16/11/2024

அஹ்லுல் பைத்துகளை ஏன் பின்பற்ற வேண்டும்

அஹ்லுல் பைத்துகளை ஏன் பின்பற்ற வேண்டும்.

✍️ Dr.A.முஹம்மது காலித் யாஸீனிய்
பேராசிரியர் : அறபுத்துறை, ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி.

பதிவு
(மறைஞானப் பேழை - நவம்பர் 2024)


“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது 1.அல்குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது 2.அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.                                                                                             ( முஸ்லிம், மிஷ்காத் 567 )

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்த தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் ஒரு பிரசங்கம் செய்தார்கள். அந்தப் பிரசங்கத்தில் மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய வாரிசுகளை விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் ( ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                                                              ( திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத் )

அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக் கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூற நான் கேட்டேன்.                                                      ( மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343 )

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது .(அஹ்மத்: 5 – 182)

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர். என்று ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள் கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

வள்ளல் நபியின் வழித்தோன்றலாக திகழும் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம்  அவர்களின் மகத்துவத்தை அறிந்து அவர்கள் மீது நேசம் கொண்டு அவர்களை அடிமராமல் பின்பற்றினால் ஈருலகிலும் வெற்றி பெறுவது நிச்சயமே. 

சங்கைமிகு யாஸீன்அலி நாயகம் அவர்கள், ரசூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் நிலைமாறாத, மாற்றமடையாத பூரண தோன்றலாவார்கள். நமது ஆருயிர் ஷைகு நாயகம் அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்கள் நமக்கெல்லாம் வரப்பிரசாதமாக அஸ்ஸய்யித் யாஸீன்அலி நாயகம் அவர்களை தந்துள்ளார்கள்.   தவ்ஹிதுடைய கல்வி நுணுக்கமானது, மிக உயர்வுமிக்கது அத்தகைய மெய்ஞ்ஞான கல்வியை அவ்வப்போது நமக்கு மத்தியில் அருளி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் தர்கா சம்பந்தப்பட்ட கூட்டத்தில்   சங்கைமிகு நாயகம் அவர்கள் ஞான சம்பந்தப்பட்ட ஏழு பொக்கிஷமான விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தார்கள், ஞான தாகம் கொண்டு அலைவோரின் தாகத்தை தணிக்கும் நீர் அருவியாக அவர்கள் ஆற்றிய அருளுரை அமைந்திருந்தது.  அந்த ஒரு விஷயமே அவர்கள் ஞானக்கடலில் கரை கண்டவர்கள் என்பதற்கு அந்த ஒரு அருளுரையை அத்தாட்சியாகும்.

அவர்களின் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானது என்பதனை ஒவ்வொரு முரீதும் அறிந்து கொண்டு வருகிறார்கள். நம்மில் சிலருக்கு அவர்கள் கூறிய வார்த்தைகள் அப்படியே நடந்து இருக்கிறது. அது அவர்களின் கராமத்தே அன்றி வேறில்லை. யாஸீன்அலி நாயகம் அவர்களை நம் வாழ்வில் பெற்றுக் கொண்டது அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்று தான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் தன்னுடைய இறைநேசர்களுக்கு தன் புறத்திலிருந்து மறைவான விஷயங்களை அறிவித்துக் கொடுப்பான் அவை நபிமார்களுக்கு வஹி என்றும் வலிமார்களுக்கு இல்ஆம் என்றும் கணக்கிடப்படுகிறது.

நபியவர்கள், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முன் நிறுத்தி  தன்னுடைய குடும்பத்தார்களுகாகா துவா செய்தார்கள் அவ்வாறே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுத்த மறைவான ஞானத்தை  போன்றும் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்த மறைவான ஞானத்தை  போன்றும் அல்லாஹ் நபியவர்களின் குடும்பத்தார்களுக்கும் மறைவான ஞானத்தை அறிவித்துக் கொடுக்கிறான். 

இப்ராஹிம் அலை அவர்கள் வரலாற்றில் முன்கூட்டியே குழந்தை பிறக்க போகும் நற்செய்தி சொல்லப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது

وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏

அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள். அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினார்.

அவர்கள் கூறினர்: “ஆம்” அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.                                                                                                                    ( அல்குர்ஆன் : 51: 28 ) 

இது போன்று வலிமார்கள் அவுலியாக்கள் வரலாற்றிலும் சொல்லப்படுகிறது. நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம்  அவர்கள் பிறப்பதற்கு முன்பு ஒருநாள் இரவில் அவர்களின் தாயார் அன்னை  ஃபாத்திமா  அம்மையார் தூங்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை கனவில் காண்கிறார்கள் அப்போது நாகூர் நாயகத்தின் தாயாரிடம் சுபச்செய்தியாக உங்களுக்கு ஒரு மகன் பிறப்பார் என்றும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்துக்காகவும் அனைத்து மக்களின் ஈமானை பாதுக்காக்கவும் வாழ்வார்கள் என அறிவித்தார்கள். என்று வரலாற்று குறிப்புகளில் காணப்படுகின்றன .

இது போன்று பல நிகழ்வுகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தன் வாழ்நாளிலும், தன் மறைவிற்குப் பிறகும், ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிவித்துள்ளார்கள்.

அதேபோன்று குத்புல் அக்தாப் 'கவ்துல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு   அவர்களும்,  ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களும் மறைவான விஷயங்களை முன்னறிவிப்பு செய்துள்ளார்கள் சங்கைக்கும் மேன்மைக்கும் உரிய தங்களின் பாட்டனார்களைப் போலவே இக்காலத்தின் அதிபதியாக இருக்கும் செய்கு நாயகம் அவர்களும் மறைவான விஷயங்களை அறிவித்துள்ளார்கள்

ஆத்ம சகோதரர் ஒருவர், அஸ்ஸய்யித் யாஸீன்அலி நாயகம் அவர்களிடம் தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு தாங்களே பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் அவரின் கோரிக்கையை ஏற்ற  நாயகம் அவர்கள் ஆண் குழந்தையின் பெயரை எழுதிக் கொடுத்தார்கள். இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நாயகம் அவர்கள்  முன்கூட்டியே அறிந்து தான் அவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளார்கள், அவ்வாறே பிற்காலத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இதுபோன்று பல கரமத்துக்கள், முரிதுகள் அஹ்பாபுகளின் வாழ்வில் ஒவ்வொரு வடிவியிலும் ஒவ்வொரு விதத்திலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

ஹக்கின் அருட்கொடையாக நமக்கு மத்தியில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நமது ஷெய்கு நாயகம் அவர்களை உள்ளாலும், வெளியாலும் பரிசுத்த உள்ளத்துடனும், உறுதியான மெய்விசுவாசத்துடனும், பற்றிநின்று அன்னவர்களின் பொருட்டால் இம்மையின் நற்பாக்கியங்களையும், மகத்தான மறும்மைப் பேறுகளையும், பெற்றுக் கொள்வோமாக.

எவர் ரசூல் (ஸல்) அவர்களின் திருக்கரத்தைப் பற்றுவதாக நல்லெண்ணம் கொண்டு நம் கையை பற்றுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் எனது பாட்டனார் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் கரத்தையே பற்றிய வர்களாவார்கள்.  என்ற சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் அமுத மொழிக்கு ஏற்ப, யாஸீன்நபி தந்த யாஸீன்அலி மௌலானா நாயகம் அவர்களை பின்பற்றி அவர்களுக்கு அடிபணிந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்.

🤲🤲🤲🤲🤲

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search