எழுத்து: V.M.முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் #
# தலைப்பு #
# ஷஃப் ஈ பராஅத் #
# ஷஃபான் மாதத்தில்,
15 ம் பிறையில் வரும் ஷாப்-ஈ-பாரத் இரவு உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது
# முஃமின்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள், அவர்களுக்கு பெரும் வெகுமதியை இவ்வுலகிலும்; ஆகிராவிலும்
அல்லாஹ் தருகின்றான்.
முஃமின்களுக்கு
மன்னிப்பும்; நரகவிடுதலையும்;
தருவதாக
அல்லாஹ் சொன்ன ஓர்
இரவு தான்
"பராஅத்" எனும் இரவு.
# ஷஃபானின் 14 வது மற்றும் 15 வது நாளுக்கு இடையில் இது மத்திய-ஷஃபானில் நிகழ்கிறது.
#அரபியில்
"லைலதுன் நிஸ்ஃப்"
மினி ஷஃாபன் என்றும் அழைக்கப்படுகிறது.
*ஒரு மனிதனின் ஆயுட்காலம் நிர்ணயிக்கும் இரவும் இந்த "பராஅத்" இரவுதான்.
*ரமளானுக்கு அமல்கள் செய்வதற்கு
தயாரிப்பு செய்வதற்கு சோதனை ஓட்டமாக இந்த "பராஅத்" இரவு இருக்கின்றது.
# கேட்டால் தரப்படும் #
عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر
*கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்!
பகலில் நோன்பு வையுங்கள்!
ஏனென்றால்
நிச்சயமாக அல்லாஹ் அவ்விரவில் இப்படி கூறுகின்றான்.
என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன்.
என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன்.
என்னிடம் கேட்போர் யாரும் உண்டா? அவர்களுக்கு நான் அதை வழங்குகிறேன்.
சுபுஹ் தொழுகை நேரம் வரும் வரை அல்லாஹ் கேட்டுக் கொண்டே இருப்பான்.
என்றார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
( இப்னு மாஜா 1388,)
#விடுதலை நாள்#
*கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
( ஷுஃபுல் ஈமான் 3837 )
# தலைவிதி நிர்ணயிக்கப்படும்#
عن عائشة قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب
* ஆயிஷா! ஷஃபான் மாதத்தின் சரி பாதி இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உமக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.
அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
' இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்க இருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்கள் எழுதப்படுகின்றது.
மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது
என்றார்கள்.
( மிஷ்காத் )
#இரு நபரை மன்னிக்க மாட்டான்#
عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. ) رواه ابن ماجة.
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான்.
1.உருவ வழி பாட்டில்
ஈடுபடுபவர்
2: பகைமை பாராட்டுபவன்.
( நூல் ; இப்னு மாஜா)
# பராஅத்தில் செய்யும் அமல்கள்#
1: மூன்று யாஸீன் ஓதுவது.
2: கப்ர் ஜியாரத் செய்வது.
3: தஸ்பீஹ் நபில் தொழுவது.
4: இஸ்திஃபார் செய்வது.
5: ராத்திபு ) திக்ர் ஓதுவது.
6: பராஅத் துஆ ஓதுவது.
7: சுப்ஹ் வரை அமல்கள் செய்வது.
# பராஅத் இரவைப் பற்றி உள்ள ஹதீஸ்கள்:
பத்து ஸஹாபாக்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
# பலவீனமான ஹதீஸ்களை கொண்டு அமல் செய்வது கூடும் என்று அனைத்து ஹதீஸ்களை வல்லுநர்களும் சொல்வதாலயே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன அந்த பராஅத் இரவை நாம் கொண்டாடுகிறோம்.
குறிப்பாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே அமல்களையும் நாம் செய்கின்றோம்.
# அமல்களை குறைத்து வீண் விவாதம் பேசும் போலி தவ்ஹீத் கூட்டமும்;
தாங்கள் தான் அமல்கள் செய்வதில் முதன்மையானவர்கள் என்பது போல் காட்டிக் கொள்ளும் தப்லீக்வாதிகளும் இந்த பராஅத்" இரவை கொண்டாடாமல் இருப்பதற்கு; வஹ்ஹாபிய கொள்கைகள் தான் காரணம் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.
#பராஅத் துஆ#
* அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய துஆ.
யா அல்லாஹ்! உன் பொருட்டாலும் இந்த பராஅத்தின் பொருட்டாலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டாலும், அவர்களுக்கு முன் வந்த நபிமார்கள் பொருட்டாலும், ரஸூல்மார்கள் பொருட்டாலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கலீபாக்களான அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு), உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), அலீ (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் பொருட்டாலும், பதுறு ஸஹாபாக்கள் பொருட்டாலும், ஏனைய ஸஹாபாக்கள் பொருட்டாலும், பாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் பொருட்டாலும், ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், குதுபு நாயகம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பொருட்டாலும், அவர்களுக்கு முன் வந்த - பின் வந்த குதுபுமார்கள், வலீமார்கள் பொருட்டாலும், ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எமது பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எம் தந்தை நாயகம் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பொருட்டாலும், எம் முரீத்களுக்கும், எம் முரீத்களின் மனைவி மக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகள், தாய் தந்தையருக்கும், அவர்களுக்கு உதவியாகவுள்ள அண்ணன் தம்பிமார்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும், எம் மனைவி மக்கள், அவர்கள் பிள்ளைகள், அண்ணன்மார், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் குடும்பத்தார், உற்றார் உறவினர், உதவியாளர்கள், பேரப்பிள்ளைகள் யாவருக்கும்.....
யா அல்லாஹ்! நல்ல சந்தோஷ¬ வாழ்வையும், நோயற்ற பூரண சுகத்தையும், கொடிய நோய்கள் நம்மை அணுகாமலும், ஆபத்து எம்மை அணுகாமலும், உடலிலே நல்ல சக்தியையும், எம் ஐம்புலன்களும் சிறப்புடன் செயற்படும் தன்மையையும் தந்தருள்வாயாக!
அல்லாஹ்வே! நம் அனைவருக்கும் நீடிய ஆயுளைக் கொடுப்பாயாக! கொடிய நோய்வாய்ப்பட்டுக் கஷ்டப்படுவோருக்குப் பூரண சுகத்தைக் கொடுத்தருள்வாயாக! பரக்கத்தையும் செழிப்பையும் துன்பமற்ற வாழ்வையும் துயரற்ற வாழ்வையும் கவலையற்ற வாழ்வையும் அல்லாஹ் நீ தந்தருள்வாயாக!
நின்றிருக்கும் வியாபாரம் கடல்மடைபோல திறக்கப்பட்டு எங்கும் செழிப்பான வியாபாரம் நடந்து நம் பிள்ளைகளின் வாழ்வைச் செழிப்பாக்கி வைப்பாயாக, நம் பிள்ளைகள் செல்வச் செழிப்புடன் வாழ அருள்பாலிப்பாயாக! குடும்பங்கள் கோபம், பொறாமை முதலானவைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ அருள்பாலிப்பாயாக!
நீதி, நியாயம், நேர்மை, உண்மை, மனவலிமை ஆகியவைகளை எமக்குத் தந்து மக்கள் மத்தியிலே எம்மை உயர்ந்தவர்களாக்குவாயாக!
உன் உயர்வு மிக்க பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரினும் மிக்கவர்களாக அன்பு கொண்டு அவர்களை உயர்வுபடுத்திப் பேசும் சுகமான நாவையும் அவர்களை உயர்த்திப்பாடும் அழகான பாவையும் அவர்களின் உறுதியையும் உயர்ந்த ஈமானையும் தந்தருள்வாயாக! அவர்களுக்காக தம்மைத் தியாகஞ் செய்யும் உயர்ந்த பண்பையும் உடல் சக்தியையும் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்து அவர்களை இழிவுபடுத்தி அந்நியர் பணத்தில் வாழும் இஸ்லாத்திலுள்ள இஸ்லாத்தின் எதிரிகளைப் பிடுங்குவாயாக! இஸ்லாத்தின் பரிசுத்தத்தை மாசுபடுத்தி அந்நியர் மத்தியில் இழிவுபடுத்தும் இஸ்லாமிய துரோகிகளைச் சித்திரவதைக்குள்ளாக்குவாயாக! கொடிய நோய்களால் பீடிக்கப்பட்டு இழிவுற்று அழிந்து மடியச் செய்வாயாக!
அல்லாஹ்வே உனக்காக உன் நபிக்காக, உன் ஊழியர்களுக்காக வாழ்ந்து வரும் உன் தியாகிகளுக்கு பூரண நல்வாழ்வும் நீடிய ஆயுளும் அளவற்ற சந்தோஷமும் நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!
ஆமீன் யாரப்பல் ஆலமீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
கருத்துரையிடுக