுவினர் கூறினார்கள் : நாம் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கை மற்றும் கால் பாதத்தை எங்களில் யார் முதலில் முத்தமிடுவது என்பதற்காக ஓடுவோம்.

​​நூல்கள்: அபூதாவூத் 5206, ஸூனன் பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார்

♦ சில யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கைகள், கால் பாதத்தை முத்தமிட்டார்கள்.

​​நூல் : இப்னு மாஜா 3705

♦ ஒருவர் நன்மக்களின் காலை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

​​இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

​நூல் பத்ஹுல் பாரி

♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டார்கள்.

​​நூல் முஸ்னத் அஹ்மத் பாகம் 48 பக்கம் 77

♦ பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை முத்தமிட்டார்கள்.

​நூல் : இப்னு அஸாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தாரீகு திமிஸ்க் பாகம் 7 பக்கம் 147

♦மேலும் மய்யதையும் கூட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் முத்தமிட்டிருக்கிறார்கள். உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இறந்த போது அவர்களின் (மய்யித்தை) முகத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள்.

​​நூல் திர்மிதி

​​♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைந்த போது அவர்களின் புனித உடலை அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டார்கள்.

​​நூல் புகாரி

​​எனவே பெரியார்கள், ஷைகுமார்களின் (கை, கால்கள், மைய்யத், கப்ர்) போன்றவற்றை அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் முத்தமிடல் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவிடயமாகும்.

உத்தமர்கள் காட்டித்தந்த இந்த நற்பண்பு ஹயாத்தோடு இருப்பவரையும், மரணித்தவரையும் கண்ணியப்படுத்துமாறு சொல்கிறது. எனவே அதை நாமும் பின்பற்றி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து மரணிக்க வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக அமீன். 

குறிப்பு:
வஹ்ஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தாக தெரியலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது ஆகுமான இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த காரியமே. போலிகளை கண்டு உண்மை விசுவாசிகள் ஏமாற மாட்டார்கள். பெரியோரையும் பெற்றோரையும் கண்ணியப்படுத்துவோம்.

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search