03/04/2018

யார் அந்த இறைநேசர் ??




எழுத்து;
  மௌலவி V.M.முஹம்மது
     ஜகரிய்யா யாஸீனிய்

**** யார் அந்த இறைநேசர் ***
           
              ( பகுதி: 1 )

1: ஒரு நள்ளிரவு பல்க் நாட்டின் ஓர் வீட்டில் இறைநேசர் ஒருவர் அல்லாஹ்வை வணங்குகிறார்.
வீட்டிலுள்ள பொருட்கள் உருண்டோடின.
எலி என்று எண்ணிய அவர் கடைசியில் ஒரு மனிதரை காண்கிறார்.
திருட வந்த அவரை இறைநேசர் அழைத்து உட்கார வைத்து;
அன்பரே! உமக்கு அன்பளிப்பு செய்யும் அளவிற்கு என்னிடம் வெகுமதி ஏதுமில்லை.
நீ ஒழு செய்து அல்லாஹ்வை வணங்கு.
நீ கேட்பது கிடைக்கும் என்றார்.

பொழுது புலர்ந்தது....
இறைநேசரை காண வந்த ஓர் மனிதர் நூறு பொற்காசுகளை கொடுத்து செல்கிறார்.
பொற்காசுகளை திருடரிடம் கொடுத்து;
உம் தேவையை அல்லாஹ் நிறைவேற்றினான் என்றார்.
ஓர் இரவில் அல்லாஹ்வை வணங்கியதற்கு இவ்வளவு வெகுமதி. 
அனு தினமும் வணங்கினால்; கண்கலங்கினார். உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டது.
பொற்காசுகள் வேண்டாம் என்று
இறைநேசரிடம் மன்னிப்பு கேட்டு; திருட்டுத் தொழிலை விட்டு மாபெரும் இறைநேசரானார்.
அத்திருடரின் உள்ளத்தில் மாற்றம் ஏற்படுத்திய

*  அந்த இறைநேசர் யார் *

2 ; ஓர் நாள் கிழிந்த ஆடை அணிந்து சூபிகள் வணங்கும் இடத்திற்கு இறைநேசர் வருகிறார்.
ஒரு பக்கீர் அல்லாஹ்வை வணங்குவது போல் நடிக்கிறார் என்று மாணவர்கள் சூபிகளிடம்
சொல்கிறார்கள். இவ்வேளை ஒழு செய்ய வந்த இறைநேசர் கிணற்றில் வாளி போடும் போது கயிறு அறுந்து கீழே விழுகின்றது.
சூபிகள் இறைநேசரை கடிந்து கொள்கிறார்கள்.
பாத்திஹா சூரா ஓதினால் வாளி மேலை வரும் என்கிறார் இறைநேசர்.
இதுவெல்லாம் நடக்கிற காரியமா?  என்கிறார்கள் சூபிகள்.
சரி வேறு சூராக்கள் ஓத அனுமதி தாருங்கள் என்கிறார் இறைநேசர்.
சரி ஒதுங்கள்..
வாளி மேலை வருதான்னு பார்ப்போம் என்கின்றனர் சூபிகள்.
ஒரு சூராவை ஓதி ஊதினார்..
வாளி மேலை வந்தது.
சூபிகள் அதிசயத்து
தாங்கள் யார்?? என்றனர்.
நீங்களும் உங்கள் மாணவர்களும் வழிபோக்கர்கள்; ஏழைகள்;
பக்கீர்களை ஏளனமாக பார்க்காதீர்கள்..என உபதேசித்து விட்டு ;
தாங்கள் யார் என்று சொல்லாமல் செல்லுகின்றார்.
நான் யார் தெரியுமா???
எப்பேற்பட்ட ஞானினு தெரியுமா???
என்று இறைநேசர்கள் சொல்லமாட்டார்கள்.
காரணம் இறைவனில் தன்னை அழித்து;
*தான்* என்ற அகந்தயை அகற்றியவர்கள்..

  *யார் அந்த இறைநேசர்*

3: தன் தவ மடத்தில் அமர்ந்திருந்த இறை நேசரிடம்:
நான் நோயாளும்; வறுமையாளும்;
பீடிக்கப்பட்டிருக்கிறேன்.
எனக்கு நல் உதவி செய்யுங்கள் மஹானே என்று  ஒருவர் உதவி கோரினார்.
இரக்கம் கொண்ட இறைநேசர்...
சரி...
ஒரு சீட்டில் தொழில் பெயர்கள்  எழுதி  பெட்டியில் போட்டு எடுத்து வா என்றார்.
அது போலவே பெட்டியும் கொண்டு வரப்பட்டது.
கண் மூடி இறை நேசர் ஓர் சீட்டை எடுத்தார்.
திருட்டுத் தொழில்  என்று வந்தது.
நீ திருட்டுத் தொழிலில் ஈடுபடுவாய் என்றார் இறைநேசர்.
மஹான் இப்படி சொல்லிவிட்டார்களே என்று ஒரு திருடக் கூட்டத்தலைவனை சந்தித்தார் அவர்.
குழுவில் சேர விருப்பமும் தெரிவித்தார்.
எங்கள் குழுவில் சேர  முதலில் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும் என்றான் தலைவன்.
சரி என்றார்.
சிறிது காலம் கழிந்தது.
ஒரு பெரிய வணிகக்கூட்டம் வந்த சமயம்;
மறைந்திருந்த திருடர்கள் வணிகக்கூட்டத்
தலைவனை பிடித்து;
தங்கள் தலைவனிடம் அழைத்து செல்கிறார்கள்.
தன் கூட்டத்தில் புதிதாக வந்த மனிதரை சோதிப்பதற்காக
தம்பி! இதோ இந்த வணிகக் கூட்டத்தலைவனின் தலையை வெட்டியெடு என்றான் கொள்ளைக் கூட்டத்தலைவன்.
வாளை எடுத்தார்.
சிறிது அமைதி காத்து யோசித்தார்.
கொள்ளைக் கூட்டத்தலைவனின் ஆணைக்கு பதில்
அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்படலாம் என்று முடிவெடுத்து;
வாளுக்கு இறையாக கொள்ளைக் கூட்டத் தலைவனை வெட்டி வீழ்த்தினார்.
தன் உயிர் காத்த மனிதருக்கு செல்வங்களை வாரி வழங்கினார் வணிகத்தலைவன்.
திருட வந்த அம்மனிதர் மாபெரும் செல்வந்தரானார்.
ஒரு மனிதரின் விதி என்ன என்பதை அறிந்த அந்த

     *இறைநேசர் யார்?

ஆயிரம் மாணவர்களை உருவாக்கினார்.

விண்வெளியில் பறந்து;
நீரீல் நடந்து செல்வார்.

அன்றைய கால குத்புல் அக்தாப் என்றும் அழைக்கப்பட்டார்.

அபூ யஸீத் பிஸ்தாமி
( ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அவர்களின் உற்ற நண்பராகவும் இருந்தார்.

* யார் அந்த இறைநேசர்'

* அவர்கள்தான் *
அஹ்மதிப்னு கஸ்ரவிய்யா ( ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்.

சரி...ஆரம்ப ( 1 ) சம்பவத்தில் திருட வந்து  இறைநேசரானவர் யார்னு தெரியுமா?

அவர்கள்தான்
புழைல் இப்னு இயாழ்
( ரஹ்மதுல்லாஹி அலைஹி)

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search