கர்பலா சிறப்பு பயான் நிகழ்ச்சிதிருச்சி, ஜூலை.30 திருச்சி ஹள்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்ஹா,யாஸீனிய் மௌலவிகள் பேரவை ,மெய்ஞ்ஞான இளைஞரணி சார்பில் கர்பலா என்னும் சிறப்பு சொற்பொழிவு (பயான்) நிகழ்ச்சி திருச்சி - மதுரை ரோட்டில் உள்ள தப்லே ஆலம் நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் 30-07-2023 அன்று மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.★ இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுன்னத் வல் ஜமாத் பேரியக்கத் தலைவர் ஷேக்அப்துல்லா ஜமாலி ஹள்ரத் அவர்கள் கலந்து கொண்டு,அண்ணல் அலியாரும் இளவல் ஹுஸைனாரும் என்ற தலைப்பில் அவர்களுடைய தியாக வரலாற்றை நினைவுகூரும் வகையில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.★ நிகழ்ச்சிக்கு அல்ஹாஃபிழ் A.முகமது கௌஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சங்கைக்குரிய அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தினர்கள்,தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் கண்ணியத்திற்குரிய கலீஃபாக்கள், ஹள்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்ஹா பங்காளிகள் & மஹல்லாவாசிகள்,மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரியின் நாளிர் ஹள்ரத் மௌலவி.N.ஸயீது முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மிஸ்பாஹி அவர்கள், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திருச்சி மாவட்டச் செயலாளர் அல்ஹாஜ்.G.H.முஹம்மது ஹக்கீம் அவர்கள் முன்னிலை வகித்தனர். ★ முஹம்மது ஹாரிஸ் ஆலிம் யாஸீனிய் அவர்கள் கிராஅத் ஓதினார், முஹம்மது ஹனஃபி ஆலிம் யாஸீனிய் அவர்கள் வஹ்தத்துல் வுஜூது பாடினார்,அல்ஹாஃபிழ்,மௌலவி.V.M.முஹம்மது ஹஸன் ஆலிம் யாஸீனிய் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ★ சங்கைமிகு சையிது.M.யாஸீன் மௌலானா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்,(திருமுல்லைவாசல்), மற்றும் M.பைசல் முஹம்மது ஆலிம் யாஸீனிய்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ★ அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி,அரபித்துறை, பேராசிரியர்மௌலவி.Dr.A.முஹம்மது ஹாலித் ஆலிம் யாஸீனிய் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
★ யாஸீனிய் மௌலவிகள் பேரவைதலைவர் மௌலவி.A.கலீல் ரஹ்மான் ஆலிம் யாஸீனிய் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.கர்பலா சிறப்பு பயான் நிகழ்ச்சியில் தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் கலீஃபாக்கள், மூரிதுகள்,மதரஸா மாணவர்கள், மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் சிறப்பான தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக