# பாத்திமா நாயகி #
# தனிச் சிறப்புகள் #
#V.m.முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் #
(அஹ்லுல் பைத்தினர்) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடும்பத்தினர் யார் ?
عن سعد بن أبي وقاص، قال لما نزلت هذه الآية ( ندع أبناءنا وأبناءكم) دعا رسول صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال : اللهم هؤلاء أهل بيت النبي صلى الله عليه وسلم. رواه مسلم.
ندع أبناءنا وأبناءكم)
இந்த ஆயத் இறங்கிய போது, ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள், அலி ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு,
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களை அழைத்து,
اللهم هؤلاء أهل بيت النبي صلى الله عليه وسلم
யாஅல்லாஹ்! இவர்கள் தாம் எம் குடும்பத்தினர் என்றார்கள்.
( நூல் : முஸ்லிம் )
2: எவர் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மகிழ்வித்தாரோ, அவர் என்னை மகிழ்வித்தார்.
என்னை மகிழ்வித்தவர்,
அல்லாஹ்வை மகிழ்வித்தார்.
3: وعن أبي هريرة رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم قال أن فاطمة سيدة نساء أمتي.
-- الصحيح البخاري حديث 728.
நிச்சயமாக பெண்களின் தலைவி அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம் என மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அருளினார்கள்.
( நூல் : புகாரி 728)
*4: قال النبي الاكرام (صلى الله عليه وسلم) فأيما إمرأة صلت في اليوم والليلة خمس صلواة، وصامت شهر رمضان وحجت بيت الله الحرام وزكت مالها وأطاعة زوجها ووالت عليا بعدي دخلت الجنة بشفاعة ابنتي فاطمة وإنها لسيدة نساء العالمين
مشكوة المصابيح حديث 6130.
எந்த ஒரு பெண், ஐந்து நேரம் தொழுது, ரமழான் மாதத்தில் நோன்பு வைத்து, ஹஜ் செய்து, தன் பொருளுக்கு ஜகாத் கொடுத்து, எனக்குப் பின் அலி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை வழி காட்டியாக எடுத்துக் கொண்டாரோ,
அவர், என் மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஷபாஅத்தைக் கொண்டு சுவனத்தில் நுழைவார்.
ஏனெனில் உலகப் பெண்களின் தலைவி பாத்திமா ரலியல்லாஹு அவர்கள் ஆவார்கள் என ரஸுல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
( நூல்: மிஷ்காத் 6130)
- قال رسول اللّه {صلى الله عليه وآله}: {إذا كانَ يَوْمُ القيامَةِ نادى مُنادٍ: يا أَهْلَ الجَمْعِ غُضُّوا أَبْصارَكُمْ حَتى تَمُرَّ فاطِمَة)
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
கியாமத் நாளில் அழைப்பாளர் ( மலக்கு)
ஓ! கூட்டமே! பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா வந்து கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்! என்று சொல்வார்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {أَوَّلُ مَنْ يَدْخُلُ الجَنَّةَ: عَليٌّ وَفاطِمَة}
ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
சுவர்க்கத்தில்
முதலில் நுழைபவர், அலியும் பாத்திமாவும் என்றார்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {خَيْرُ نِساءِ العالَمين أَرْبَع: مَرْيَم وَآسية وَخَدِيجَة وَفاطِمَة}
அகிலப் பெண்களில் மிகச் சிறந்தவர்கள்:
மர்யம் அலைஹி வஸல்லம் அவர்களும்,
ஆஸியா அம்மையாரும்,
கதீஜா நாச்சியாரும்,
பாத்திமா நாயகியும் என்றார்கள் அருள் நபி ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
- قال رسول اللّه {صلى الله عليه وآله}: {المَهْدِيِ مِنْ عِتْرَتي مِنْ وُلدِ فاطِمَة}
மஹ்தீ அலைஹி வஸல்லம் என் குடும்பத்தினர், பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின்
( வழியிலிருந்து)
பிறப்பார் என ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
عَنْ فاطِمَةَ الزَّهْراءِ(علیها السلام) قالَتْ: قالَ لي رَسُولُ اللهِ(صلى الله علیه وآله وسلم) یا فاطِمَةُ مَنْ صَلّى عَلَیكِ غَفَرَ اللهُ لَهُ وَ أَلْحَقَهُ بي حَیثُ كُنْتُ مِنَ الْجَنَّةِ.
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்.
என்னிடத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
பாத்திமா! உன் மீது யார் ஸலவாத்துச் சொல்கிறாறோ, அவருடைய பாவம் மன்னிக்கப்படும்.
( அந்த ஸலவாத்தின் காரணமாக) சுவர்க்கத்தில் எந்த நிலையில் நான் இருந்தாலும், அவரை அல்லாஹ் என்னிடத்தில் சேர்ப்பான். என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
_ و قال ( صلى الله عليه و آله ) : " يا فاطمة إنّ اللّه يغضب لغضبك ويرضى لرضاك
யா பாத்திமா! நீர் கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுகிறான்.
நீர் பொருந்திக் கொண்டால் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
_ أن النبي ( صلى الله عليه و آله ) قال : " يا فاطمة ألا ترضين أن تكوني سيّدة نساء العالمين ، و سيّدة نساء هذه الأُمّة ، و سيدة نساء المؤمنين "
யா பாத்திமா! முஃமின் பெண்களுக்கு தலைவியாக இருப்பதையும், இந்த உம்மத்துடைய பெண்களுக்கு தலைவியாக இருப்பதையும். அகிலத்தாரின் அனைத்துப் பெண்களுக்கும் தலைவியாக இருப்பதை நீங்கள் பொருந்திக் கொள்ளவில்லையா? என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கேட்டார்கள்.
وروى البخاري عن أبي الوليد: أن رسول الله صلى الله عليه وآله قال: فاطمة بضعة مني من آذاها فقد آذاني.
அபீ வலீத் அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.
பாத்திமா! என் சதைத்துண்டு.
யார் அவரை நோவினை செய்வாரோ, நிச்சயமாக அவர் என்னை நோவினை செய்தவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
( நூல் : புகாரி )
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {كُنْتُ إذا اشْتَقْتُ إِلى رائِحَةِ الجنَّةِ شَمَمْتُ رَقَبَةَ فاطِمَة}
சுவர்க்கத்தின் நறுமணத்தை நான் ஆசை கொண்டால், பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கழுத்தை நான் நுகர்ந்து கொள்வேன் என அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {إذا إشْتَقْتُ إلى ثِمارِ الجنَّةِ قَبَّلتُ فاطِمَة}
சுவர்க்கத்தின் பழங்களை நான் ஆசை கொண்டால் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை முத்தமிடுவேன். என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {كُلُّ بَنِي أُمّ يَنْتَمونَ إِلى عُصْبَةٍ، إِلاّ وُلدَ فاطِمَة}
ஒவ்வொரு தாயின் பிள்ளைகளும் பாவத்தின் பக்கம் சேரும்.
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா பிள்ளைகளை தவிர! என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
قال رســـول اللّه {صلى الله عليه وآله}: {إنّ اللّهَ عَزَّوَجَلَّ فَطـــَمَ ابْنَتِي قال رســـول اللّه {صلى الله عليه وآله}: {إنّ اللّهَ عَزَّوَجَلَّ فَطـــَمَ ابْنَتِي فاطِمَـــة وَوُلدَهـــا وَمَنْ أَحَبًّهُمْ مِنَ النّارِ فَلِذلِكَ سُمّيَتْ فاطِمَة وَوُلدَهـــا وَمَنْ أَحَبًّهُمْ مِنَ النّارِ فَلِذلِكَ سُمّيَتْ فاطِمَة
நிச்சயமாக அல்லாஹ்! என் மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பாதுகாத்தான்
அவரின் பிள்ளைகளையும் பாதுகாத்தான்.
அவரை யார் நேசம் கொண்டாரோ, அவரையும் நரக வேதனையிலிருந்து பாதுகாத்தான்.
அதனால் பாத்திமா என்ற பெயர் அவர்களுக்கு இடப்பட்டது என மாநபி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة خُلِقَتْ حورِيَّةٌ فِيْ صورة إنسيّة)
மனித வடிவத்தில் தேவதையாக) பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா படைக்கப்பட்டார்கள் என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
- قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة أَحَبُّ إِليَّ مِنْكَ يا عَلِيّ وَأَنْتَ أَعَزُّ عَلَيَّ مِنْها
அலியே! உங்களை விட பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எனக்கு மிகப்பிரியமானவர்.
அவரை விட என்னிடத்தில் நீங்கள் கண்ணியமானவர் என முஹம்மது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة لَيْسَتْ كَنِساءِ الآدَميّين
ஆதமுடைய பெண்களைப் போல் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா இல்லை என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
- قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة إِنّ اللّهَ غَيْرُ مُعَذِّبِكِ وَلا أَحَدٍ مِنْ وُلْدِكِ}
பாத்திமாவே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கும், உம்முடைய பிள்ளைகளுக்கும் வேதனை தர மாட்டான் என மாநபி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.
- قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة بَهْجَةُ قَلْبِي وَابْناها ثَمْرَةُ فُؤادِي
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா என் மண மகிழ்ச்சி!
அவரின் பிள்ளைகள் பலன் தரும் பழம் என்றார்கள் முத்து முஹம்மது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
قال رسول اللّه {صلى الله عليه وآله}: {فاطِمَة بَضْعَةٌ مِنّي وَهِيَ قَلْبِيْ وَهِيَ روُحِي التي بَيْنَ جَنْبِيّ
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா என் சதைத்துண்டு,
என் அருகிலுள்ள உள்ளமும் அவர்தான்.
என் உயிரும் அவர்தான் என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
اً عن عائشة بنت طلحة عن عائشة قالت: ما رأيت أحداً أشبه كلاماً وحديثاً برسول الله صلى الله عليه وآله من فاطمة، كانت إذا دخلت عليه رحّب بها وقبَّل يديها وأجلسها في مجلسه، فإذا دخل عليها قامت إليه فرحبَّت به وقبّلت يديه
பாத்திமா நாயகி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டிற்கு வந்தால், ( அன்புடன்) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவேற்று,
கைகளில் முத்தமிட்டு,
தாங்கள் அமரும் இடத்தில்
அமரச் செய்வார்கள்.
ரஸுல் ஸல்லல்லாஹு அவர்கள் பாத்திமா நாயகி வீட்டிற்கு சென்றால்,
பாத்திமா நாயகி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரவேற்று, கைகளில் முத்தமிட்டு,
தாங்கள் அமரும் இடத்தில் அமரச் செய்வார்கள்
என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
கருத்துரையிடுக